வீரியம் அதிகரிக்க கட்டிலுக்கு போகும்முன் தொப்புளில் இந்த எண்ணெயை தடவிட்டு போங்க...

Written By: manimegalai
Subscribe to Boldsky

உடல் முழுக்க அழகு செய்யும் நாம் தொப்புளை மட்டும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அந்த தொப்புளில் இருந்து தான் ஆரம்பமாகிறது. அதனால் அந்த தொப்புள் கொடியைப் பேணிப் பராமரிப்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்று நாம் முதலில் உணர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவர்ச்சிப் பிரதேசம்

கவர்ச்சிப் பிரதேசம்

தொப்புள் என்பதை கவர்ச்சிப் பிரதேசமாக மாற்றிவிட்டார்கள். அந்த தொப்புளைப் பார்த்தாலே ஆண்களுக்கு ஒருவித கிறக்கம் உண்டாவது இயற்கை தான். அந்த தொப்புளை இன்னும் எப்படி கவர்ச்சியாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்?

சினிமா மோகம்

சினிமா மோகம்

தொப்புளை காட்டினால் தான் அவர் ஹீரோயின். இல்லையேல் அவர் காமெடியன் என்னும் அளவுக்கு நம்முடைய சினிமா தொப்புளைப் பற்றிய கருது்தியலை நம்மிடம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால் தொப்புளுக்கும் நம்முடைய தாயுடனான உறவுக்கும் இடையே எவ்வளவு மகத்துவம் இருக்கிறது தெரியுமா?... அதனால் தான் அதை உயிர்க்கொடி என்கிறார்கள்.

அழகான தொப்புளை பெற

அழகான தொப்புளை பெற

எல்லோருக்கும் தொப்புள் வட்டமாக,குழியாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆனா்ல என்ன! பிறக்கும் தொப்புள் கொடி அறுக்கப்படும் போது செய்யும் சிறுசிறு தவறுகளால் சிலருக்கு அதன்அமைப்பில் சிறிது மாற்றம் ஏற்படுவதுண்டு. ஆனாலும் கவலைப்படத் தேவையில்லை. இதற்காக ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே கவர்ச்சியான அழகான தொப்புளைப் பெற முடியும்.

எண்ணெய்கள்

எண்ணெய்கள்

தொப்புளில் எண்ணெய் விட்டு பராமரிப்பது தான் உங்களுடைய தொப்புளை கவர்ச்சியாகவும் அழகாகவும் அதேசமயம் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. என்ன எண்ணெய் தடவினால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

தொப்புளிலும் அதைச் சுற்றியும் கடுகு எண்ணெய் தினமும் அப்ளை செய்து வந்தால் தொப்புளைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மாறி, மிக வழவழவென்ற உதடுகளைப் போன்றே உங்கள் தொப்புளும் மாறிவிடும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

தொப்புளில் ஆலிவ் ஆயில் தடவி வந்தால் அது நரம்புகளின் வழியாகஉடல் முழுக்க பரவி, புதுப்பொலிவையும் தெம்பையும் தரும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தொப்புளில் தினமும் 2 துளிகள் தேங்காய் எண்ணெய் விட்டுவந்தால் தலைவலி, நீர்க்கோர்த்தல் போன்ற பிரச்னைகள் தீரும். உடல் வீரியம் அதிகரிக்குமாம். பிறகென்ன... தினமும் தூங்கப் போறதுக்கு முன்னாடி இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டுட்டு போங்க...

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து, அதை தொப்புளில் வைத்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து போகும். அதோடு, மூக்கு ஒழுகுதல், தீராத காய்ச்சல் ஆகியவையும் குணமாகும்.

பிராந்தி

பிராந்தி

பிராந்தியை சிறு காட்டனில் நனைத்து தொப்புளின் மேல் வைத்திருந்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

பசுவின் பால்

பசுவின் பால்

பசுவின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான வெண்ணெயைத் தொப்புளில் வைத்தால் தொப்புள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி மிகமிக மென்மையாக மாறும்.

லெமன் ஆயில்

லெமன் ஆயில்

தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் 2 துளிகள் லெமன் ஆயிலைத் தொப்புளில் வைப்பதன் மூலம் பூஞ்சைத் தொற்று உண்டாகாமல் தடுக்க முடியும்.

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய்

தினமும் தொப்புளில் வேப்ப எண்ணெய் வைப்பதால் வெண்புள்ளிகள், தேமல் போன்ற தோல் சம்பந்தப்பட்ட எந்தவித நோய்த் தொற்றுகளும் உண்டாகாமல் தடுக்கலாம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

தினமும் பாதாம் எண்ணெயை இரண்டு துளிகள் தொப்புளில் வைத்து வந்தால் தொப்புள் மட்டுமல்லாமல் உங்கள் முகமும் பளபளக்கும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணையை தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் தொப்புளிலும் கால் பெருவிரல் நகத்திலும் தடவிக் கொண்டு படுத்தால்எவ்வளவு உடல்சூடு இருந்தாலும் பஞ்சாகப் பறந்து போய்விடும். ஆனால் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் சிறிது நேரம் வைத்திருந்து, பின் நன்கு கழுவிவிட்டு படுக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: health
English summary

15 Benefits of Using Oils in Belly Button Every Night

Belly button is the one and only place where babies get their nutrition through umbilical cord. There are more than a thousand nerves connected to belly button. That is why applying oil in belly button might have various beneficial for internal organ.