Latest Updates
-
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
மார்பகங்களில் இப்படி திசுக்கள் இருந்தால் புற்றுநோய் வருமாம்... உடனே செக் பண்ணி பாருங்க...
பெண்கள் மார்பகத்தில் அடர்ந்த திசுக்கள் காணப்பட்டால் மார்பக புற்று நோய் வரும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த மாதிரியான அடர்ந்த மார்பக திசுக்களை மேமோகிராம் மூலம் கண்டற
அடர்ந்த மார்பக திசுக்கள் புற்று நோயை உண்டு பண்ணுமா? தெரிஞ்சுக்க இத படிங்க
பெண்கள் மார்பகத்தில் அடர்ந்த திசுக்கள் காணப்பட்டால் மார்பக புற்று நோய் வரும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இந்த மாதிரியான அடர்ந்த மார்பக திசுக்களை மேமோகிராம் மூலம் கண்டறிய முடியும். இதே மாதிரி நிறைய பரிசோதனை முறைகள் உள்ளன. இந்த மாதிரியான அடர்ந்த மார்பக திசுக்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

அடர்ந்த மார்பக திசுக்கள் என்றால் என்ன?
இந்த திசுக்களை மேமோகிராம் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். எல்லா நேரங்களிலும் இது மாதிரியான திசுக்களை சாதரணமாக எடுத்து விடக் கூடாது.
மார்பகத்தில் உள்ள திசுக்கள் பால் குழாய்கள், பால் திசுக்கள், துணைத் திசுக்கள் (அடர்ந்த மார்பக திசுக்கள்) கொழுப்பு திசுக்கள் (அடர்த்தியற்ற திசுக்கள்) இவற்றை கொண்டு உள்ளது.

அடர்த்தி ஒப்பீடு
மேமோகிராம் இமேஜ் எடுக்கும் போது அடர்ந்த திசுக்கள் கொழுப்பு திசுக்களைக் காட்டிலும் மிகவும் அடர்ந்து காணப்படும். அடர்த்தியற்ற கொழுப்பு திசுக்கள் பார்ப்பதற்கு வெளிப்படையாக கருப்பாக இருக்கும். அடர்ந்த வெள்ளை நிறப் பகுதி அடர்ந்த திசுக்களை காட்டுகிறது. இது வெளிப்படையாக தெரியாது. பார்ப்பதற்கும் தெளிவாக இல்லாமல் சிரமப்படும்.

திசுக் கட்டிகள்
இந்த அடர்ந்த திசுக்கள் அப்படியே கட்டிகளை உருவாக்க ஆரம்பித்து விடும். இப்படி வரும் கட்டிகள் புற்று நோய் கட்டிகளாக கூட இருக்கலாம். ஆனால் எல்லா மார்பக புற்று நோய் கட்டிகளும் ஒரே மாதிரி கிடையாது. கட்டியுள்ள மார்பகம் அடர்ந்த மார்பகம் என்று அர்த்தம் இல்லை. பைபிரோசைடிக் மார்பகம் ஒரு வித்தியாசமான அடர்ந்த மார்பகம் ஆகும்.
இந்த அடர்ந்த திசுக்களை மேமோகிராம் இமேஜ் மூலம் கதிரியக்க ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இதில் அடர்ந்த மற்றும் அடர்த்தியற்ற திசுக்களின் விகிதம், மார்பகத்தின் அடர்த்தி போன்றவை கணக்கிடப்படுகிறது. இதை கொண்டு சில வகைகளாக பிரிக்கின்றனர்.
1.கொழுப்பு திசுக்கள் அடங்கிய மார்பகம்
2.கொஞ்சம் பைபிரோகிளாண்டுலர் அடர்த்தி (கொஞ்சம் அடர்ந்த திசுக்கள் மற்றும் அதிகளவு அடர்த்தியற்ற திசுக்கள் காணப்படுதல்)
3. ஹெட்ரோஜெனியஸ் அடர்த்தி (கொஞ்சம் அடர்த்தியற்ற திசுக்கள் அதிகளவில் அடர்ந்த திசுக்கள் காணப்படுதல்)
4. அதீத அடர்த்தி (மார்பக முழுவதும் கிட்டத்தட்ட அடர்த்தியான திசுக்கள் காணப்படுதல்)
இந்த வகைகளில் நீங்கள் சி மற்றும் டி வகைகளை பெற்று இருந்தால் உங்களுக்கு அடர்ந்த மார்பகம் என்று அர்த்தம்.

