வயிற்று வலி தானே என்று சாதாரணமாக நினைக்காதீர்கள் !

Posted By:
Subscribe to Boldsky

வயிறு வலி என்பதை மிகவும் சாதரணமாகத்தான் கடந்திருப்போம். லேசாக வயிறு வலித்தால் உடனே அது செரிமானக்கோளாறாகத்தான் இருக்கும் என்று நினைத்து, அதுற்குரிய வைத்தியங்களை செய்து கொண்டிருப்போம்.

வயிறு செரிமான வேலையை மட்டும் தான் செய்கிறதா என்ன? நம் உடலில் ஏற்படும் சில நோய்களின் அறிகுறியாக வயிறு வலி தான் இருக்கிறது. வயிற்றில் ஏற்படும் கோளாறுகளுக்கு எல்லாம் செரிமானம் மட்டுமே காரணமல்ல , அதைத் தாண்டி வேறு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெஞ்செரிச்சல் :

நெஞ்செரிச்சல் :

அதிக உணவைச் சாப்பிட்டாலோ அல்லது காரமான உணவினை எடுத்துக் கொண்டாலோ நெஞ்செரிச்சல் ஏற்படும். மற்ற நேரங்களில் தொடர்ந்தாலோ அல்லது அதிக நேரம் நீடித்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மிகவும் அரிதான gastroesophageal reflux disease இருந்தாலும் அதீத நெஞ்செரிச்சல் ஏற்படும்.

வயிற்று வலி :

வயிற்று வலி :

வயிற்றில் குறிப்பிட்டு இந்த இடத்தில் தான் வலிக்கிறது என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. குறிப்பிட்ட சில வலிகள் அதாவது அப்பண்டிக்ஸ்,கிட்னி கற்கள் போன்றவை என்றால் மருத்துவர்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

மற்றபடி வயிற்று வலி என்றாலே செரிமானப்பிரச்சனை என்று நினைத்து அதற்குரிய மாத்திரைகளை சாப்பிட்டுவிடுவோம். மாறாக நடுவயிற்றில் குறிப்பாக தொப்புளுக்கு அருகில் வலித்தால் ஐபிஎஸ் எனப்படும் irritable bowel syndrome ஆகக்கூட இருக்கலாம்.

இதன் அறிகுறிகள் வயிற்றில் அதிகமாக கேஸ் சேருவது, வயிற்றுப்போக்கு இருக்கும் இரண்டு நாட்களுக்கு மேல் இது நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

ஒரு வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிக்கவில்லை என்றாலோ அல்லது உணவில் ஃபைபர் சேர்க்காமல் இருந்தாலோ மலச்சிக்கல் உண்டாகும் . இதைத் தாண்டி உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது என்றால் அது பெருங்குடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். உடனடியாக சிகிச்சை பெறுவது நன்று.

வயிற்றுப் போக்கு :

வயிற்றுப் போக்கு :

உணவு ஒவ்வாமை, பாக்டீரியா தொற்று போன்ற காரணங்களால் வயிற்றுப் போக்கு ஏற்படுவதுண்டு,மற்றவற்றை விட வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காரணம் உங்கள் உடலில் உள்ள தண்ணீர் சத்தை சீக்கிரமாக இழக்க நேரிடும்.

இரண்டு நாட்களுக்கு மேல் வயிற்றுப் போக்கு நீடித்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். இது புற்றுநோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். அதனால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stomach problems which causes serious health issue

Stomach problems which causes serious health issue
Story first published: Tuesday, October 10, 2017, 18:00 [IST]