Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
உங்கள் ஆரோக்கியம் குறித்து அடிக்கடி அச்சம் கொள்கிறீர்களா? முதல்ல இத படிங்க...
இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல்நலம் குறித்து அதிக அச்சம் கொள்பவர்கள் தான் ஹைப்போகாண்ரியாக் என்னும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம். இது ஒரு வகையான பதற்ற நிலையைக் குறிக்கும். இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அச்சம் கொள்வார்கள். அதுவும் ஆரோக்கியமாக இருந்தாலும், உடலில் ஏதோ பிரச்சனை இருக்குமோ என்று அச்சம் கொள்வார்கள்.
இப்பிரச்சனையைக் கொண்டவர்கள், தங்களுக்கு சிறு தலைவலி வந்தாலே அதிகம் பதற்றம் கொள்வார்கள். இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறி #1
கண்களில் லேசாக வலி ஏற்பட்டாலும், உடனே கூகுளில் கண் வலி எந்த காரணத்திற்கு எல்லாம் வரும் என்று தேட ஆரம்பித்தால், அத்தகையவர்கள் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.

அறிகுறி #2
சிறு தலைவலி ஏற்பட்டாலும், அது ஒற்றை தலைவலியாக இருக்குமோ அல்லது மூளையில் கட்டி ஏதேனும் இருக்குமோ என்று ஒரு முடிவை எடுத்து அதிகம் அச்சம் கொண்டாலும், அது ஹைப்போகாண்ட்ரியாக் இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #3
தங்களுக்குள் இருக்கும் பயத்தைப் போக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்து, மருத்துவர் ஒன்றும் இல்லை என்று கூறினால், அதை சாதாரணமாக நினைத்துவிடாமல், இல்லை ஏதோ பிரச்சனை உடலினுள் உள்ளது என்று தொடர்ந்து நினைத்து அச்சம் கொள்வதும், இப்பிரச்சனைக்கான அறிகுறி தான்.

அறிகுறி #4
மருத்துவரின் வாக்கில் நம்பிக்கை இல்லாமல், வேறொரு மருத்துவரை அணுகினாலும், அதுவும் ஹைப்போகாண்ட்ரியாக் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #5
நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களை சந்திக்கும் போது, அவரிடம் தொடர்ந்து தங்களது உடல்நல பிரச்சனையைப் பற்றி பேசி, அவர்களுக்கு தொல்லை கொடுப்பதும் ஒரு அறிகுறி.

குறிப்பு
உடலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தன் ஆரோக்கியத்தைப் பற்றியே கவலை கொண்டால், சற்றும் தாமத்திக்காமல் உடனே ஒரு மருத்துவ நிபுணரை அணுகி, கவுன்சிலிங் மேற்கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் ஒரு தெளிவு கிட்டும்.



Click it and Unblock the Notifications
