ரன்னிங் மேற்கொண்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ரன்னிங் கடுமையான உடற்பயிற்சிகளுள் ஒன்று. எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நினைக்கும் போது முதலில் பின்பற்ற நினைப்பது ரன்னிங்காகத் தான் இருக்கும். ஒருவர் தினமும் ரன்னிங் மேற்கொள்வதன் மூலம் கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும்.

ரன்னிங் பயிற்சியை மேற்கொள்ளும் போது உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும். இதன் விளைவாக அதிகமாக வியர்வையும் வெளியேறும். மேலும் ரன்னிங் பயிற்சி மன அழுத்தத்தில் இருந்து விடுவித்து, ஒருவரை சுறுசுறுப்பாக செயல்படச் செய்யும்.

Never Do These Things After Running

ரன்னிங் பயிற்சியை மாரடைப்பு, ஆர்த்ரிடிஸ், இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மேற்கொள்வது நல்லதல்ல. மோசமான உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், அதன் விளைவாக உடல் நலம் மேன்மேலும் மோசமாகும்.

ரன்னிங் பயிற்சியை மேற்கொள்பவர்கள், அப்பயிற்சிக்கு பின் ஒருசிலவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இக்கட்டுரையில் அவை என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீண்ட நேரம் அமர்வது

நீண்ட நேரம் அமர்வது

ரன்னிங் ஒரு கடுமையான உடற்பயிற்சி மற்றும் இப்பயிற்சியை மேற்கொள்வதால் விரைவில் உடலில் உள்ள ஆற்றல் குறையும். ஆகவே பலர் ரன்னிங் பயிற்சிக்குப் பின், உடலுக்கு ஓய்வு கொடுக்கிறேன் என்று நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு. மாறாக, யோகா அல்லது தியானம் போன்ற லேசான பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இதனால் இழந்த ஆற்றலை மீண்டும் பெறலாம்.

அழுக்கு துணியில் இருப்பது

அழுக்கு துணியில் இருப்பது

ரன்னிங் பயிற்சியால் வியர்வை அதிகம் வெளியேறியிருக்கும். இப்படி வியர்வை உறிஞ்சப்பட்ட அழுக்குத் துணியுடனேயே நாள் முழுவதும் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதில் உள்ள கிருமிகள் சருமத்தில் தொற்றுக்களை உண்டாக்கும். எனவே ரன்னிங் பயிற்சிக்குப் பின், புத்துணர்ச்சியுடன் இருக்க வெதுவெதுப்பான நீரில் குளியல் மேற்கொள்ளுங்கள். இது புத்துணர்ச்சியை வழங்கும்.

போதிய நீர் அருந்தாமை

போதிய நீர் அருந்தாமை

ரன்னிங் பயிற்சியின் போதும் சரி, பயிற்சிக்கு பின்னரும் சரி, தண்ணீர் அருந்துவது மிகவும் இன்றியமையாதது. இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதோடு, போதிய அளவில் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்தையும் சீரான அளவில் பராமரிக்கும். ஆகவே ரன்னிங் பயிற்சிக்கு பின் மறக்காமல் தண்ணீரை அதிகமாக பருகுங்கள்.

அளவுக்கு அதிகமான வேலை

அளவுக்கு அதிகமான வேலை

ரன்னிங் பயிற்சிக்கு பின் கடுமையான வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக வாக்கிங், லேசான வீட்டு வேலை போன்ற சிறு வேலைகளில் ஈடுபடுவதால், உடல் பிட்டாகவும், சுறுசுறுப்புடனும், உடலில் ஆற்றலும் தக்க வைக்கப்படும்.

ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது

ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது

ரன்னிங் பயிற்சிக்குப் பின் பசிக்கிறது என்று பிட்சா, பர்கர் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எடையைக் குறைக்க மேற்கொண்ட ரன்னிங் பயிற்சியே வீணாகிவிடும். வேண்டுமானால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

காலை உணவைத் தவிர்ப்பது

காலை உணவைத் தவிர்ப்பது

ஆரோக்கியமான காலை உணவு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருக்க உதவும். அத்தகைய காலை உணவை ஒருவர் தவிர்த்தால், அது அவர்களை பலவீனமாக்குவதோடு, சுறுசுறுப்பற்றவர்களாகவும் ஆக்கும். அதிலும் ஒருவர் காலையில் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டு காலை உணவைத் தவிர்த்தால், அவர்களது உடலில் ஆற்றலின்றி நாள் முழுவதும் சோம்பேறியாக இருக்கக்கூடும்.

ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டவர்கள் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை காலை வேளையில் உட்கொள்ள வேண்டும். இச்சத்துக்கள் வேக வைத்த முட்டை, பால், நற்பதமான பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள், ஓட்ஸ், தயிர் போன்றவற்றில் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Never Do These Things After Running

There are certain post running practices which we need to reconsider. Read to know...
Story first published: Friday, December 1, 2017, 19:25 [IST]
Subscribe Newsletter