For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஸ்பெஷல் உணவுகள் என்னென்ன?

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகள்.

|

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய உடல் ஆரோக்கியம் சருமம் போன்றவற்றை ஆரோக்கியத்துடன் பராமரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்கு தனிப்பட்ட முறையில் நீங்கள் மெனக்கெட தேவையில்லை மாறாக ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

Foods for Women

பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளும் அது எதற்காக என்ற விளக்கத்தையும் இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பகம் :

மார்பகம் :

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக,ப்ரோக்கோலி,க்ரீன் டீ சாப்பிடலாம். இதில், இண்டோல் 3 கார்பினோல் என்ற ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுத்திடும்.

பற்கள் :

பற்கள் :

பற்களுக்கும் எலும்புகளுக்கும் அத்தியாவசியமான ஒரு சத்து என்றால் அது கால்சியம் தான். உடலுக்கு தேவையான கால்சியத்தை உறிந்து கொள்ள விட்டமின் டி மிகவும் அவசியம். கீரை வகைகள் மற்றும் ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சத்துக்கள் இருக்கிறது. விட்டமின் டீ இயற்கையாகவே சூரியனிலிருந்து நமக்கு கிடைக்கும்.

ஹார்மோன்ஸ் :

ஹார்மோன்ஸ் :

பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க ஒமேகா3 ஃபேட்டி ஆசிட், விட்டமின் இ மற்றும் விட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். நட்ஸ் வகைகள் மற்றும் மீன் சாப்பிடலாம்.

 உடல் எடை :

உடல் எடை :

வளர் இளம் பெண்களுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று ப்ரோட்டீன். இது நம் உடலின் மெட்டபாலிசத்தை சரி செய்வதால் உடல் எடையை அதிகரிக்காமல் வைத்திருக்க முடியும். உடல் எடைக்கு ஏற்ப ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம். முட்டை,பீன்ஸ் வகைகளை சாப்பிடலாம்.

நரம்பு :

நரம்பு :

நரம்பு மண்டலத்தை பாதுகாக்க பீட்ரூட்,கேரட், அவகோடா போன்றவை எடுத்துக் கொள்ளலாம். நம் உடலில் புதிய செல்களை உருவாக்குவது ஃபோலிக் அமிலம் தான். இவை நம் மனதையும் எமோஷனல் ஆக்காமல் வைத்திருக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods for Women

Foods for Women that boost their health
Story first published: Monday, August 21, 2017, 13:37 [IST]
Desktop Bottom Promotion