இனி ஆயுளும் திருடப்படும். கொஞ்சம் உஷாரா இருந்துக்குங்க மக்களே - #DesignerBaby பரிதாபங்கள்!

அடுத்த இருபது ஆண்டுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப டிசைன் செய்து பெற்றுக் கொள்ளலாம், என்ன பாலினம், அவர்களது அறிவு திறன், இசை ஆர்வம் என எதையும் தேர்வு செய்யலாம்.

By Staff

வரும் இருபது - நாற்பது ஆண்டுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பாலினம், அறிவுத்திறன், இசை ஆர்வம், நோய் அபாயம் அறிந்து அதற்கு ஏற்ப கருப்பையில் கருமுட்டைகள் செலுத்தப்படலாம் என்றும், குழந்தைகள் பெற்றெடுக்க இயலும் என்றும் ஸ்டாண்டர்ட் பல்கலைகழக பேராசிரியர் ஹென்றி க்ரீலி கூறியுள்ளார். இவர் ஸ்டாண்டர்ட் பல்கலைகழகத்தில் பயோ எதிக்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

In Next 20 Years, You Can Design Your Own Baby and Its Interest!

Cover Image Source: freerads

ஹென்றி க்ரீலி தி என்ட் ஆப் செக்ஸ் அண்ட் ஃபியுச்சர் ஆப் ஹியூமன் பிரோடக்ஷன் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். டிசைனர் குழந்தைகள் குறித்து க்ரீலி கூறுகையில், தற்போது செயற்கை முறையில் கருத்தரிக்கும் ஐவிஎப் முறை கையாளப்பட்டு வருகிறது. இதில் கருவில் விந்து செயற்கையாக இணையூட்ட ப்படுகிறது. இதன் அடுத்த நிலையாக கரு இணைப்பில் ஜெனிட்டிக் என்ஜினியர்டு முறை கொண்டுவரப்படும். இதில் சில தனித்துவ பண்புக் கூற்றுகள் கொண்ட குழந்தையை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இப்படியான அறிவியல் முறைகளுக்கு யு.கேவில் சட்டவிரோதமான செயல் என்று கூறி தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீலியை தவிர...

க்ரீலியை தவிர...

பேராசிரியர் க்ரீலி மட்டுமே இன்னும் இருபது வருடங்களில் டிசைனர் குழந்தைகள் வர வாய்ப்புகள் உண்டு என கூறுகிறார். அதே ஸ்டாண்டர்ட் பல்கலைகழகத்தில் ப்ரீனாட்டல் ஜெனிட்டிக் ஸ்க்ரீனிங் ஆய்வு செய்து வரும் டாக்டர். லூவான்னே ஹட்ஜின்ஸ் வெகு சில பெற்றோர்களை தவிர மற்ற அனைவரும் தங்கள் குழந்தைகளின் விதியை கடவுள் கைகளில் விட்டுவிடவே விரும்புகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Image Source:geneticliteracyproject

கருவள மையம்!

கருவள மையம்!

நியூயார்க்கின் ஃபெர்டிலிட்டி செண்டர் பல்கலைகழகத்தில் பணிபுரிந்து வரும் டாக்டர் ஜேம்ஸ் க்ரிபோ என்பவர், கடந்த 1988ம் ஆண்டு முதல் ஐவிஎப் முறையை செய்து வருகிறார். இவர், தன்னிடம் வந்த ஒரு பெற்றோரும் இதுநாள் வரை தனக்கு டிசைனர் குழந்தை வேண்டும் என்று அணுகியது எல்லை என்று அறிவித்துள்ளார்.

விரும்பலாம்...

விரும்பலாம்...

ஆனால், ஹென்றி க்ரீலி, நிறைய பெற்றோர் தங்கள் குழந்தை அறிவார்ந்தும், உடல் வலிமையோடும்பிறக்க வேண்டும் என்றும் விரும்பலாம். மேலும், அவர்கள் தங்கள் குழந்தைக்கு எந்த நோயும் தொற்றிவிடக் கூடாது என்றும் கருதலாம் என்று தான் சந்தேகிப்பதாக கூறுகிறார். அல்சைமர் போன்ற நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீதான ஆரோக்கியத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

விமர்சகர்கள்!

விமர்சகர்கள்!

மேலும், ஆய்வாளர்கள் ஒருபுறம் இப்படியான கருத்துக்கள் வெளிப்படுத்தி வர. டிசைனர் குழந்தைகள் குறித்து விமர்சகர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

டிசைனர் குழந்தைகள் என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமே உரிய வாய்ப்பாக இருக்கும். அவர்களால் மட்டுமே இந்த ஸ்க்ரீனிங் செய்து அவர்களை குழந்தை எப்படி பிறக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ள முடியும்.

ஏன் எதிர்காலத்தில் இன்ஷியூரன்ஸ் செய்பவர்களில் கூட ஜெனிடிக் செலக்ஷன் செல்லாதவர்கள் புறக்கணிக்கப்படலாம். அதற்கு காரணமாக.. அவர்களுக்கு நோய் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படலாம் என்று கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

நன்மை தீமை!

நன்மை தீமை!

மரபணு சார்ந்த நோய்கள் குழந்தைகளுக்கு தொடர்வதை தவிர்க்க இயலும்

பரம்பரை நோய் தொற்று தவிர்க்க இயலும்.

ஆரோக்கியமான வாழ்க்கை அமையும்

வாழ்நாள் அதிகரிக்கும்

சமூகத்தில் தீய மாற்றம்

மரபணுக்கள் சேதமடையலாம்

குழந்தையின் தேர்வுகள் ஒருதலைப்பட்சமானதாக அமையும்,

மரபணுக்கள் பர்பெக்டாக இருக்காது.

தனித்துவம் இருக்காது

பணக்காரர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

க்ரீலியின் ஆய்வு...

க்ரீலியின் ஆய்வு...

டிசைனர் குழந்தைகள் கூற்று ஒருபுறம் இருக்கையில், பேராசிரியர் ஹென்றி க்ரீலி சாதாரண செல்களை கருமுட்டை மற்றும் விந்தணுவாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு இதுநாள் வரையிலும் எலியின் மீது மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. க்ரீலி ஆய்வு செய்து வரும் இந்த தொழில்நுட்பமானது கருவளம் இல்லாத தம்பதிகளுக்கு அவர்களது செல்கள் கொண்டு கருவுருவாக்க உதவும் என்று கூறுகிறார்.

கலிபோர்னியா!

கலிபோர்னியா!

கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் அமண்டேர் கிளார்க் என்பவர், க்ரீலியின் இந்த ஆய்வானது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் நபர்கள் தாய்மை அல்லது தந்தை ஸ்தானம் அடைய உதவும் என்று கருதுவதாக கருத்து தெரிவித்துள்ளார். கீமோதெரபி எடுத்துக் கொண்டால் ஆண்மை மற்றும் கருவளம் குறைபாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள்!

உலக நாடுகள்!

யு.கே, யு.எஸ், சீனா போன்ற நாடுகள் கடந்த 2015 - 2016ம் ஆண்டுகளில் ஜெனிடிக் எடிட்டிங் குறித்த ஆய்வுகளில் இறங்கின. ஆனால், இது தற்போதைக்கு தேவையில்லை என்றும், இது மனிதர்கள் மீது பரிசோதனை செய்யும் அளவிற்கு தற்போது சரியான நிலையை எட்டவில்லை என்றும் கருத்துக்கள் வெளியானதை கொண்டு இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன.

ஒரு நாள்...

ஒரு நாள்...

எந்த ஆய்வாளரும் யுனெஸ்கோ சொல்கிறது, ஐநா சொல்கிறது என்ற காரணத்தால் தங்கள் ஆய்வை முற்றிலும் நிறுத்துவதில்லை. பொதுவெளியில் நிறுத்தப்படும் பல ஆய்வுகள், தனிப்பட்ட முறையில் ஆய்வாளர்களால் பரிசோதனை செய்யப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன. ஜெனிட்டிக் எடிட்டிங் அல்லது டிசைனர் குழந்தைகள் என்பது வருங்காலத்தில் யார் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், யார் நிறைய ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஒரு கருவியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அழிவு!

அழிவு!

மனிதன் ஒருவன் மட்டுமே மரணம் இல்லா வாழ்வை தேடிக் கொண்டு பயணித்து வருகிறான். இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனித உடலில் எளிதாக நோய்வாய்ப்படும், செயலிழக்கம் உறுப்புகளை மட்டும் செயற்கையாக உருவாக்கி மரணத்தை வெல்ல முடியுமா என்ற ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹென்றி க்ரீலி கூறுவது போல இன்னும் இருபது வருடங்களில் இல்லை எனிலும் அடுத்த நூற்றாண்டில் மனிதன் மரணத்தை வெல்லும் தொழில்நுட்பத்துடன் களம் காண்பான் என்பது சந்தேகமில்லை.

மரணத்தை வென்றாலும், அழிவை வெல்ல முடியாது என்பதை மனிதன் இன்னும் உணரவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion