Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
நீண்ட காலம் இளமையோடு வாழ வேண்டுமா...? சீமை சாமந்தி டீ போதுமே...!
எவ்வளவுதான் மருந்துகள் வந்தாலும் இயற்கை மூலிகைகள் அளவிற்கு வராது. நமது உணவு முறைகள், கால மாற்றங்கள், மனிதனின் பரிணாம மாற்றங்கள் என அனைத்துமே நீண்ட நாள் மனிதனை இளமையாக வைக்க தவறி விடுகிறது. இளமை என்பது
நம்மில் பலருக்கு நிராசையாய் இருப்பது, நீண்ட நாள் இளமையோடு வாழ்வதே. எவ்வளவுதான் மருந்துகள் வந்தாலும் இயற்கை மூலிகைகள் அளவிற்கு வராது. நமது உணவு முறைகள், கால மாற்றங்கள், மனிதனின் பரிணாம மாற்றங்கள் என அனைத்துமே நீண்ட நாள் மனிதனை இளமையாக வைக்க தவறி விடுகிறது.

இளமை என்பது அனைவரும் விரும்பும் ஒன்றே. எப்போதுமே இளமையாக இருக்க, யார்தான் வேண்டாம் என்று சொல்லவர்கள். இப்படி தீரா மோகம் இளமை மீது நாம் கொண்டிருக்க அதற்கு தீர்வு இல்லாமலா போய்விடும். ஆமாங்க, நீண்ட நாட்கள் இளமையாக இருக்க இந்த சீமை சாமந்தி டீ (Chamomile tea) குடித்தாலே போதும். மேலும் இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

#1 என்றும் இளமை..!
ஆன்டி ஆக்சிடன்ட்ஸை மூட்டை மூட்டையாக இந்த சீமை சாமந்தியில் உள்ளது. இது உங்களின் சருமத்தை எப்போதுமே பொலிவுடன் வைக்கும். சருமம் பாதிப்படைவதை தடுத்து திசுக்களை மென்மையாக வைக்கிறது. மேலும் செல்கள் மீளுருவாக்கம் செய்து, கெட்டியான தசைகளை உருவாக்குகிறது. இதில் உள்ள மூல பொருட்கள் முகத்தின் துளைகளை இருக்க செய்து சுருக்கங்களை போக்கும். இதனால் வயதாகும் தோற்றம் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது.

#2 மன அழுத்தம்
நம்மில் பலருக்கு அதிகம் ஏற்பட கூடிய பிரச்சனைகளுள் ஒன்று இந்த மன அழுத்தம். இதனாலேயே பாதி இளமை போய்விடுகிறது. சீமை சாமந்தி டீயை குடித்தால் உங்களின் நாள்பட்ட தலைவலி, மன பாரம், மன அழுத்தம் எளிதில் குறைந்து விடும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர் இந்த டீயை குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
மேலும் பயம், தயக்கம் போன்றவையும் குணமாகும்.

#3 எதிர்ப்பு சக்தி
வெள்ளை ரத்த அணுக்களை சுறுசுறுப்பாகி நோய் எதிர்ப்பு சக்தியை இது சீராக வைக்கிறது. இதனை பருகினால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுகளால் பாதிக்கப்படாமல் இருக்க முடியும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி உடலில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். எனவே, சீமை சாமந்தி டீயை குடித்தால் அதிக பலம் பெற்றவர்கள் நீங்களே..!

#4 மாதவிடாய் வலி
பெண்களுக்கு பிரச்சனைகளில் மிக பெரியது இந்த மாதவிடாயின் போது ஏற்படும் வலிதான். இந்த வலிகளை குறைக்கவும், எரிச்சல் இல்லாமல் இருக்கவும் இது உதவுகிறது. கர்பப்பையை உறுதிப்படுத்தி சீரான ரத்த போக்கை ஏற்படுத்துகிறது. சீமை சாமந்தி டீ கர்ப்பப்பையில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றையும் குறைக்கும். உதிர போக்கு அதிகமாக உள்ள காலங்களில் இந்த டீயை அருந்தினால் ரத்த போக்கை சீராக்கும்.

#5 மொழு மொழுப்பான சருமம்
நீங்கள் தக்காளியை போல நல்ல மொழு மொழுப்பாக வேண்டும் என்றால் அதற்கு இந்த டீ போதும். முக சருமத்தை பளபளவென மாற்றவும், அதிக பொலிவூட்டவும் இது பயன்படுகிறது. முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்களை உற்பத்தி செய்கிறது. மேலும் இதில் உள்ள அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் முகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மினுமினுப்பான சருமத்தை தந்து, தோலை இருக்க செய்து வயதான தோற்றம் வராமல் காக்கிறது.

#6 தூக்கமின்மை
இரவில் தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்படுகிறீர்களா..? கவலை வேண்டாம். சீமை சாமந்தி டீயை குடித்து வாருங்கள், தூக்கம் சரியான வேளையில் வந்துவிடும். ஏனென்றால், இதில் உள்ள apigenin என்ற மூல பொருள் மூளை நரம்புகளை மழுங்க செய்து தூக்கத்தை இயல்பாக வரவழைக்கிறது. மேலும் அதிகம் மன அழுத்தில் உள்ளவர்கள் இந்த டீயை குடித்தால் நிம்மதியான தூக்கம் பெற்று மன அழுத்தம் குறையும்.

#7 கருவளையங்கள் போக்க
சீமை சாமந்தியை வெதுவெதுப்பான நீரில் கொதிக்க வைத்து, பிறகு வடிகட்டிய பூவை குளிர வைக்கவும். பிறகு இதனை கருவளையங்கள் உள்ள பகுதியில் மசாஜ் செய்யுங்கள். இது உங்கள் கண் கருவளையங்களை நீக்கி, கண் வீக்கத்தையும் குணப்படுத்தும். இதனால் நீங்கள் அழகான கண்களை பெறுவீர்கள்.

#8 பொடுகு போக
தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சீமை சாமந்தி ஒரு நல்ல மருந்தாகும். தலையில் அதிக பொடுகை இந்த டீ நீக்குகிறது. இதில் உள்ள Apigenin என்ற நிறமி நரை முடிகளில் இருந்து உங்களை காக்கும். இயற்கையாகவே இது முடி உடைவதை தடுக்கிறது. மேலும் கூந்தலை பொலிவாக இருக்கவும் செய்கிறது. முடியின் அடிவேரை உறுதி படுத்த இந்த டீ நல்ல தீர்வாகும்.

#9 சளி தொல்லை குணமாக
மழை காலங்களில் அதிக பேர் பாதிக்கப்படும் பிரச்சனை இந்த சளிதான். சளி தொல்லை இருப்பவர்கள் சீமை சாமந்தி டீயை குடித்தால் விரைவில் உங்கள் மூக்கு துவாரங்கள் மேன்மையடைந்து சளி குணமடையும். வறட்டு இரும்பல் உள்ளவர்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும்.



Click it and Unblock the Notifications