For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உடம்புக்கு காலை வெயில் நல்லதா?... மாலை வெயில் நல்லதா?...

  By Gnaana
  |

  காலை நேரத்தில், எழுவதே சிரமம், இதில் சூரியனைப் பார்க்கணுமா?, நோ சான்ஸ்! என்று போர்வையை இழுத்துவிட்டுக் கொண்டு, மீண்டும் தூங்கப்போகும் நம்முடைய வருங்காலத் தலைமுறைகள் அவசியம் படிக்க வேண்டிய, முக்கியமான கட்டுரை இது.

  நாள்தோறும் வரும் நவீன கண்டுபிடிப்புகள் எல்லாம் நம்மை மீண்டும் மீண்டும் சோம்பேறி ஆக்குகிறதே தவிர, ஏதாவது உடல் உழைப்பைத் தூண்டுகிறதா? உடல் உழைப்பே இல்லாமல், இருக்கும் இடத்திலேயே மணிக்கணக்கில் மடிக்கணினியிலும், மொபைலிலும் இருப்பதால்தானே, நாம் அதைவிட அதிகநேரத்தை, மருத்துவர் அறையின் முன்பு காத்திருந்து, கழிக்க நேரிடுகிறது?!

  sunlight

  முன்னரெல்லாம், பிள்ளைகள் காலையில் எழுந்து பல் தேய்க்க கொல்லைக்கு சென்று கிணற்றில் கயிற்று வாளியில் தண்ணீர் சேகரித்து, பல் துலக்கிய காலம், கரைந்துவிட்டது.

  இன்று சூரிய ஒளிமிக்க கொல்லைப் புறமும் இல்லை, இயற்கை ஒளி இல்லாத அடுக்கு மாடிகளில், இரவும் பகலும் எந்நேரமும் எரியும் மின்விளக்கின் செயற்கை வெளிச்சம்தான் அவர்கள் காணும் ஒளி! சூரியனைக் காண்பதே அரிதான வாழ்க்கை முறைகளால், இழப்பு யாருக்கு?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சூரிய ஒளி

  சூரிய ஒளி

  வெயிலில் அலையாதே, வியர்வையில் கலர் போயிடும் என்று அச்சமூட்டி வளர்த்த தலைமுறைகள் தான், இன்று உடல்நலம் பாதித்து வாழ்கிறார்கள்.

  இன்றும் திடமாக இருக்கும், வயல்வெளிகளில், அதிகாலையில் மண்வெட்டி பிடித்து உழைத்த கைகள், இன்றைய தலைமுறைகளைப் பார்த்து, வருந்துகின்றன.

  என்ன இருக்கிறது, சூரிய வெயிலில்? ஏன் நாம் காலை நேரத்தில் சூரிய ஒளியில் நடக்க வேண்டும், அல்லது இருக்க வேண்டும்? காரணம் தெரிந்தவர்கள், கடைபிடித்து, நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள்.

  உடல் சுகத்தைப் பெரிதென நினைத்து, காலை நேரத்தை வாழ்வில் இழப்பவர்கள், உடல்நலம் பாதித்து வருந்துகிறார்கள்.

  முன்னோர் சொன்னது எல்லாம், அந்தக் காலத்துக்கு. இந்த விஞ்ஞான யுகத்தில், அதெல்லாம், சுத்த மடத்தனம் என்ற, எல்லாம் தெரிந்த மனநிலையில் இருப்பவர்களின் அறியாமையை நினைத்து, சூரியன் வருந்துமா என்ன? தினமும் அதன் கடமையை அது செய்தே வருகிறது! யார் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், இயற்கையின் இயக்கம் தடைபடுவதில்லை! இழப்பு யாருக்கு?

  என்ன இருக்கிறது காலை வெயிலில்?

  என்ன இருக்கிறது காலை வெயிலில்?

  சூரிய ஒளி சிறந்த கிருமி நாசினி. வெயிலில் உலரும் தானியங்கள் கிருமி நீங்கி, நீண்ட காலம் பயன் தரும். வெயிலில் காயும் துணிகளில் கிருமித்தொற்று நீங்கிவிடும். இன்றும் மருத்துவமனைகளில், படுக்கை விரிப்புகள், துணிகள் எல்லாம் சூரிய வெயிலில் காய்வதை, நாம் கண்டிருப்போம் தானே!.

  சூரிய ஒளியில் இருக்கும் வைட்டமின் D, இயற்கை நமக்கு அளித்த வரம்!

