For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடலில் எந்த உறுப்பு சரியாக இயங்குவதில்லை என்பதை அறிய வேண்டுமா? அப்ப இத படிங்க...

இங்கு சீன உயிரியல் கடிகாரம் மூலம் உங்கள் உடலில் எந்த உறுப்பு சரியாக இயங்குவதில்லை என்பதை அறிவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது

|

நம் உடலில் குறிப்பிட்ட உறுப்புக்கள் சரியாக இயங்காமல் இருந்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும் என்பது தெரியும். சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில், உயிரியல் கடிகாரத்தைக் கொண்டு உடலுறுப்புக்களுள் எது சரியாக இயங்குவதில்லை என்பதை அறிந்து சரிசெய்யப்படுகிறது.

The Chinese Clock Never Made Mistake – Find Out Which Organ In Your Body Does Not Work Well!!

Image Courtesy

குறிப்பாக ஒருவர் இரவில் படுக்கும் போது, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் விழிப்பார்கள். அது ஏன் என்று தெரியாமலும் இருப்பார்கள். ஆனால் இப்படி ஒருவர் தூக்கத்தில் விழிப்பது, அவரது உடலுறுப்போடு தொடர்பு கொண்டுள்ளதாக சீனர்களின் உயிரியல் கடிகாரம் சொல்கிறது.

இங்கு சீனர்களின் அந்த உயிரியல் கடிகாரம் குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் உடலில் எந்த உறுப்பு சரியாக இயங்குவதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீன உயிரியல் கடிகாரம்

சீன உயிரியல் கடிகாரம்

சீனர்களின் உயிரியல் கடிகாரத்தின் படி ஒவ்வொரு உறுப்பும், தன் அதிகப்படியான இயக்கத்திற்கு 2 மணிநேரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில் அந்த உறுப்பில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை சுட்டிக்காட்டும். அப்படி சுட்டிக்காட்டும் நேரத்தைக் கொண்டு எந்த உறுப்பு பாதிப்படைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 a.m - 3 a.m

1 a.m - 3 a.m

இது கல்லீரலுக்கான நேரம். இந்நேரத்தில் கல்லீரல் உணவுகளை செரிப்பதற்கு பித்தநீரை அதிகம் சுரக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதோடு, நச்சுக்களையும் வெளியேற்றிக் கொண்டிருக்கும். இந்நேரத்தில் ஒருவருக்கு தூக்கம் கலைந்தால், கல்லீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

3 a.m - 5 a.m

3 a.m - 5 a.m

இது நுரையீரலுக்கான நேரம். இந்நேரத்தில் நுரையீரல் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை சேகரித்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும். நுரையீரல் அல்லது சுவார பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் இந்நேரத்தில் தூக்கம் கலையும்.

5 a.m - 7 a.m

5 a.m - 7 a.m

இது பெருங்குடலுக்கான நேரம். இந்நேரத்தில் பெருங்குடல் சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடும். குடலியக்க பிரச்சனையான மலம் வெளியேற்றுவதில் பிரச்சனை இருப்பவர்கள், இந்நேரத்தில் வயிற்று பிரச்சனைகளை சந்திப்பார்கள். மேலும் இந்நேரத்தில் நீரை அதிகம் குடித்தால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

7 a.m - 9 a.m

7 a.m - 9 a.m

இந்நேரத்தில் உடலுக்கு ஆற்றலை வழங்க காலை உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

9 a.m - 11 a.m

9 a.m - 11 a.m

இது கணையம் மற்றும் மண்ணீரலுக்கான நேரம். இந்நேரத்தில் தான் கணையம் மற்றும் மண்ணீரல் தன் பணியை செய்யும்.

11 a.m - 1 p.m

11 a.m - 1 p.m

இது இதயத்திற்கான நேரம். இந்நேரத்தில் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் உடல் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் மிகுந்த சோர்வை உணர்ந்தால், அது இரத்த ஓட்டத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். மேலும் இது தான் மதிய உணவுக்கான நேரமும் கூட.

1 p.m - 3 p.m

1 p.m - 3 p.m

இது சிறுகுடலுக்கான நேரம். இந்நேரத்தில் உணவுகள் உடலால் உறிஞ்சப்படுவதால், இந்நேரத்தில் உடலில் ஆற்றல் சற்று குறைவாகவே இருக்கும்.

3 p.m - 5 p.m

3 p.m - 5 p.m

இது சிறுநீர்ப்பைக்கான நேம். இந்நேரத்தில் உடலில் ஆற்றல் தக்க வைக்கப்படும். மேலும் உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்.

5 p.m - 7 p.m

5 p.m - 7 p.m

இது சிறுநீரகங்களுக்கான நேரம். இந்நேரத்தில் சிறுநீரகங்கள் தங்களது பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும். இந்நேரத்தில் இரவு உணவை உட்கொள்வது நல்லது.

7 p.m - 9 p.m

7 p.m - 9 p.m

இது இதயத்தைச் சுற்றி இருக்கும் சவ்வுகளுக்கான நேரம். இந்நேரத்தில் அவை ஓய்வு எடுக்கும்.

9 p.m - 11 p.m

9 p.m - 11 p.m

இந்நேரத்தில் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் சுறுசுறுப்பாக இயங்கும். மேலும் நாளமில்லா சுரப்பிகளின் பணியை சீராக்கி, தூக்கத்தை வரவழைக்கும். இந்நேரத்தில் தூக்கம் வராமல் இருந்தால், இச்செயல்பாடுகளில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

11 p.m - 1 a.m

11 p.m - 1 a.m

இது பித்தப்பைக்கான நேரம். இந்நேரத்தில் கல்லீரலில் இருந்து பித்தநீர் சுரக்கப்பட்டு, உணவை செரிப்பதற்கு பித்தப்பையை அடையும். இந்நேரத்தில் உடல் மறுஉருவாக்கம் அடையும். இந்த நேரத்திலும் தூக்கம் வராவிட்டால், பித்தப்பையில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Chinese Clock Never Made Mistake – Find Out Which Organ In Your Body Does Not Work Well!!

In this article, you can find out which organ in your body does not work well through chinese clock. Read on to know more...
Desktop Bottom Promotion