Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்கள் காதலி (அ) மனைவி இந்த மூடநம்பிக்கைகளை செய்வதால் மரணம் கூட நேரலாம்..!
இந்தியா- பலவித கலாசாரத்திற்கு பேர்போன நாடு. இங்குள்ள ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாடியும் ஒருவித அரசியலும், பலவித ஆளுமைகளும் இருக்கத்தான் செய்யும். இது இன்று நேற்று வந்த பழக்கங்கள் அல்ல. பல ஆயிரம் வருடமாக இதே பழக்க வழக்கங்கள் தான் இங்குள்ளவர்களின் ரத்தத்தில் ஊறி போய்யுள்ளது.

குறிப்பாக பெண்கள் மீது செல்லத்தப்படும் பலவித மூட நம்பிக்கைகள் எத்தகைய விளைவை, அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் என்பதை கண்டு கொள்ளாத உயிர்களாக இருந்து வருகின்றோம். உள்ளாடை பற்றிய மூட நம்பிக்கை முதல் மாதவிடாய் பற்றிய மூட நம்பிக்கை வரை இதே தான் தொடர்கிறது. இது போன்ற சடங்கு என்கிற பெயரில் செய்கின்ற சில பல செயல்கள் பெண்களின் மரணத்திற்கே காரணமாக உள்ளதாம். வாங்க, அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பின்னி பிணைக்கப்பட்டுள்ளதா..?
ஆசியா, ஐரோப்பியா போன்ற கண்டங்களில் பலவித மூட நம்பிக்கைகளும், சடங்குகளும் பெண்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது. இவை பல நுற்றாண்டுகளாக தொடர்கின்ற ஒரு கலாச்சாரமாகவே மாறியுள்ளது.
பெண்களே இவை ஆபத்து என்பதை அறியாமல் அவர்களும் செய்து வருகின்றனர். இங்கு, பெண்களும் சடங்குகளும் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

பிறப்புறுப்பில் சோப்பா..?
பெண்கள் மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் உருவானது தான் இந்த தினசரி பழக்கம். பெண்களின் பிறப்புறுப்பு சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் அங்கு சோப்பை பயன்படுத்துவார்கள்.
இந்த பழக்கம் வஜைனல் பகுதியில் வறட்சி தன்மையை ஏற்படுத்தி நோய் தொற்றுக்களை உண்டாக்கும். இதனால் பிறப்புறுப்பு பெரிதும் பாதிப்படையும்.

உடலுறவு கொள்ள கூடாது..!
பல ஆண்டுகளாக இந்த மூட நம்பிக்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது மாதவிடாய் காலத்தின் போது பெண் உடலுறவை பற்றி யோசிக்கவே கூடாது என்பது.
உண்மையென்னவெனில், மாதவிடாயின் போது அந்த பெண் விருப்பப்பட்டால் அவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபடலாம் என்பதே.

உள்ளாடை பிரச்சினை..!
பல பெண்களின் வீடுகளில் இந்த பிரச்சினை உள்ளது. தூங்கும் போது உள்ளாடை அணிந்து கொண்டு தூங்க வேண்டும் என பலரும் வற்புறுத்துகிறார்கள்.
ஆனால், தூங்கும் போது, உள்ளாடை இல்லாமல் தான் தூங்க வேண்டும். உள்ளடையுடன் தூங்கினால் மார்பக திசுக்கள் பாதிக்கப்பட்டு உங்கள் மனைவி அல்லது காதலிக்கு பலவித பிரச்சினைகள் வர கூடும்.

மாதவிடாயின் போது குளியலா..?
பெண்கள் மாதவிடாய் காலங்களில் தலைக்கு குளிக்க சொல்லும் மூட பழக்கம் சரியானது அல்ல. இதனால் தீட்டு கழியும் என மிக தவறான புரிதலை மக்கள் மனதில் கொண்டுள்ளனர்.
மாதவிடாயின் போது தலைக்கு குளிக்க வேண்டியதில்லை. மாறாக வெது வெதுப்பான சூடு நீர் குளியலை விருப்பப்பட்டால் உடலுக்கு மட்டும் எடுத்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு ஒன்று மட்டுமா..?
முன்பெல்லாம் 1 நாளைக்கு 1 பேட் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற மூட பழக்கம் இருந்தது.
ஆனால், இது பெண்களின் பிறப்புறுப்பை முற்றிலுமாக பாதிக்க கூடிய செயலாகும். எனவே, 5 மணி நேரத்திற்கு 1 பேட் மாற்றும் பழக்கமே சிறந்தது.

கருப்பு உள்ளாடையா..?
பொதுவாகவே உள்ளாடை வாங்கும் போது, அடர்ந்த நிறங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை சூரிய வெப்பத்தை உங்களின் மார்பக பகுதியில் அதிகமாக வாங்கி கொள்ளும். குறிப்பாக வெயில் காலங்களில் கருப்பு நிற உள்ளாடைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இது வேண்டாமே..!
பெண்கள் நேரடியாக தங்களது உடலில் இந்த டியோடரண்ட்களை பயன்படுத்துகிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும்.
இவற்றில் உள்ள அலுமினியம் வியர்வை வருவதை தடை செய்து நச்சுக்களை உள்ளையே தங்க வைத்து விடும். நாளடைவில் இது மார்பக புற்றுநோயை கூட ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இப்படியுமா..!
பல பெண்கள் தங்களது உள்ளாடைகளை வாரத்திற்கு ஒரு முறை தான் துவைக்கிறார்கள். இது தவறான செயலாகும்.
2 அல்லது 3 முறை பயன்படுத்திய உடன் துவைப்பது நல்லது. இல்லையெனில் நோய் கிருமிகளின் தொற்றுகள் உங்களை பாதித்து விடும்.

உங்கள் வாழ்க்கை.. உங்கள் கையில்..!
என்னதான் பலவகையான மூட நம்பிக்கைகள் நம்மை சுற்றி வளைத்திருந்தாலும், அவற்றை பின்பற்றுவதும் கூடாததும் தனி நபரின் விருப்பம். அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத எதையுமே கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், மேற்சொன்ன தவறான மூட பழக்கங்களை பற்றி விழிப்புணர்வை உங்கள் அம்மாவுக்கோ, தோழிக்கோ, காதலிக்கோ, மனைவிக்கோ எடுத்து சொல்வது நல்லது.



Click it and Unblock the Notifications