Just In
- 6 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 6 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
- 7 hrs ago
உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!
- 7 hrs ago
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
Don't Miss
- News
40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை குறிவைத்தார் என நினைக்கவில்லை! சரத்பவார் அதிர்ச்சி
- Movies
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
- Sports
Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
- Finance
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
டெங்குவைப் போக்கும் நிலவேம்பு குடிநீரிலும் போலி! அதிர்ச்சியளிக்கும் செய்தி !!
எல்லா இடங்களில் இப்போது மழை, வெள்ளம் என்ற இயற்கையின் பிடியில் சிக்கி தவிக்கிறது தமிழகம். தற்போது வெள்ளம் மட்டுமல்ல வெள்ளத்தோடு சேர்த்து டெங்கு காய்ச்சலும் பெருகி வருகிறது.
நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைக்கு பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாய் இருப்பது நிலவேம்பு குடிநீர் மட்டுமே. நிலவேம்பு குடிநீர் குறித்து சில அதிர்ச்சிகரமான தகவல்கள்.

நினைப்பது தவறு :
நிலவேம்புக் குடிநீர் என்று அழைக்கப்படுவதால், அது நிலவேம்பினை மட்டுமே காய்ச்சித் தயாரிக்கப்படுவது என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல, நிலவேம்புடன் சேர்த்து ஏராளமான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. நிலவேம்பு என்பது அவற்றில் ஒன்று அவ்வளவே

என்னென்ன தேவை :
நிலவேம்பு குடிநீரை தயாரிக்க நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவை தேவைப்படும்.

எப்படி தயாரிக்கலாம் :
நிலவேம்பு குடிநீரை தயாரிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்து ஊற்றியதற்கு பாதியாக தண்ணீர் குறைந்திருக்க வேண்டும்.

செய்யும் தவறுகள் :
நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிக்க வேண்டும். அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். அதேபோல, முதல் நாள் தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை, அடுத்த நாள்வரை வைத்துக் கண்டிப்பாகக் குடிக்கக் கூடாது.குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும் பயன்படுத்தக்கூடாது.
நிலவேம்புக் குடிநீரை, எப்போதும் சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது.

அதிர்ச்சி :
மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் டெங்குவை சமாளிக்கும் ஒரே மருந்தாக இருப்பது இந்த நிலவேம்பு குடிநீர் தான். ஆனால் இப்போது இதிலும் போலி வந்துவிட்டது.
கடைகளில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நிலவேம்பு குடிநீர் பொடி என்று விற்கப்படுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டோர் டெங்குவை அண்டவிடாமல் தடுக்க வேண்டும் என்று நினைப்போர் என ஏராளமான மக்கள் போலியை நம்பி வாங்குவது அதிகரித்து வருகிறது.
நிலவேம்பு குடிநீர் உண்மையில் அதில் கலந்திருக்கும் மூலப்பொருட்களின் அளவு, தயாரிக்கப்படும் முறை, சேர்க்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றில் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
வேலை மிச்சம் என்று வெறும் பொடியை வாங்கி டீத்தூளை பயன்படுத்துவது போல் பயன்படுத்துவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.