Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
படத்தில் காட்டும் முத்திரையை நீங்கள் செய்தால், உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்னு தெரியுமா...?
நம்மில் பலருக்கு பல விதமான மூட நம்பிக்கைகள் இன்றளவும் இருந்து கொண்டே இருக்கிறது. மூட நம்பிக்கைகள் பல வகையில் நமது உயிருக்கே கூட பேராபத்தை தந்து விடும். மூட நம்பிக்கைகள் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது தான். என்றாலும், இவற்றில் ஒரு சில நன்மையையும் தருகிறது.

அவை அறிவியல் பூர்வமான செயலாக இருப்பதால் மக்களுக்கு அவை பயனாக உள்ளது. இதை போன்ற ஒன்று தான், இந்த பதிவில் கூறப்படும் அறிவியல் பூர்வ தகவலும். நீங்கள் உங்களது கைகளை ஒரு சில முத்திரைகளுடன் வைத்திருந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். வாங்க, இந்த மாயாஜாலங்களை தெரிந்து கொள்வோம்.

ஆழ்ந்த அறிவியல்..!
இப்போதெல்லாம் எதை பற்றி பேசினாலும், உன்னுடன் இதற்கான அறிவியல் பூர்வமான சான்று இருக்கிறதா..? என்றே கேட்கின்றனர். அந்த அளவிற்கு அறிவியல் நமது வாழ்வில் பின்னி பிணைந்துள்ளது. கைகளின் முத்திரையை வைத்தே உங்களின் நீண்ட நாள் பிரச்சினைகளை நாம் எளிதில் விடுபட்டு விடலாம்.

ஒரு விறல் புரட்சி..!
இப்போது மிகவும் ட்ரெண்டாகி உள்ள ஒரு விஷயம், "ஒரு விரல் புரட்சி" தான். பல சர்ச்சைக்குள்ளான இந்த ஆள் காட்டி விரலுக்கென்று தனி தன்மை உள்ளதாம். உங்களின் வாழ்க்கையில் ஏதேனும் தோல்வி மூலம் மன கஷ்டங்கள் ஏற்பட்டால் இந்த ஆள் காட்டி விரலை மெல்ல மசாஜ் போன்று 5 நிமிடம் செய்யுங்கள். இவை உங்களுக்கான தீர்வை தரும்.

நடு விரல்
தவறான புரிதலுக்கான ஒரு விரலாக இந்த நடு விரல் மாறி விட்டது. ஆனால், உண்மையில் இதன் மகத்துவம் தனி சிறப்பு பெற்றது. உங்களுக்கு திடீரென்று சோர்வு அல்லது, வெறுப்பு, அடிக்கடி கோபம் போன்றவை ஏற்பட்டால் நடு விரலை மென்மையாக மசாஜ் கொடுங்கள். இவை உங்களின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து அமைதியையும், சுறுசுறுப்பையும் தரும்.

மோதிர விரல்
ஆணும் பெண்ணும் ஒன்றாக இணைவதை குறிக்கும் வகையில் இந்த மோதிர விரல் விளங்குகிறது. பலருக்கு இருக்கும் எதிர்மறையான (Negative) எண்ணங்களை விரட்டி அடிக்க ஒரு அருமையான வைத்தியமாக உள்ளது இந்த மோதிர விறல். வெறும் 5 நிமிடம் இந்த விரலை பிடித்து கொண்டு இதமான மசாஜ் கொடுத்தால் மனதின் சோக நிலை, தவறான எண்ணங்கள் நீங்கி விடும்.

சுண்டு விரல்
அதிக பேருக்கு பிடித்தமான ஒரு விறல் தான் இந்த சுண்டு விரல். உங்களுக்கு மன அழுத்தம், தடுமாற்றம், தாழ்வு மனப்பான்மை போன்ற போன்ற பிரச்சினைகள் இருந்தால் தாராளமாக சுண்டு விரலை மசாஜ் செய்யலாம். இதனால் உங்களின் அனைத்து வித பிரச்சினைகளும் முற்று பெறும்.

கட்டை விரல்
மிகவும் பலம் வாய்ந்த விரலாக கருதப்படும் இந்த விரலின் மகிமை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு அடிக்கடி நரம்பு வலி, தலைவலி, பயம், தயக்கம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் மெல்லமாக உங்களின் கட்டைவிரலில் மசாஜ் அல்லது மேலும் கீழுமாக இழுத்து விடுங்கள். இவை உடனடி நிவாரணத்தை தர கூடியது.

கை கூப்பிய அழுத்தம்
பொதுவாக நாம் வணக்கம் சொல்லும்போதும், வழிபாடு செய்யும் போதும் இரு கைகளை ஒன்றாக கூப்பி வணங்குவோம். இந்த நிலையின் மகத்துவம் என்னெவென்று உங்களுக்கு தெரியுமா..? கையை இறுக்கமாக கூப்பிடும் போது ரத்த ஓட்டம் சீரடைந்து கூர்ந்த கவனம் உங்களுக்கு கிடைக்கிறதாம்.

கை பாதம்களிலும் மந்திரம்..!
அடிக்கடி மன அழுத்தம், மலச்சிக்கல், வாந்தி போன்ற பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தால் அதற்கு விடையை தருகிறது இந்த வைத்தியம். ஒரு கையை கொண்டு இன்னொரு கையின் உட்பகுதியில் மெல்லமாக அழுத்தம் கொடுக்கவும். இவ்வாறு செய்யும் போது மூன்று முறை மூச்சை இழுத்து வெளியே விடவும். இந்த முத்திரையை மீண்டும் அடுத்த கையிலும் செய்யவும்.

சூரிய முத்திரை
இது பலரால் போற்றப்படும் ஒரு முத்திரையாக கூறப்படுகிறது. செரிமான பிரச்சினை, உடலின் தட்பவெப்பத்தை சீராக வைத்து கொள்ளுதல், பசியின்மை ஆகிய பிரச்சினைக்கு இந்த முத்திரை தீர்வை தருகிறது. மேலும், உடலின் செயல்படை சுறுசுறுப்பாக வைக்கவும் இது உதவுகிறது.

தீர்வை தரும் விரல்கள்..!
மேற்சொன்ன முத்திரைகளையும், பயிற்சிகளையும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் உடல் ஆரோக்கியம் பல மடங்காக உயரும். மேலும், சின்ன சின்ன பிரச்சினைக்காக மாத்திரைகளை விழுங்கவும் தேவையில்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications