தைராய்டு பிரச்சனையை இயற்கை வழியில் சரிசெய்ய வேண்டுமா? அப்ப இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

கழுத்துப் பகுதியில் இருக்கும் ஒரு முக்கிய சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. தற்போது பெரும்பாலான மக்கள் இந்த தைராய்டு பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். பலருக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளதா என்றே தெரிவதில்லை. இதனால் தங்களுக்கு உள்ள தைராய்டு பிரச்சனையை முற்றிய நிலையில் தான் கண்டுபிடிக்கின்றனர்.

Doctors Hide This, Learn How to Heal Your Thyroid Naturally

தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடலின் பல்வேறு முக்கிய செயல்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த ஹார்மோன்களின் உற்பத்தியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதன் காரணமாக உடல் உபாதைகளை சந்திக்கக்கூடும். தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சனையை சரியான டயட், ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் மன அமைதி போன்றவற்றால் சரிசெய்யலாம்.

அதுமட்டுமின்றி, ஒருசில இயற்கை வழிகளின் மூலமும் தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சனையை சரிசெய்ய முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் குடித்து வந்தால், தைராய்டு சுரப்பிக்கு ஊட்டமளிக்கப்பட்டு, ஆரோக்கியமாக இருக்கும். மேலும் தேங்காய் எண்ணெய் செரிமான மண்டலத்தின் இயக்கத்தையும் மேம்படுத்தும் மற்றும் ஃபிட்டாகவும் இருக்க செய்யும்.

எலும்பு குழம்பு

எலும்பு குழம்பு

ஆட்டு எலும்பை குழம்பு வைத்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள், தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கடற்பாசி/கடற்பூண்டு

கடற்பாசி/கடற்பூண்டு

கடல் காய்கறிகளான கடற்பாசி/கடற்பூண்டில் அயோடின் இருப்பதோடு, மற்ற சக்தி வாய்ந்த உட்பொருட்களும் உள்ளது. ஆகவே தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கடற்பாசி சூப்பை அவ்வப்போது குடிக்க, தைராய்டு பிரச்சனை நீங்கும்.

வைட்டமின் ஏ, டி மற்றும் கே

வைட்டமின் ஏ, டி மற்றும் கே

இந்த மூன்று வைட்டமின்களும், தைராய்டு ஹார்மோனின் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாதது. பெரும்பாலும் இந்த வைட்டமின் குறைபாட்டினால் தான் தைராய்டு பிரச்சனையை பலர் சந்திப்பார்கள். ஆகவே இச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் யோகா அல்லது ஜூடோ போன்ற சில பயிற்சிகளை தினமும் மேற்கொண்டால், அது தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு உதவும்.

க்ளூட்டன் உணவுகள்

க்ளூட்டன் உணவுகள்

க்ளூட்டன் உணவுகள் சிலரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் இடையூறை உண்டாக்கி, தைராய்டு நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே க்ளூட்டன் உணவுகளில் இருந்து விலகி இருப்பது தைராய்டு சுரப்பிக்கு நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Doctors Hide This, Learn How to Heal Your Thyroid Naturally

Want to know how to heal your thyroid problem naturally? Read on to know more...
Subscribe Newsletter