For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீராத ஒற்றை தலைவலியால் அவதிப்படறீங்களா?... இந்த 5 மட்டும் போதும் அது பறந்து ஓட…

நீங்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் போது பார்த்தால் தெரியும் அப்படியே தலையே வெடித்து விடுவது போன்று கனக்கும். வலியால் துடித்தல், சத்தம், வாந்தி போன்றவை கூட ஏற்பட்டு உங்கள் அன்றாட வாழ்க்கை கூட பெரும

|

நீங்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் போது பார்த்தால் தெரியும் அப்படியே தலையே வெடித்து விடுவது போன்று கனக்கும். வலியால் துடித்தல், சத்தம், வாந்தி போன்றவை கூட ஏற்பட்டு உங்கள் அன்றாட வாழ்க்கை கூட பெரும் சிரமத்திற்கு உள்ளாகி விடும். இதற்கு நீங்கள் என்ன தான் மாத்திரைகள் போட்டாலும் அப்போது கேட்குமே தவிர மேலும் பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடும். எனவே நீங்கள் இயற்கையான வழியை தேர்ந்தெடுத்தால் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் தேவை. இவைகள் தலைவலியின் தீவிரத்தை குறைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஒற்றை தலைவலி :

1. ஒற்றை தலைவலி :

எல்லா தலைவலிகளும் ஒற்றைத் தலைவலி கிடையாது. இவற்றை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இதை ஆங்கிலத்தில் மைக்ரேன் என்று சொல்வார்கள். சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாட்டை முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

2. அறிகுறிகள் :

2. அறிகுறிகள் :

நெற்றியில் ஒரு பக்கம் மட்டுமே வலி, குத்தல் இருக்கும். சுறுக் சுறுக்கென்று வலியால் துடிக்கும். தலையினுள் லேசான சத்தம் கேட்பது போல் இருக்கும் வெளிச்சத்தை பார்க்கும் போது மங்கலான பார்வை தோன்றும். குமட்டல், வாந்தி ஏற்படும்.

3. ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணங்கள் :

3. ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணங்கள் :

1000 விதமான தலைவலி இருக்கிறது. அதில் இந்த ஒற்றைத் தலைவலி தான் 94 % அதிக வலியைத் தருகிறது என்று நரம்பியல் மற்றும் அனஷ்தீஷியாலஜி பிரிவைச் சார்ந்த மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்போது வரை இந்த ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது என்பதற்கான ஒரு தெளிவான பதில் கிடைக்கவில்லை. சில சுற்றுப்புறக் காரணிகளும், மரபணு சார்ந்த பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

4. காரணிகள்

4. காரணிகள்

சில உணவுகள், உணவில் சேர்க்கப்படும் பொருட்கள், ஹார்மோன் மாற்றம் (குறிப்பாக பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் அளவு மாற்றம்), ஆல்கஹால், மன அழுத்தம் இவைகளும் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்துகின்றன.

5. அபாயம் :

5. அபாயம் :

சில அரிதான சந்தர்ப்பங்களில் தலைவலி ஒரு மூளை புற்றுநோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டால் நீங்களாகவே மருந்து வாங்கி சாப்பிடாமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. நிவாரணம் தரும் சத்து மாத்திரைகள்சில சமயங்களில் மற்றவர்கள் தலையில் செய்யும் மசாஜ் கொஞ்சம் நிவாரணம் தரும். ஆனால் அப்படியும் கேட்காமல் தீவிர தலைவலி இருந்தால் உடனே மருத்துவரை நாடுவது நல்லது.

வைட்டமின் மாத்திரைகள் எல்லாருக்கும் நிவாரணம் தராது. ஒரு சில பேருக்கு மட்டுமே இது தீர்வாகிறது. அப்படிப்பட்ட விட்டமின்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

6. விட்டமின் பி-2

6. விட்டமின் பி-2

விட்டமின் பி-2 அல்லது ரிபோப்ளவின் ஒற்றைத் தலைவலியை போக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே தினசரி 400 மில்லி கிராம் விட்டமின் பி - 2 தேவைப்படுகிறது. இதுவே 100 மில்லி கிராம் என்ற அளவில் ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். தலைவலி மாத்திரைகளை விரும்பாத நபர்களுக்கு இந்த சத்து மாத்திரைகள் பயனுள்ளதாக இருக்கும்.

7. பட்டர்பெர்

7. பட்டர்பெர்

பெடாலஸ், பட்டர்பெர் என்பது ஒரு வகை மூலிகை மாத்திரைகளாகும். இவைகளும் ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ஒரு நரம்பியல் நாளிதழ் வெளியிட்ட கருத்துப்படி பார்த்தால் பட்டர்பெர் மற்ற தீவிர மாத்திரைகளை விட சிறந்தது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி படி இதில் பங்கு கொண்டவர்களுக்கு 75 மில்லி கிராம் அளவு பட்டர்பெர் தினசரி கொடுக்கப்பட்டது. ஆனால் ரிபோப்ளவின் அளவிற்கு இது அவர்களுக்கு உதவவில்லை. இருப்பினும் பல பேருக்கு இது நல்ல பலனை தந்தது.

8. மக்னீசியம்

8. மக்னீசியம்

ஒற்றைத் தலைவலிக்கு தினசரி மக்னீசியம் எடுத்து கொண்டு வந்தால் 50% வரை அதை போக்க இயலும். ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் அளவு தேவைப்படுகிறது.

தற்போதைய ஆராய்ச்சி படி பார்த்தால் மக்னீசியம் ஒற்றைத் தலைவலிக்கு சிறந்தது என்று மருத்துவ நாளிதழில் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. மக்னீசியத்தை உள்ளே எடுக்கும் போது அவை ஒற்றைத் தலைவலிக்கு நல்ல தீர்வளித்தது. மேலும் தொடர்ச்சியான தலைவலி மற்றும் அதன் வீரியத்தையும் குறைப்பது தெரிய வந்துள்ளது.

நீங்கள் மக்னீசியம் மாத்திரைகளை எடுத்து கொள்ளும்போது ஒரு நாளைக்கு 200 கிராம் என்ற அளவில் இரண்டு தடவை எடுத்து கொள்ளலாம். உங்களுக்கு மலம் தண்ணியாகப் போனால் கொஞ்சம் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். மக்னீசியம் நோயாளிகளுக்கு ஒற்றைத் தலைவலியை போக்குகிறது என்பதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டுள்ளது.

9. விட்டமின் டி

9. விட்டமின் டி

விட்டமின் டி எப்படி ஒற்றைத் தலைவலியைப் போக்குகிறது என்பதை இப்பொழுது தான் ஆராய்ந்து வருகிறார்கள். மெடிக்கல் சைன்ஸ் என்ற நாளிதழில் விட்டமின் டி எப்படி ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது என்பது பற்றிய கருத்துகள் வெளியிடப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் போது பங்கு கொண்ட 50,000 நபர்களுக்கு விட்டமின் டி மாத்திரைகள் ஒரு வாரம் கொடுக்கப்பட்டது. இதில் நிறைய பேர்கள் ஒற்றைத் தலைவலி பாதிப்பிலிருந்து கொஞ்சம் நிவாரணம் அடைந்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

10. கோஎன்ஜைம் Q10

10. கோஎன்ஜைம் Q10

கோஎன்ஜைம் ஒற்றைத் தலைவலியை போக்குவதற்கான நிறைய சான்றுகள் இல்லை. ஆனால் ஒற்றைத் தலைவலி சங்கத்தின் படி ஒரு சில ஆராய்ச்சிகள் மற்ற போலி தலைவலி மாத்திரைகளை விட கோஎன்ஜைம் ஒற்றைத் தலைவலியை போக்குகிறது என்று கூறுகிறது. இதை 100 மில்லி கிராம் என்ற அளவில் ஒரு நாளைக்கு மூன்று முறை எடுத்து வந்தால் நல்லது.

இந்த கோஎன்ஜைம் மற்ற மாத்திரைகளுடன் வினைபுரிய வாய்ப்புள்ளது. எனவே இதை எடுத்து கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.

11. பாதுகாப்பு குறிப்புகள்

11. பாதுகாப்பு குறிப்புகள்

நீங்கள் இந்த விட்டமின்கள் மினரல்களைப் புதிதாக எடுத்து கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து கொள்வது நல்லது. ஏனெனில் ஏற்கனவே நீங்கள் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இருக்கும் போது இந்த புதிய மாத்திரைகள் அவற்றுடன் இணைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே மருத்துவரை ஆலோசித்து கொள்ளுங்கள். கருவுற்ற பெண்கள் இதை எடுத்து கொள்வதில் கவனமாக செயல்படுங்கள். நீங்கள் குடலில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருந்தாலோ அல்லது குடல் பிரச்சினைகள் இருந்தாலோ உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று செயல்படுங்கள்.

12. தடுக்கும் முறை

12. தடுக்கும் முறை

நீங்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் சமயங்களில் அமைதியான இருண்ட அறையில் ஓய்வெடுக்கலாம். இது உங்கள் தலைவியின் தீவிரத்தை குறைக்க உதவும். ஆனால் இந்த நவீன அவசர உலகத்தில் இது சாத்தியமாக அமைவது கடினமே. நம்மளை சுற்றி ஓரே சத்தங்களும் இரைச்சல்களும் தான் நிறைந்து காணப்படுகிறது. இதற்காக நரம்பியல் மருத்துவர் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகளை சரி செய்யும் வழிகளை அவர்களிடம் ஆலோசித்து நிவாரணம் பெற முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Supplements That Can Treat Migraines

Take a moment to learn how certain vitamins, minerals, and other supplements may affect the frequency or severity of your migraines.
Story first published: Monday, March 19, 2018, 17:09 [IST]
Desktop Bottom Promotion