For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கும் மெனோபாஸ் வருமா? அதன் அறிகுறிகள் என்ன?

ஹார்மோன் மாற்றத்தினால் உண்டாகும் மெனோபாஸ் ஆண்களுக்கும் உண்டாகிறது அவை குறித்த சில அடிப்படைத் தகவல்கள்

|

பெண்களுக்கு மட்டும் ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்காக ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஹார்மோன் குறைபாடு பாதிக்கிறது. அதில் ஒன்று தான் மெனோபாஸ். பெண்களின் உடலில் குறிப்பாக 45 வயதைக் கடந்த பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அவர்களுக்கு மெனோபாஸ் ஏற்படுகிறது அது மாதவிடாய் நிற்கும் பருவமும் கூட.

ஆண்களுக்குத் தான் மாதவிடாய் இல்லையே என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஆண் பெருமக்களே உங்களுக்கும் 50 வயதை நெருங்கும் போது மெனோபாஸ் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. ஆண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்களின் மெனோபாஸ் என்றால் ? :

ஆண்களின் மெனோபாஸ் என்றால் ? :

ஆண்களில் உடலில் சுரக்கும் டெஸ்ட்ரோன் சுரப்பு குறையும். இதனால் தாம்பத்தியத்தில் நாட்டம் குறைவது உட்பட மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும். இதனை சில அறிகுறிகள் வைத்தே கண்டுபிடிக்கலாம்.

உடல் எடை :

உடல் எடை :

ஒருவரின் உடல் அமைப்பு ஆண் தன்மையோடு இருப்பதற்கு டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்தான் காரணம். இந்த டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறையும்போது, உடலில் கொழுப்பு அதிகரிக்கும். அதனால் அதிகமான மனஅழுத்தம் ஏற்படும். இந்த ஹார்மோன் உயர்வால், உடலில் கொழுப்பு செல்கள் அதிகமாகி, எடை கூடும்.

ஆண்மைக்குறைவு :

ஆண்மைக்குறைவு :

டெஸ்ட்ரோன் அளவு குறைந்துவிடும்போது விந்தணுக்களின் உற்பத்தியும் அவை நகரும் தன்மையும் குறையும். இதனால் ஆண்மைக்குறைவு ஏற்படும். தொடர்ச்சியான மனஅழுத்தம், ஆரோக்கியக் குறைவு போன்றவற்றால் கார்டிசால் உயரும்போதும் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

சோர்வு :

சோர்வு :

இரவு முழுக்க நன்றாக ஓய்வெடுத்த பிறகும் உடல் சோர்வாக இருக்கிறதா? அப்படியென்றால், டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறைந்திருக்கும். டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறையும்போது சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படும்.

கார்டிசால் (Cortisol) ஹார்மோன் நமது தூக்கத்தைச் சீராக்க உதவுகிறது. தொடர்ச்சியான மனஅழுத்தம், கார்டிசாலின் அளவை அதிகரித்துவிடும். இதனால் சோர்வு, நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறையும்போது மனச்சோர்வு ஏற்படும்.தைராய்டு ஹார்மோனில் ஏற்படும் குறைபாடு மனநிலை மாற்றம், மகிழ்ச்சியின்மை, ஊக்கமின்மைக்கு வழிவகுக்கும். இதனால் மன அழுத்தம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. வீண் கோபம்,எரிச்சல் உண்டானால் டெஸ்ட்ரோன் அளவை பரிசோதித்திடுங்கள்.

முடி உதிர்தல் :

முடி உதிர்தல் :

டெஸ்ட்டோஸ்டீரானுக்கு வேறு எந்த மூலக்கூறாகவும் மாறும் தன்மை உண்டு. முடியில் உள்ள ஒரு என்ஸைம் (Enzyme ) டெஸ்ட்டோஸ்டீரானை , டைஹைட்ரோ டெஸ்ட்டோஸ்டீரானாக (Dihydrotestosterone ) மாற்றிவிடுகிறது.

மிகவும் சக்திவாய்ந்த இந்த ஹார்மோன் , வழுக்கைக்கு முக்கியமான காரணம். இந்த ஹார்மோனால் முடி பலவீனமடையும். இதனால் முடி வலுவிழந்து உதிரத்துவங்கும்.

மார்பகம் :

மார்பகம் :

பெண்களின் மார்பக அமைப்புக்கு காரணமான ஹார்மோன், ஈஸ்ட்ரோஜென். சாதாரணமாக, ஓர் ஆணின் உடல், ஈஸ்ட்ரோஜென்னைவிட, டெஸ்டோஸ்டீரானைத்தான் அதிகமாக உற்பத்தி செய்யும். அதனால்தான் ஆண்களுக்கு தட்டையான மார்பகம் இருக்கிறது.

இந்த அமைப்புக்கு டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோன்தான் காரணம். ஆண்களின் ஹார்மோனில் சமநிலை இல்லையென்றால் உடலில் டெஸ்ட்டோஸ்டீரான் குறைவாகவும், ஈஸ்ட்ரோஜென் அதிகமாகஅதிகமாகவும் சுரக்கும்.

இதன் காரணமாக, ஆண்களின் மார்பகம் மாறுதலுக்கு உள்ளாகும். லேசாக வளர்ச்சி அடைந்ததுபோலக்கூடத் தெரியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do you know about Male menopause

Do you know about Male menopause
Story first published: Saturday, October 7, 2017, 16:27 [IST]
Desktop Bottom Promotion