For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரத்திற்கு மூன்று முறை இந்த சாலட்டை சாப்பிட்டால்,புற்று நோயை வராமல் எதிர்க்கும் புற்றனத் தெரியுமா?

இங்கு புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் சாலட்டை எப்படி தயாரிப்பது என்றும், அதை சாப்பிடுவதால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

|

பலருக்கும் சாலட் சாப்பிட பிடிக்காது. அதிலும் காய்கறிகளைக் கொண்டு சாலட் என்றால், பலரது முகம் பல கோணங்களில் செல்லும். ஏனெனில் சாலட் சுவையற்றதாக இருக்கும். ஆனால் ஒருவர் சாலட்டை அதிகம் சாப்பிட்டால், அவரது உடல் நோய்களின்றி மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் காய்கறிகளால் ஆன சாலட்டை சாப்பிட்டால், இரத்தத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு அதிகரித்து, எவ்வித நோய்களும் உடலைத் தாக்காதவாறு உடல் பாதுகாப்புடன் இருக்கும். குறிப்பாக பலரது உயிரைப் பறிக்கும் புற்றுநோயை சாலட் முற்றிலும் குணமாக்கும் என்றால் பாருங்கள்.

சரி, இப்போது புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் சாலட்டை எப்படி தயாரிப்பது என்றும், அதை சாப்பிடுவதால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரை கலோரி குறைவான மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர் உணவு. இதில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இந்த கீரையை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு குறையும், அதில் உள்ள குளோரோஃபில் புற்றுநோய் செல்களை அழிக்கும், இரத்த அழுத்தம் குறையும், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் செரிமானம் மேம்படும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. அதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனால் இதனை சாப்பிடும் போது, கொலஸ்ட்ரால் அளவு சீராகும், இதில் உள்ள பீட்டா-கரோட்டீன் கண் பார்வையை மேம்படுத்தும், மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும், குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

மாதுளை

மாதுளை

மாதுளை மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பழம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-வைரல் மற்றும் கட்டிகளைக் கரைக்கும் பண்புகள் உள்ளது. ஆகவே இப்பழத்தை சாப்பிட்டால், இரத்த ஓட்டம் சீராகும், வயிற்று பிரச்சனைகள் குணமாகும், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவை சரியாகும், தொண்டைப் புண் நீங்கும்.

சாலட் செய்யத் தேவையான பொருட்கள்:

சாலட் செய்யத் தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 1 1/2 கப்

அவகேடோ பழத் துண்டுகள் - 1/2 கப்

செர்ரி தக்காளி - 1/3 கப்

ப்ளாக்பெர்ரி - 1/3 கப்

மாதுளை - 1/3 கப்

ட்ரெஸ்ஸிங்:

ட்ரெஸ்ஸிங்:

அவகேடோ எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

கல் உப்பு - சுவைக்கேற்ப

மிளகுத் தூள் - சுவைக்கேற்ப

செய்முறை:

செய்முறை:

* முதலில் ஒரு பெரிய பௌலில் சாலட் தயாரிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாட்டிலில் ட்ரெஸ்ஸிங்கிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு குலுக்க வேண்டும்.

* பின்பு சாலட் மீது ட்ரெஸ்ஸிங்கை சிறிது ஊற்றி சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Cancer Fighting Salad That You Should Be Eating 3 Times A Week

To strengthen your body's ability to fight cancer, eat this salad 3 times a week. Read on to know more...
Desktop Bottom Promotion