Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
எடை குறைப்பிலிருந்து, இதய ஆரோக்கியம் வரை பயன்படும் சுண்டல்
ஏழைகளின் பாதாம் என்றழைக்கப்படும் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் என பல சத்துக்கள் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் உடலை வலிமையடையவும் செய்கிறது. சுண்டலை பற்றி உங்களுக்கு தெரியாத நன்
கோவில் பிரசாதம் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது சுண்டல்தான். சைவ உணவுகளில் அதிகளவு புரோட்டின்கள் கொண்டது சுண்டல்தான். அதனால்தான் இதை " ஏழைகளின் பாதாம் " என்று அழைக்கிறோம். அதுமட்டுமின்றி சுண்டலில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் என பல சத்துக்கள் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் உடலை வலிமையடையவும் செய்கிறது.

சுண்டலின் பயன்களை பற்றி கூறிக்கொண்டே போகலாம். உடல் எடை குறைக்க விரும்புபவர்களில் தொடங்கி ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுமஸ்தாக மாற்ற விரும்புபவர் வரை அனைவரும் முதலில் சாப்பிட வேண்டியது சுண்டல்தான். இத்தனை சிறப்புகளும், சத்துக்களும் உடைய சுண்டலை பற்றி உங்களுக்கு தெரியாத நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

எடை குறைப்பு
உங்கள் உணவில் அதிகளவு பைபர் சேர்த்துக்கொள்வது எடை குறைப்பிற்கு மிகவும் உதவும். அந்த வகையில் சுண்டலில் கரையக்கூடிய மற்றும் கரையாத பைபர் இரண்டுமே நிறைந்துள்ளது. கரையக்கூடிய பைபர் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை ஜெல்லாக வெளியேற்றுகிறது. கரையாத பைபர் மலச்சிக்கல் மற்றும் மற்ற செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. சுண்டல் உங்கள் வயிறை எளிதில் நிறைவை உணரச்செய்யும் எனவே பசியுணர்வு கட்டுப்படுத்தப்படும். வேகவைத்த சுண்டலுடன் தண்ணீர் குடிப்பது உங்கள் பசியை கட்டுப்படுத்தும்.

நோயெதிர்ப்பு சக்தி
சுண்டலில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது இது உங்களுடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் எளிதில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் சுண்டல் நமது உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல செயல்படுகிறது.

இதய ஆரோக்கியம்
சுண்டலில் தனித்துவமாக ஆன்டிஆக்சிடன்ட்கள், ஆந்தோசயனின், டெலிபிண்டின், சியானிடின் மற்றும் பைடோநியூட்ரியன்ட் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த நாளங்களை பாதுகாப்பதுடன் இரத்தத்தில் விஷத்தன்மை அதிகரிக்காமல் பாதுகாக்கின்றன. இதனால் இதயத்தின் ஆரோக்கியம் உறுதிசெய்யபடுகிறது. சுண்டலில் போலேட் மற்றும் மெக்னீசியம் கணிசமான அளவில் உள்ளன. ஃபோலேட் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது, இதனால் தமனிகளின் வீக்கம், மாரடைப்பு, மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் ஏற்படும் தமனிகளின் சுருக்கத்தை குறைக்கின்றன.

கொழுப்பை குறைக்கிறது
சுண்டலில் உள்ள கரையக்கூடிய பைபர் உடலில் உள்ள பித்த அமிலங்களை குறைத்து அவை உடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது, இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. தினமும் 3/4 கப் சுண்டல் சாப்பிடுவது மொத்த கொழுப்புகளின் கிளிசரைடுகளை குறைக்கிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்தல்
சுண்டலில் உள்ள கரையக்கூடிய பைபர் இரத்தம் சர்க்கரை உறிஞ்சுவது மற்றும் வெளியிடுவதை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி குறைவான க்ளெசெமிக் அளவு கொண்ட சுண்டல் மெதுவாக செரிமானம் அடையும் எனவே பசியின்மை கட்டுப்படுத்தப்படும். மேலும் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். தினமும் 1/2 கப் சுண்டல் என தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரே வாரத்தில் உங்கள் சர்க்கரையின் அளவு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

இரும்பு சத்து
இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இது இரத்த சோகையை கட்டுப்படுத்தி ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக இது கர்ப்பிணி பெண்களுக்கும் வளரும் குழந்தைகளுக்கும் அவசியமானது. இரும்பு சத்து நமது ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை உடலின் அனைத்து செல்களுக்கும் கடத்துவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் இரும்பு சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

பெண்களுக்கு அவசியமானது
சபோனின்ஸ் என்று அழைக்கப்படும் ஆன்டிஆக்சிடன்ட்கள் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கிறது மற்றும் மாதவிடாய்க்கு பிந்தைய நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கிறது. வறுத்த சுண்டலுடன் நாட்டு சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து சாப்பிடுவது லுக்கேறியாவில் இருந்து பாதுகாக்கும்.

புற்றுநோய்
கருப்பு சுண்டலில் உள்ள பைபர் பெருங்குடலை அடையும்போது அங்குள்ள பாக்டீரியாக்களால் உடைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அமிலங்களாக மாற்றப்படுகிறது. இந்த அமிலம் பெருங்குடலின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும்.

சிறுநீரக கோளாறு
உங்களுக்கு சிறுநீரக கோளாறுகள் இருந்தால் அதற்கு சிறந்த மருத்துவம் யாதெனில் இரவு சுண்டலை ஊறவைத்து விட்டு அடுத்தநாள் காலை அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உங்களின் சிறுநீரக கோளாறு விரைவில் குணமடையும்.

மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் சுண்டலுடன் வெல்லம் சேர்த்து ஊறவைத்து தாகம் எடுக்கும்போதெல்லாம் அதனை பருகுங்கள். இது மஞ்சள் காமாலையின் பாதிப்புகளை குறைப்பதுடன் வாந்தி ஏற்படுவதையும் குறைக்கும்.

சரும பாதுகாப்பு
சுண்டல் ஆரோக்கியத்திற்கு மட்டும் உதவுவதில்லை, அழகிற்கும் உதவுகிறது. சுண்டலை ஊறவைத்து பின்னர் அதனை உரித்து மாவுபோல அரைத்துக்கொள்ளவும். இதனை சருமம் முழுவதும் தடவி நன்கு காய்ந்தவுடன் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர விரைவில் உங்கள் சருமம் பொலிவு பெறும்.

முடி வளர்ச்சி
கருப்பு சுண்டலில் வைட்டமின் பி6 மற்றும் ஜிங்க் உள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது உங்கள் முடியின் வலிமையை அதிகரிப்பதுடன் அது நீளமாக வளரவும் உதவுகிறது.

முடியின் நிறத்தை பாதுகாக்கிறது
சுண்டலில் புரோட்டின் மற்றும் மக்னீசியம் உள்ளது. மக்னீசியம் முடியின் நிறத்தை பாதுகாக்கிறது அதாவது முடியின் நிறம் கரும்பிலிருந்து பழுப்பு நிறமாக மாறாமல் தடுக்கிறது. இதனை சாப்பிட்டாலும் சரி அல்லது அரைத்து தலையில் தேய்த்து குளித்தாலும் சரி அது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications