இந்த பிரச்சனைகள் தான் அடிக்கடி ஏப்பத்தை வரவழைக்கிறது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஏப்பம் வாயிலாக உடலில் இருந்து வாயுக்கள் வெளியேறுவது என்பது சாதாரணமான ஒரு உடலியக்கம். ஆனால் சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். ஒருவருக்கு அடிக்கடி ஏப்பம் வந்தால், உடலில் ஏதோ பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தம்.

Poor Diet, Constipation, Depression +3 Causes Of Excessive Burping Or Belching

ஏனெனில் அடிக்கடி ஏப்பம் வருவது ஒருசில உடல்நல பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும். இங்கு உடலில் எந்த பிரச்சனைகள் இருந்தால், அடிக்கடி ஏப்பம் வரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோசமான டயட்

மோசமான டயட்

ஒருவர் அடிக்கடி கொழுப்புக்கள் நிறைந்த மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டு, குளிர்பானங்களை அதிகம் பருகினால், அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மோசமான டயட்டை மேற்கொண்டாலும், ஏப்பம் அதிகம் வரும். அதுமட்டுமின்றி, இரவு நேரத்தில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், பீன்ஸ், முளைக்கட்டிய பயிர்கள் போன்ற வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண்

வயிற்றுப்புண்

வயிற்றில் புண் இருந்தால், அதன் காரணமாகவும் அடிக்கடி ஏப்பம் வரும். வயிற்றுப்புண்ணிற்கு ஏப்பம் மட்டுமின்றி, கடுமையான வயிற்று வலியும் அறிகுறியாகும்.

நாள்பட்ட மலச்சிக்கல்

நாள்பட்ட மலச்சிக்கல்

யார் ஒருவர் நாள்பட்ட மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறார்களோ, அவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும். ஆய்வு ஒன்றிலும், ஏப்ப பிரச்சனையால் அவஸ்தைப்படும் 30% நோயாளிகள், நாள்பட்ட மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.

மன இறுக்கம்

மன இறுக்கம்

அளவுக்கு அதிகமாக மன கஷ்டம் அல்லது மன இறுக்கத்தால் அவஸ்தைப்படுபவர்கள், அடிக்கடி வயிற்று பிரச்சனைகளால் கஷ்டப்படக்கூடும். ஆய்வுகளில் மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் 65% ஏப்பத்திற்கு காரணமாக தெரிய வந்துள்ளது.

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

அஜீரண கோளாறுகளைக் கொண்டவர்கள், அடிக்கடி ஏப்பம் வருவது, வயிற்று வலி அல்லது வயிற்று அசௌகரியத்தை சந்திப்பார்கள். இதிலிருந்து விடுபட, இட்லி, தோசை, சாதம், மோர் போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்கள்.

குடலியக்க பிரச்சனைகள்

குடலியக்க பிரச்சனைகள்

குடலியக்க பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவர்களுக்கும், அடிக்கடி ஏப்பம் வரும். ஆனால் இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் இதற்கான அறிகுறி ஏப்பம் அளவுக்கு அதிகமாக வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Poor Diet, Constipation, Depression +3 Causes Of Excessive Burping Or Belching

Here are some of the most common causes of burping you should be aware about. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter