For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எய்ட்ஸ் பற்றி இதுவரை அறிந்திடாத 10 சுவாரசிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்..!

|

உலகின் கொடூரமான நோய்கள் தினம்தினமும் உருவாகி கொண்டுதான் இருக்கிறது. பல வகையான நோய்களின் தாக்கம் எல்லா வகையான உயிர்களையும் பாதிக்கிறது. சிறிய வகை உயிரினத்தில் இருந்து பெரிய வகை உயிரினம் வரை எண்ணற்ற நோய் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நோய்க்கும் தனிவித தாக்கம் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் மக்களுக்கென்று ஒரு கற்பனை இருக்கும்.

10 Common Myths and Facts About AIDS

இந்த நோய் இப்படி பரவும், இது செய்தால் அவ்வளவுதான், இதை சாப்பிட்டால் இறந்தே போய்விடுவோம்... இப்படி பல்வேறு கற்பனைகள் கடைசியில் கட்டுக்கதையாக மாறிவிடும். அந்த வகையில் மிக கொடிய நோயான எய்ட்ஸ் பற்றிய பல வகையான கட்டுக்கதைகள் மக்களிடம் பரவி கிடக்கிறது. இந்த பதிவில் எய்ட்ஸ் நோயை பற்றிய கட்டுக்கதைகளையும் உண்மைகளையும் பற்றி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எய்ட்ஸ் என்னும் உயிர் கொல்லி..!

எய்ட்ஸ் என்னும் உயிர் கொல்லி..!

உலகில் பல்வேறு நோய்கள் இருந்தாலும், மனிதர்களை தாக்கும் கொடிய நோய்களில் முதன்மையானதாக கருதப்படுவது எய்ட்ஸ்தான். தாம்பத்திய உறவின் மூலம் பரவ கூடிய இந்த நோயிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பதே மோசமான விஷயம். இருப்பினும் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்தும் ஒரு சில மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கட்டுக்கதை #1

கட்டுக்கதை #1

எய்ட்ஸ் உள்ளவரை கட்டிப்பிடித்தால் நமக்கும் வருமாம்.

உண்மை:-

இது சற்றே மூடத்தமான கட்டுக்கதையாகும். எய்ட்ஸ் உள்ளவரை கட்டி அணைத்தால் அது நம்மிடம் பரவாது. எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதற்கென்று ஒரு சில வரையறை இருக்கிறது.

கட்டுக்கதை #2

கட்டுக்கதை #2

எய்ட்ஸ் உள்ளவரின் வியர்வை, கண்ணீர், சிறுநீர் நம் மீது பட்டால் நமக்கும் அந்த நோய் தொற்றி கொள்ளும்.

உண்மை :-

ஒரு சில நோய்கள் மட்டுமே மற்றவரின் சிறுநீர், வியர்வை, கண்ணீரின் மூலம் பரவும். ஆனால், எய்ட்ஸ் அந்த வகையான நோய் கிடையாது. எய்ட்ஸ் உள்ளவரின் வியர்வை, கண்ணீர், சிறுநீர் ஆகியவை நம்மீது பட்டால் அது நம்மை எந்த விதத்திலும் தாக்காது.

கட்டுக்கதை #3

கட்டுக்கதை #3

கொசுக்களினால் எய்ட்ஸ் பரவும்.

உண்மை :-

எய்ட்ஸ் உள்ளவரின் ரத்தத்தை கொசுக்கள் உறிஞ்சி வேறொருவரின் உடலில் கடிக்கும் போது எய்ட்ஸ் பரவுவதாக ஒரு கட்டுக்கதை காலம்காலமாக சொல்லப்படுகிறது. ஆனால், கொசுக் கடியினால் எய்ட்ஸ் பரவாது என்பதே உண்மை.

கட்டுக்கதை #4

கட்டுக்கதை #4

முத்தம் கொடுப்பதால் எய்ட்ஸ் பரவும்.

உண்மை :-

எய்ட்ஸ் உள்ளவரை முத்தமிட்டால் இந்த நோய் பரவாது. பொதுவாக ஒரு சில நோய்கள் மட்டுமே எச்சினால் பரவ கூடும். எய்ட்ஸ் உள்ளவரின் எச்சினில் சிறிதளவு HIV கிருமி இருக்கும். ஆனால், இவை முத்தம் கொடுப்பதால் பரவாது.

கட்டிக்கதை #5

கட்டிக்கதை #5

எய்ட்ஸ் உள்ள பெண்ணால் குழந்தை பெற்று கொள்ள முடியாது.

உண்மை :-

உண்மையில் எய்ட்ஸ் உள்ள பெண்ணால் குழந்தை பெற்று கொள்ள வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இது சில சமயங்களில் அது அந்த சிசுவையும் பாதிக்க கூடும். எனவே எய்ட்ஸ்நோயால் பாதித்தவர் மருத்துவரை ஆலோசித்து விட்டு இணையுடன் சேருங்கள்.

கட்டுக்கதை #6

கட்டுக்கதை #6

பெண்ணுறை அல்லது ஆணுறை பயன்படுத்தினாலும் எய்ட்ஸ் நோய் வரும்.

உண்மை :-

பெண்ணுறை அல்லது ஆணுறை என்பதே குழந்தை பெறுவதை தடுப்பதற்காகவே. இருவரின் பரிமாற்றங்கள் இதனை பயன்படுத்தும் போது நிகழாது. எனவே, எய்ட்ஸ் உள்ளவருடன் உறைகள் கொண்டு தாம்பத்தியம் வைத்து கொள்ளலாம்.

கட்டுக்கதை #7

கட்டுக்கதை #7

ஓரல் தாம்பத்தியம் எய்ட்ஸை தராது

உண்மை :-

நீங்கள் எய்ட்ஸ் உள்ளவரோடு ஓரல் தாம்பத்தியம் வைத்து கொண்டால் எய்ட்ஸ் பரவ சற்றே வாய்ப்புகள் உள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகிறது. எனவே இதனை தவிர்ப்பது மிகவும் நன்று.

கட்டுக்கதை #8

கட்டுக்கதை #8

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும்.

உண்மை :-

மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், இந்த கொடிய நோயிற்கு இன்னும் மாற்று மருந்து கண்டுபிடிக்கவே இல்லையாம். இந்த நோயை பற்றிய பல வகையான ஆராய்ச்சிகள் நிலுவையில் உள்ளது.

கட்டுக்கதை #9

கட்டுக்கதை #9

எய்ட்ஸ் உள்ளவர் சாப்பிடும் பொருளை, நாம் சாப்பிட்டால் எய்ட்ஸ் பரவும்.

உண்மை :-

முதலில் ஒன்றை நன்கு தெளிவு படுத்தி கொள்ளல் வேண்டும். எய்ட்ஸ் தாம்பத்திய ரீதியாக பரவ கூடிய ஒரு நோய். இவை எச்சினால் பரவ கூடியது அல்ல. எனவே எய்ட்ஸ் உள்ளவரை ஒதுக்கி வைத்து, அவர்களின் வேதனைகளை அதிகரிக்காமல் அரவணைத்து அன்பு காட்டினாலே போதும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Common Myths and Facts About AIDS

Over the past three decades, mistaken ideas about HIV and AIDS have sometimes brought on the behaviors that cause people to get the virus.
Desktop Bottom Promotion