Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
4 வருட சிறை வாழ்க்கையில் சசிகலா சந்திக்க வாய்ப்புள்ள சில பிரச்சனைகள்!
இங்கு சிறையில் இருந்தால் சந்திக்க நேரிடும் சில உடல் நல பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் சூழலே மிகவும் மோசமாக இருந்தது. ஜெயலலிதா இறந்த பின்பு, முதல்வர் பதவிக்கு சசிகலாவிற்கும், ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இறுதியாக இன்று சசிகலா மீதிருந்த சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில், சசிகலா குற்றவாளி என கூறி 4 வருட சிறை தண்டனை கிடைத்துவிட்டது.

இவ்வளவு நாட்கள் நடத்திய நாடகம் அனைத்தும் வீணாகிவிட்டது. இனிமேல் சிறை வாழ்க்கையைத் தான் வாழப் போகிறோம் என்பது முடிவாகிவிட்டது. மேலும் சசிகலாவிற்கு உடல்நல பிரச்சனை இருப்பதாக எந்த ஒரு ரிப்போர்ட்டும் இல்லை.
இருப்பினும், சிறை வாழ்க்கை கொடுமையாக இருக்கும் என்பதால், 3.6 வருட வாழ்க்கையை ஒருசில வசதிகளுடன் கழிக்க சிறை அதிகாரிகளுக்கு தனது விருப்பப்பட்டியலை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

சசிகலாவின் விருப்பப் பட்டியல்
வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டுச் சாப்பாடு, வாக்கிங் செல்வதற்கு இடம், 24 மணிநேர தண்ணீர் வசதி, குடிப்பதற்கு மினரல் வாட்டர் போன்றவையே சிறை செல்லும் சசிகலாவின் வேண்டுகோள்.
முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சென்றதால், சகல வசதிகளுடன் கூடிய அறையில் இருந்தார். ஆனால் இந்த முறை விஐபி அறைகளைத் தான் கொடுக்க உள்ளார்கள். இருந்தாலும், ஜெயில் என்றாலே சுத்தத்தை எதிர்பார்க்க முடியாது தானே. இங்கு சிறையில் இருந்தால் சந்திக்க நேரிடும் சில உடல் நல பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சளி, இருமல்
சிறையில் சுகாதாரம் சற்று குறைவாக இருப்பதால், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சரும அரிப்புகள்
யாராலும் சிறையில் மிகவும் சுத்தமாக இருக்க முடியாது. எனவே சரும அரிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சுவாச பிரச்சனைகள்
சிறை அறையில் அலர்ஜியை உண்டாக்கும் தூசிகள் மற்றும் பூச்சிகளால், சுவாச பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

சிறுநீரக பாதை தொற்று
சிறையில் கழிவறைகள் அசுத்தமாகவும், அழுக்காகவும் இருப்பதால், பெண்களுக்கு சிறுநீரக பாதை தொற்றுகள் வரும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மன அழுத்தம்
சிறையில் நான்கு சுவற்றிற்கு உள்ளேயே இருப்பதால், கண்டதை நினைத்து மனதில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி மன அழுத்தம் அதிகமானால், அதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications