பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் தீமைகள்!

Written By:
Subscribe to Boldsky

ஹை ஹீல்ஸ் இன்றைய நவ நாகரிக உலகில் பெண்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்று. இதனை அணிவதை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். இது தோற்றத்தையும் ஸ்டைலையும் மாற்றுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

இதனை மிக அதிகமாக நடிகைகளும், மாடல்களும் பயன்படுத்துகின்றனர். பெண்கள் இது போன்ற ஹை ஹீல்ஸ் செருப்புகளை பயன்படுத்துவதால் பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. அதுபற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூட்டு வலி

மூட்டு வலி

ஹை ஹீல்ஸ் காலணிகளை பெண்கள் மிக நீண்ட நேரம் அணிவதால் அவர்களுக்கு எளிதில் மூட்டுக்களில் வலி உண்டாகிறது.

ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது நேராகவே இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. கால்களை வளைக்க சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. இது மூட்டு வலிக்கு காரணமாகிறது.

தசைப்பகுதி மாற்றம்

தசைப்பகுதி மாற்றம்

பெண்கள் இந்த ஹை ஹீல்ஸ் காலணிகளை அணிவதால், தசைகள் பகுதிகளில் மாற்றங்கள் உண்டாகின்றன. நீண்ட காலமாக ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு தசைப்பகுதி சுருங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழ் முதுகு வலி

கீழ் முதுகு வலி

இதனை பெண்கள் நீண்ட நேரம் அணிவதால் அவர்களுக்கு கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. ஹை ஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடப்பது மற்றும் நிற்பது போன்றவை பெண்களுக்கு அசௌகரியமான ஒன்றாகவும், முதுகு வலியை ஏற்படுத்தும் ஒன்றாகவும் உள்ளது.

அதிக வலி

அதிக வலி

உடலின் எடை முழுவதையும் உங்களது கால்கள் தான் தாங்குகின்றன. ஹை ஹீல்ஸ் காலணிகளை நீங்கள் அணியும் இது அதிகப்படியான வலியை உண்டாக்குகிறது.

சாதாரண காலணிகள்

சாதாரண காலணிகள்

ஹீல்ஸ் அல்லாத சாதாரண காலணிகளை நீங்கள் பயன்படுத்தினால், உடலின் எடை சரியான அளவில் தாங்கப்படும். இதனால் உங்களுக்கு சௌரியமாகவும், வலிகள் ஏதும் இல்லாமலும் இருக்கும்.

தரமான காலணிகள்

தரமான காலணிகள்

காலணிகள் தானே என்று ஏதோ ஒன்றை வாங்கி பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. தரமான காலணி வகைகளையே பயன்படுத்த வேண்டும். அவை நீண்ட நேரம் உபயோகப்படுத்த ஏற்றதாகவும், அணிவதற்கு வசதியாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

ஹீல்ஸ்

ஹீல்ஸ்

ஹீல்ஸ் செருப்புகளை உபயோகப்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால், அவற்றை மிக நீண்ட நேரம் எல்லாம் பயன்படுத்துவது கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Disadvantages of Using High Heels

Disadvantages of Using High Heels
Story first published: Tuesday, August 1, 2017, 18:15 [IST]