  நம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் Dயைத் தரும் இயற்கை அதிசயம், சூரிய ஒளியாகும். சமச்சீர் உணவின் மூலம் வைட்டமின் Dயைப் பெற முடிந்தாலும், இயற்கை வழியிலான சூரிய ஒளியிலிருந்து கிடைக்குமளவுக்கு இருக்காது என்பதே, நிஜம்.

  காலை சூரிய ஒளியில் இருக்கும் பலன்களை இனி காணலாம். காலை வேளையில் சூரிய ஒளியில் இருக்கும்போது, அதிலிருந்து வைட்டமின் Dயை உடல் பெறுவதோடு மட்டுமல்லாமல், அதன்மூலம், உடல் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாகும் கால்சியத்தையும் அதிகரிக்கிறது. இதன்மூலம், எலும்பு வலுவாகி, தேய்மானம், மூட்டுவாதம், கழுத்து இடுப்பு வலி பாதிப்புகள் குறைகிறது.

  குழந்தைகளை காலை வெயிலில் சற்று நேரம் இருக்க வைப்பதன் மூலம், குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான நோயான ரிக்கெட்ஸ் பாதிப்புகளை விலக்கமுடியும். அதனால்தான், முன்னெல்லாம், கைக்குழந்தைகளை, காலை வெயிலில் சற்று நேரம் இருக்க வைத்தார்கள்.

  வைட்டமின் D சத்து, இதயபாதிப்புகள், இரத்த கொழுப்பு, சரும கேன்சர், நுரையீரல் மற்றும் புரோஸ்டேட் கேன்சர் பாதிப்பிலிருந்து, உடலைக் காக்கக் கூடியதாகும்.

  உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல்

  உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல்

  காலை சூரியக் கதிர்களிலுள்ள வைட்டமின் D, லிம்போசைட்ஸ் எனும் இரத்த வெள்ளையணுக்களின் ஆற்றலை, அதிகரிக்கிறது. வெள்ளையணுக்களே, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்குபவை. இதன்மூலம், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களின் பாதிப்புகளை, உடலிலிருந்து களையும் கவசமாக சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் வைட்டமின் D இருக்கிறது. மேலும், உடல் நோயெதிர்ப்பு அணுக்களே தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் ஆட்டோ இம்யூன் பாதிப்புகளையும் எதிர்த்துக் காக்கிறது.

  மனச்சோர்வு

  மனச்சோர்வு

  காலை வேளைகளில் நடைப்பயிற்சி செய்து வரும்போது, சூரிய ஒளி, முன்தின உடல் சோர்வை நீக்கி, மனதைப் புத்துணர்வாக்கி, உற்சாகமடைய வைக்கிறது. மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்க வைக்கும் ஆற்றலை உடலில் மேம்படுத்துவதன் மூலம், மனச்சோர்வை விரட்டி, அன்றைய நாள் முழுவதற்குமான உற்சாக மனநிலையை, அடைய வைக்கிறது.

  கண்பார்வைத்திறன்

  கண்பார்வைத்திறன்

  நடுத்தரவயதினர் மற்றும் வயதானவர்கள், அதிகாலைநேரத்தில், சற்றுநேரம் கண்களைமூடி, உதயமாகும் சூரியனை நோக்கிவர, வைட்டமின் D சத்து நிரம்பிய சூரிய ஒளியின் ஆற்றல், கண்களின் பார்வையிழப்பு பாதிப்புகளைக் குணமாக்கி, பார்வைத்திறனை அதிகரிக்க வைக்கிறது.

  வளர்சிதை மாற்றம்

  வளர்சிதை மாற்றம்

  காலை வெயிலில் சற்றுநேரம் இருப்பதன்மூலம், உணவின் சத்துக்களை உடலுக்கு அளிக்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வைக்கும். இதன் மூலம், உடலில் அதிகமுள்ள கொழுப்ப கரைந்து, உடல் எடை சீரானஅளவில் குறையும். தினமும் சூரிய ஒளியில் இருக்க, வைட்டமின் Dயால், உடலின் பருமன் குறைய ஆரம்பிக்கும்.

  ரத்த அழுத்தம்

  ரத்த அழுத்தம்

  இரத்த நாளங்களை விரிவாக்கி, இரத்த அடைப்பு மற்றும் பாதிப்புகளைக் களையும் நைட்ரிக் ஆக்சைடை, சூரிய ஒளியின் மூலம் தோல் அடைந்து, உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளிட்ட இதய கோளாறுகளைத் தடுத்து, உடல் ஆரோக்கியத்தை காக்கிறது.

