For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை, அனைத்திற்கும் உதவும் ஆலமரம்..!

By Haripriya
|

எந்த ஒரு ஊராக இருந்தாலும் மிக பழமை வாய்ந்த ஒரு விஷயம் இருக்கத்தான் செய்யும். அது கோவிலாக இருக்கலாம், பிரபலமான இடமாக இருக்கலாம், கோட்டையாக இருக்கலாம்... இப்படி பழமையிலே பல வகையாக ஒவ்வொரு ஊரிலும் இருக்கும். அந்த வகையில் மரங்களும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும். மரத்தை தெய்வமாக கருதும் மக்களும் இங்கு உண்டு. அதனை சாதாரணமாக எண்ணும் மக்களும் உண்டு. இவற்றில் ஒரு சிறப்பு வகை இருக்கிறார்கள். மரங்களை மருத்துவமாக பார்கின்றவர்களும் இங்குதான் இருக்கின்றனர்.

 Health Benefits Of Banyan Tree

பெரும்பாலான மரங்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கும். இந்த பதிவில் ஆல மரம் எவ்வாறு சர்க்கரை நோய் முதல் பிறப்புறுப்பு தொற்றுகள், என அனைத்திற்கும் உதவுகிறது என்பதை பற்றி முழுமையாக அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழமை பெற்ற மரம்..!

பழமை பெற்ற மரம்..!

மற்ற மரங்களை காட்டிலும் ஆலமரத்திற்கென்றே ஒரு சிறப்பு கதைகள் நம் மக்களிடம் எப்போதும் இருக்க தான் செய்யும். பல ஊர்களில் மிக பெரிய அடர்ந்த மரமாகவும், கம்பீரத்துடன் இருக்கும் மரமாகவும் இதனை கருதுவார்கள். பெரும்பாலும் இதன் மருத்துவ தன்மையை பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

எதிர்ப்பு சக்திக்கு...

எதிர்ப்பு சக்திக்கு...

உடலில் எல்லா வகையான நோய் கிருமிகள் வர முக்கிய பங்காக இருப்பது எதிர்ப்பு சக்தி குறைபாடே. உடலில் அதிக எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் அது நோய்களின் வாசலை திறக்க கூடும். இந்த ஆலமரம் வெள்ளை ரத்த அணுக்களை உற்சாகம் கொடுத்து நோய் கிருமிகளை அழிக்கும்.

பிறப்புறுப்பு தொற்றுகள்...

பிறப்புறுப்பு தொற்றுகள்...

தன் இணையுடன் உறவு கொள்ளும் போது சரியான பாதுகாப்பு சாதனமின்றி செயல்பட்டால் பல வகையான நோய் தொற்றுகள் ஏற்பட கூடும். ஆலமர பட்டைகள் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. பிறப்புறுப்பில்,தொற்றுகள் இருக்க கூடிய இடத்தில ஆலமர பட்டைகள் அல்லது இலைகளை உலர வைக்கவும். அடுத்து இவற்றை நீரில் கொதிக்க விட்டு, அந்த நீரை பிறப்பிறப்பு பகுதிகளில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

பற்களின் உறுதிக்கு...

பற்களின் உறுதிக்கு...

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி... நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி..."

இந்த பழமையான வாசகங்களை நாம் பாட புத்தகங்களில் படித்திருப்போம். இவை முற்றிலும் உண்மையே. ஆலமரமானது பற்களின் நலனுக்கும் அதிகம் உதவுகிறது. ஈறுகளில் ரத்தம் வடிதல், பற்சிதைவு, பல் ஆடுதல் போன்றவற்றை குணப்படுத்தும். மேலும், வாய் துர்நாற்றத்தையும் இது போக்கும்.

சர்க்கரை நோயிற்கு கூட...

சர்க்கரை நோயிற்கு கூட...

சர்க்கரை நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களுக்கென்றே, ஆலமர வேர்கள் இருக்கிறது. இவை சர்க்கரையின் அளவை உடலில் சீரான அளவில் வைத்து கொள்கிறதாம். மேலும் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி உடல் நலனை பாதுகாக்கும்.

