புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் தொழில் நுட்பத்தால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரியுமா

By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

ஆராய்ச்சியாளர்கள் நாம் மருத்துவ துறையில் பயன்படுத்தும் எம்ஆர்ஐ(MRI - magnetic resonance imaging) தொழில் நுட்பத்தில் மல்டி கலர் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனால் பாதிப்புகளை சுலபமாக கண்டறியலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

நடைமுறையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேனில் ஒரே ஒரு அடர்ந்த நிறத்தை நோயாளியின் இரத்த நாளங்களில் செலுத்தி பாதிப்புள்ள இடத்தை கண்டறிகின்றனர்.

Now, Multicolour MRIs To Improve Disease Detection

ஆனால் இந்த புதிய தொழில் நுட்பத்தில் இரண்டு ஏஜென்ட் நிறங்கள் செலுத்தப்பட்டு நோயாளின் உள்ளுறுப்புகளை பல வண்ணங்களுடன் ஒரே ஒரு எம்ஆர்ஐ ஸ்கேனில் எளிதாக பிரித்தறிய முடியும்.

இதுவே முதல் முறையாக இரண்டு ஏஜென்ட் பொருட்களை கொண்டு ஓரே நேரத்தில் செய்யப்படும் எம்ஆர்ஐ ஸ்கேன் என்று செரிஸ் ப்ளாஸ்க் அஸோஷியேட் புரபொசர் ஆன கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசனிலிருந்து அமெரிக்காவிலிருந்து கூறுகிறார்.

இந்த இரண்டு அடர்ந்த நிறங்களில் ஒன்று பாதிப்படைந்த திசுக்களையும் மற்றொன்று ஆரோக்கியமான திசுக்களையும் சுட்டுக் காட்ட பயன்படுகிறது. உதாரணமாக இந்த இரண்டு ஏஜென்ட்களும் ஓரே நேரத்தில் ஒரு நோயாளியின் உறுப்புகளில் உள்ள மாற்றத்தை பிரித்தறிய உதவுகிறது. இந்த மல்டி கலர் இமேஜ் டிடக்ஷன் மாலிக்குலார் இமேஜ்க்கு வழிவகுக்கிறது. மேலும் நோயாளியின் உள்உறுப்பு பாதிப்புகளை கண்டறிவதில் ஏற்பட்ட கஷ்டத்தை களைகிறது என்றும் ப்ளாஸ்க் கூறுகிறார்.

இந்த தெரிபியில் பாதிப்படைந்த உள்ளுறுப்பின் பகுதிகளை கண்டறிய பயோமார்க்கரை பயன்படுத்துகின்றனர். இரண்டு அடர்ந்த நிறப் பொருட்களான கடாலினியம், மக்னீசியம் ஆகும். இவற்றை தகுந்த அளவில் செலுத்தி வித்தியாசத்தை கண்டறிகின்றனர் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Now, Multicolour MRIs To Improve Disease Detection

இந்த இரண்டு அடர்ந்த நிறங்களில் செய்யப்படும் எம்ஆர்ஐ ஸ்கேன் ஆனது நிறைய இமேஜிங் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தலாம்.

இதை செயல்முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த புதிய எம்ஆர்ஐ தொழில் நுட்பத்தால் கேன்சர் கட்டிகளை கண்டறிய, ஜெனிடிக் நோய்களான சிஸ்டிக் ஃபைரோஸிஸ் மற்றும் மெட்டா பாலிக் நோய்களான டயாபெட்டீஸ் போன்றவைகளையும் அறியலாம் என்று ப்ளாஸ்க் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் ஸ்சைன்டிவிக் ரிப்போர்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

Now, Multicolour MRIs To Improve Disease Detection

Now, Multicolour MRIs To Improve Disease Detection
Story first published: Saturday, August 19, 2017, 8:00 [IST]
Subscribe Newsletter