For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் மார்பகங்களைத் தாக்கும் உங்களுக்குத் தெரியாத சில கொடிய பிரச்சனைகள்!

இங்கு பெண்களின் மார்பகங்களில் ஏற்படக்கூடிய சில மோசமான பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

|

பெண்களின் மார்பகங்களில் புற்றுநோய் மட்டும் தான் வரும் என்று நினைக்க வேண்டாம். அதையும் தாண்டி வேறுசில மோசமான பிரச்சனைகளையும் மார்பகங்களில் பெண்கள் சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா?

Worst Things That Can Happen To Your Breasts (Not Including Breast Cancer)

ஆம், பெண்ணியல் மருத்துவரான டாக்டர்.சௌரப் மெஹ்தா பெண்களின் மார்பகங்களில் ஏற்படக்கூடிய சில மோசமான பிரச்சனைகளைப் பட்டியலிட்டுள்ளார். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாட்டூ

டாட்டூ

பெண்களுக்கு எங்கெல்லாம் டாட்டூ குத்த வேண்டும் என்று ஒரு வரைமுறை இல்லாமல் கண்ட இடங்களில் டாட்டூக்களைக் குத்துகிறார்கள். சில பெண்கள் மார்பகங்களின் அருகே டாட்டூக்களைக் குத்துவார்கள். ஆனால் அந்த டாட்டூக்கள் வரைய பயன்படுத்தப்படும் மைகளில் உள்ள நச்சுமிக்க பொருட்கள் சரும புற்றுநோய் உண்டாக்கக்கூடியவை.

இன்னும் சில நேரங்களில் டாட்டூக்களுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டோரின் இரத்தத்தை ஒருமுறை தொட்டுவிட்டாலும், அதனால் மற்றவர்களுக்கு எச்.ஐ.வி, ஹைபடைடிஸ் பி மற்றும் சி போன்றவை வரும் வாய்ப்புள்ளது.

மார்பக தொற்றுகள்

மார்பக தொற்றுகள்

வியர்வை சுரப்பிகளில் அடைப்பு, பால் குழாய்களில் அடைப்பு போன்றவை மார்பகங்களில் தொற்றுகளால் ஏற்படுபவையாகும். இதன் காரணமாக வீக்கம், மார்பகங்கள் சிவப்பாதல் போன்றவற்றுடன், மார்பக காம்புகளின் வழியே சீழ், இரத்தம் அல்லது பச்சை நிற நீர்மம் போன்றவையும் வெளியேறும்.

கட்டிகள்

கட்டிகள்

சில நேரங்களில் மார்பகங்களினுள் திரவம் நிறைந்த தீங்கு விளைவிக்காத கட்டிகள் வந்து, தாங்க முடியாத அளவில் வலியை உண்டாக்கும். அதுவும் மாதவிடாய் காலங்களில் இந்த கட்டிகள் நன்கு பழுத்து, கடுமையான வலியை ஏற்படுத்தும். இந்த வலி தொடர்ச்சியாக இரண்டு மார்பகங்களிலோ அல்லது ஒரு பக்க மார்பகங்களிலோ கட்டியின் தீவிரத்தைப் பொறுத்து இருக்கும்.

மார்பக இரத்த நாள வீக்கம்

மார்பக இரத்த நாள வீக்கம்

மார்பகங்களில் இரத்த நாள வீக்கம் ஏற்பட்டால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே முடியாமல் போய், வீங்கி, பருமனமாகவும், தொட்டால் கடுமையான வலியுடனும் இருக்கும்.

புற்றுநோய் அல்லாத கட்டி

புற்றுநோய் அல்லாத கட்டி

மார்பக காம்புகளின் வழியே இரத்தம் கலந்த திரவம் வெளியேறினால், அது புற்றுநோய் அல்லாத கட்டிகள் உள்ளது என்று அர்த்தம். இது பாப்பில்லோமா என்னும் வைரஸ் பால் குழாய்களில் அதிகளவு வளர்ச்சி அடைந்ததால் ஏற்படுவதாகும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst Things That Can Happen To Your Breasts (Not Including Breast Cancer)

Your breasts can have many other dangerous conditions than just breast cancer. Here we list out the worst things that can happen to your breasts.
Desktop Bottom Promotion