மன அழுத்தம் பறந்து போக...

மன அழுத்தம் பறந்து போக...

இன்று பலரும் அதிகமான உளவியல் ரீதியான நோய்களால் அவதிப்பட்டு வருகின்றோம். அவற்றில் மிக முக்கியமாக கருதப்படுவது மன நோய் தான். இதற்கு மூல காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். ஆலமரத்தின் இலைகளை அரைத்து, சாறு போல குடித்து வந்தால் இந்த தொல்லை குணமாகுமாம்.

கொலஸ்டரோலை குறைக்க...

கொலஸ்டரோலை குறைக்க...

நாம் தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை சாப்பிடுவதாலையே உடல் பருமன் கூடுகிறது. இதற்கு முக்கிய காரணம் கொலெஸ்ட்ரோல் அளவுதான். கிடைக்கும் அத்தனை உணவுகளையும் வயிற்றுக்குள் போட்டு கொண்டே இருந்தால் அது நிச்சயம் பல்வேறு பிரச்சினைகளை உடலுக்கு தரும். இதனை சரி செய்ய, ஆலமர இலைகள் உதவுகிறது.

வீக்கத்தை குணப்படுத்த...

வீக்கத்தை குணப்படுத்த...

சிலருக்கு 20 படி ஏறினாலே கால்களின் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டு விடும். இப்படி கீல்வாதம், மூட்டு பிரச்சினை, கை- கால் வலி உள்ளவர்களுக்கு இந்த ஆலமரம் ஒரு சிறந்த தீர்வு. ஆலமர இலைகள் அல்லது பட்டைகளை வீக்கம் உள்ள இடத்தில் அரைத்து தடவி வந்தால் விரைவில் நலம் பெறலாம்.

கிருமி நாசினி...

கிருமி நாசினி...

ஒரு சில மரங்களுக்கு மட்டுமே கிருமி நாசினி தன்மை இருக்கும். அந்த வகையில் ஆலமரமும் முதன்மையானதாக கருதப்படுகிறது. ஆலமரத்தின் மருத்துவ குணமும் சற்றே அதிகம்தான். இவை Anti-bacterial மற்றும் anti-fungal தன்மையை கொண்டது என ஆய்வுகள் சொல்கிறது.

சிறுநீர் பிரச்சினைக்கு...

சிறுநீர் பிரச்சினைக்கு...

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் பல வித மாத்திரைகளை சாப்பிட்டு மறுபடியும் அதே பிரச்சினையை அதிகம் உருவாக்கி விடுவார். சிறுநீர் பிரச்சினைக்கு, நன்கு அரைத்த ஆலமர பட்டை மற்றும் சிறிது சர்க்கரை எடுத்து கொண்டு நீரில் கலக்கி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் விரைவிலேயே நலம் பெறலாம்.

அரிப்புகளை சரி செய்ய...

அரிப்புகளை சரி செய்ய...

உடலில் அரிப்புகள் அதிகம் ஏற்பட்டால் அதற்கு சிறந்த தீர்வாக ஆலமர இலைகள் இருக்கும். அரை கிலோ இலைகளை 4 லிட்டர் நீரில் இரவு ஊற வைத்து கொள்ளவும். பின் அடுத்த நாள், இதனை 1 லிட்டர் அளவு வரும் வரை கொதிக்க வைத்து கொள்ளவும். பிறகு இந்த நீருடன் அரை லிட்டர் கடுகு எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு எடுத்து, அரிப்புகளில் தடவி வந்தால் குணமாகும்.

வயிற்று போக்கு...

வயிற்று போக்கு...

தீராத வயிற்று போக்கால் அவதிப்படுவோர் இந்த சிறப்பு மரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு சில தளிர் ஆல இலைகளை எடுத்து கொண்டு, அவற்றை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் நாள்பட்ட வயிற்று போக்கு குணம் பெறும்.

இந்த குறிப்புகளை செய்யும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Banyan Tree

Different parts of the banyan tree, such as latex, leaf buds, barks and even fruits also have tremendous benefits on health, skin and hair.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more