  சரும பராமரிப்பு

  சரும பராமரிப்பு

  தினமும் காலையில் சூரிய ஒளியில் இருப்பதன்மூலம், நாள்பட்ட தோல் வியாதிகளான முகப்பரு, சிரங்கு மற்றும் வடுக்கள் குணமடையும். தோல் வியாதிகள் அணுகாமல் காக்கும். சூரிய ஒளி, உடல் இரத்த ஓட்டத்தை உடலெங்கும் சீராகப் பரவச்செய்து, பிரானவாயு மற்றும் சத்துக்களை உடல் அணுக்களுக்கு முழுமையாக கொண்டுசேர்க்கவைக்கிறது. உடல் நலிந்தோர், கைகால் தோல் பாதிப்புள்ளோர், பாதிப்புள்ள இடங்களில் வெயில் படுமாறு இருந்தபின், பாதிப்புள்ள உடல்பாகத்தில் தேங்காய் எண்ணையைத் தடவி, சற்றுநேரம் நிழலில் இருந்துவர, சரும பாதிப்புகள் நீங்கும்.

  ஆழ்ந்த உறக்கம்

  ஆழ்ந்த உறக்கம்

  உறக்கம் மற்றும் எழுதலுக்கான ஒருநாளின் உடல் இயக்கத்தை, சீராக்கும் தன்மை படைத்தது, சூரிய ஒளி. அதிகாலை எழுந்து, கண்களில் சூரியஒளி படும்போது, உறக்கத்தின் மிச்ச சோர்வைத் தரும் தூக்க ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுத்து, காலை வேளையின் உற்சாகத்தை உடலில் ஏற்படுத்தும். தினமும் அதிகாலை துயில் எழுவதன் மூலம், இரவில் நல்ல சீரான உறக்கத்தை அடையலாம்.

  செரிமான ஆற்றல்

  செரிமான ஆற்றல்

  காலையில் உடலில்படும் சூரிய ஒளி, உடல் உள் உறுப்புகளின் ஆற்றலை மேம்படுத்தி, உடலின் செரிமான ஆற்றலை அதிகரிக்கிறது. இதன்மூலம் வளர்சிதை மாற்றம் இயல்பாகி, உடலின் பசியை சரியாக்குகிறது. நன்றாக பசியெடுத்து சாப்பிடுவதன்மூலம், உடலின் ஆரோக்கியம் வலுவாகும்.

  கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை தகவல்கள். இதமான காலை சூரியஒளியின் வைட்டமின் D சத்து, உடலின் வியாதிகளைப் போக்கும் ஆற்றல்மிக்கது. மனச்சோர்வைப் போக்கி, உடல் ஆரோக்கியத்தையும், மன உற்சாகத்தையும் அதிகரிக்கும் தன்மைமிக்கது.

  சரும பாதிப்புகள்

  சரும பாதிப்புகள்

  நாம் இங்கே காலை சூரியஒளி என்று கூறுவது, காலை ஒன்பது மணிவரை உள்ள சூரியஒளி மட்டுமே. அதற்குப்பின், சூரிய ஒளியில் ஏற்படும் புறஊதாக் கதிர்களின் தாக்கம், சருமத்தைப் பாதிக்கக்கூடும். கவனம் தேவை.

  காலை நேர சூரியஒளி நன்மை தருவதாக இருந்தாலும், பகலில் சுட்டெரிக்கும் சூரியன் நம் கண்களையும் உடலையும் பாதிக்கும் தன்மையுள்ளவை. அந்த நேரங்களில் கண்ணாடி மற்றும் தலைக்கு தொப்பி அணிந்து, வெயிலின் தாக்கத்தலிருந்து தப்பிக்கலாம். வயதானவர்கள், உடல் நலமில்லாதவர்கள் சுட்டெரிக்கும் வெயில் நேரங்களில் வீடுகளில் இருப்பதே, நலமாகும்.

  அதிக நேரம் பகல் வெயிலில் இருக்கும்போது, வியர்க்குரு, வேனற்கட்டிகள் போன்ற சரும பாதிப்புகளும், சரும கேன்சர் போன்றவையும் கூட ஏற்படலாம். தலைமுடி உதிர்தலும் அதிகரிக்கக்கூடும். கடும்வெயிலில் அலைச்சலைத் தவிர்ப்பதே, நன்று.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Best benefits of morning sunlight to our body

  sunlight is a necessity for good health. As the famous health adage goes: everything in moderation. And sunlight is NO exception.
  Story first published: Wednesday, July 25, 2018, 17:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more