விளைவுகள்
சில பெண்களுக்கு இந்த அடர்ந்த மார்பகங்கள் காணப்படுவது ஏன் என்பதற்கு எந்தவொரு மருத்துவ ஆராய்ச்சி தகவல்களும் இல்லை. அடர்ந்த மார்பகங்கள் காணப்படுவது கீழ்க்கண்ட காரணங்களால் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இளவயது
உங்கள் இளவயது வரை மார்பக திசுக்கள் குறைந்த அடர்ந்த திசுக்களை கொண்டிருக்கும். சில பெண்களுக்கு வயதாகும் வரை அடர்ந்த மார்பக திசுக்களை கொண்டிருக்க நேரிடுகிறது.

குறைந்த எடை
குண்டான பெண்களை விட ஒல்லியான பெண்கள் அல்லது குறைந்த கொழுப்புடைய பெண்கள் அடர்ந்த மார்பக திசுக்களை கொண்டுள்ளனர்.

மாதவிடாய் ஹார்மோன் தெரபி
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் அறிகுறிகளை போக்க பல பெண்கள் ஹார்மோன் தெரபி எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு அடர்ந்த மார்பக திசுக்கள் ஏற்படுகின்றன.

ஆபத்தா?
அடர்ந்த மார்பக திசுக்கள் விளைவுகளை ஏற்படுத்துகிறதா?
அடர்ந்த மார்பக திசுக்கள் ஏன் புற்று நோய் கட்டிகளை உருவாக்குகிறது என்பதற்கு எந்தவொரு மருத்துவ சான்றிதழ்களும் இன்றுவரை இல்லை. எனவே இதற்கு பயப்பட தேவையில்லை. அடர்ந்த மார்பக திசுக்களை மேமோகிராம் கொண்டு கண்டறியலாம். இது சாதாரணமாக காணப்படுபவை தான். இருப்பினும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மார்பக பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
எம்ஆர்ஐ ஸ்கீரினிங் பரிசோதனை மூலம் அடர்ந்த திசுக்கள் மார்பக புற்று நோயை ஏற்படுத்துமா என்பதை கண்டறிந்து கொள்ளலாம்.
40 வயதை அடைந்த பெண்கள் கண்டிப்பாக மேமோகிராம் பரிசோதனை யை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இதை வருடத்திற்கு ஒரு முறை என செய்து வருவது நல்லது. இதன் மூலம் மார்பக புற்று நோயை முன்னரே கண்டறிந்து குணப்படுத்தி விட முடியும்.
புற்று நோய் அபாயத்தை உண்டு பண்ணும் மிகவும் அடர்ந்த மார்பக திசுக்களை பழைய மேமோகிராம் மூலம் கண்டறிய இயலாது.

டிஜிட்டல் மேமோகிராம்
ஆனால் டிஜிட்டல் மேமோகிராம் மூலம் புற்று நோய் அபாயத்தை உண்டு பண்ணும் அடர்ந்த திசுக்களை எளிதாக கண்டறிந்து விடலாம். புற்று நோய் அபாயத்தை உண்டு பண்ணும் மிகவும் அடர்ந்த மார்பக திசுக்களை பழைய மேமோகிராம் மூலம் கண்டறிய இயலாது. அதற்காகவே டிஜிட்டல் முறையில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மார்பக அடர்த்தி வயதை பொருத்து மாறுமா?
மார்பக அடர்த்தி பெண்களின் வயதை பொருத்து மாறிக் கொண்டே இருக்கும். வயதான பெண்கள் இளவயது பெண்களை விட குறைந்த அடர்த்தி மார்பகங்களை கொண்டுள்ளனர். அதே மாதிரி மார்பக அடர்த்தி பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போதும் மாறுபடும். பெண்களின் ஹார்மோன்கள் அல்லது ஹார்மோன் தெரபி மார்பக அடர்த்தியை மாற்றுகின்றன. எனவே உங்கள் மார்பக அடர்த்தியில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.இதன் மூலம் மார்பக புற்று நோய் அபாயத்தை தடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications