ஏன் அதீத மனப்பதட்டம் உண்டாகிறது? அதற்கான தீர்வுகள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

கவலை படுவது என்பது ஒரு சாதாரண உணர்வு தான். ஆனால் அதிக கவலை பதட்டத்தை ஏற்படுத்தும். பதட்ட கோளாறு என்பது சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு மருத்துவ நிலை தான்.

இந்த நிலையில் மனிதர்கள் மிகுந்த துயரத்தோடும் மன அதிர்ச்சியோடும் இருப்பார்கள். இது அவர்கள் இயல்பு வாழ்க்கை நிலையை பாதிக்கும். இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே பதட்டமாகவே இருப்பார்கள். அவர்களுக்கான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தினசரி செய்யும் வேலைகளுக்காகவும் அதிக அளவில் கவலை கொள்வது இந்த பதட்ட கோளாறின் அறிகுறியாகும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அதிக அளவு அழுத்தம் கொள்வதில் இதனை அறிந்து கொள்ளலாம். இது நமது செயல்களில் எதிர்மறை விளைவுகளை தரும். அதிக அளவு கவலை கொள்வதால் உடல் சோர்வடையும்.

What is Anxiety ?how can it be cured?

குறிப்பிட்ட நேரத்தில் தூங்க முடியாமல் இருப்பதும், தூங்கும் நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இருப்பதும் இந்த வகை கோளாறுகளின் அறிகுறியாகும்.

ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சூழ்நிலையில் தேவையற்ற பயம் ஏற்படுவது இந்த கோளாறின் அறிகுறியாகும். இந்த பயம் திடீரென்று தோன்றும். நாமே எதிர்பாராத நேரத்தில் தோன்றும் இத்தகைய பயத்திற்கு எந்த ஒரு காரணமும் இருக்காது.

தசைகளில் ஒரு அசௌகரியமான நிலை ஏற்படும். அதனுடன் வலியும் இருக்கும். உடலளவில் இந்த அறிகுறிகள் தான் பதட்ட கோளாறின் அறிகுறியாகும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒரு வித வலி ஏற்படும். மற்றும் இந்த வலி நீடித்து கொண்டே இருக்கும்.

அடிக்கடி பதட்டம் ஏற்படும்போது நீங்கள் ஒரு வித சோர்வு மற்றும் தசை வலி ஆகியவற்றை உணர்வீர்கள். வேண்டா வெறுப்பாக வேலைகளை செய்வீர்கள்.

செரிமான மண்டலத்தில் ஏற்படும் தொந்தரவுகள் கூட பதட்ட கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். செரிமான மண்டலத்தில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்படுவதோடு சேர்த்து எரிச்சலுடன் கூடிய குடல் நோய் (Irritable Bowel Syndrome) ஏற்படும். இந்த IBS என்பது செரிமான மண்டலத்தில் தோன்றும் ஒரு வித பதட்டமான சூழ்நிலையாகும். வயிற்று வலி, எரிச்சல், வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு ஆகியவை இதன் வெளிப்பாடாகும்.

What is Anxiety ?how can it be cured?

சில அறிகுறிகள் :

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை தாண்டி வேறு சில அறிகுறிகளும் ஏற்படும். அவை, மேடை பயம், அதிகமான சுய உணர்வு, பய தாக்குதல்கள், நினைவக ஃப்ளாஷ்பேக், சுய சந்தேகம், கனகச்சிதமாக இருப்பது போன்றவையாகும்.

இந்த அறிகுறிகள் யாருக்காவது தென்படுமானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.

இந்த நிலையிலிருந்து விடுபெற சில இயற்கை தீர்வுகளும் உண்டு. அதனை பற்றி கீழே காண்போம்.

தீர்வுகள் :

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பதட்ட கோளாறுகளை நீக்க வல்லது. பதட்டத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களான அட்ரீனலின் மற்றும் கார்டிசோல் ஆகியவற்றை குறைத்து, மன அழுத்தத்தை விடுவிக்கிறது. டூனா, சால்மன் போன்ற மீன் வகைகள் , ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன.

லைசின் என்பது நரம்பிய கடத்திகளை உருவாக்கும் அமினோ அமிலம் ஆகும். லைசின் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் பதட்ட கோளாறு தவிர்க்கப்படுகிறது மற்றும் மன அழுத்த சுரப்பிகளை குறைக்கிறது. லைசின் பொதுவாக இறைச்சி, மீன், பீன்ஸ் போன்றவற்றிலும் அதிகமாக இருக்கிறது.

What is Anxiety ?how can it be cured?

வைட்டமின் டி யை அதிகமாக எடுத்துக் கொள்வதால் பதட்டக் கோளாறு தடுக்கப்படுகிறது. இயற்கையான முறையில் வைட்டமின் டி பெறுவதற்கான வழி, சூரிய ஒளி. தினமும் 15 நிமிடங்கள் சூரிய வெளிச்சத்தை எடுத்து கொள்ளும்போது உடல் மகிழ்ச்சியை உணர்கிறது. மகிழ்ச்சியை உருவாக்கும் சுரப்பிகள் விழித்து கொள்வதால், பதட்ட நிலை கட்டுப்படுகிறது.

உடற்பயிற்சி செய்வதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது. உடலில் எண்டோரபின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது மகிழ்ச்சியை உற்பத்தி செய்யும் சுரப்பியாகும். இதனால் பதட்டம் குறைந்து இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வர இயலும்.

இந்த வழிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கடைபிடித்து பதட்ட நிலையில் இருந்து மீளலாம்.

English summary

What is Anxiety ?how can it be cured?

Prolonged Stress may lead to Anxiety. Remedies are given to cure this problem.
Story first published: Monday, September 4, 2017, 9:58 [IST]
Subscribe Newsletter