கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்

Posted By:

Village Style Mutton Elumbu Kulambu Recipe in Tamil: சண்டே வந்தாலே பெரும்பாலான வீடுகளில் சிக்கன் அல்லது மட்டன்தான். இந்த வார சண்டேவும் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கி செய்யப் போகிறீர்களா? எப்போதும் மட்டனை ஒரே சுவையில் தான் குழம்பு வைத்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் சற்று வித்தியாசமான சுவையில் மட்டன் குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கறி விருந்துகளில் பரிமாறப்படும் சுவையான கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.

Mutton Elumbu Kulambu Recipe How to Make at Home in Tamil

எவ்வளவு பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் கறி விருந்துகளில் பரிமாறப்படும் மட்டன் குழம்பின் சுவையே தனிதான். இந்த குழம்பில் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு போன்றவை சேர்த்து குழம்பு வைப்பதால் இதன் வாசனையே வேற லெவலில் இருக்கும். இந்த மட்டன் குழம்பு இட்லி, தோசையுடன் சாப்பிட மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சுருக்குனு சூப்பரா இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- எலும்புடன் கூடிய மட்டன் - அரை கிலோ
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 பெரியது (நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- தண்ணீர் - 1 கப்

குழம்பு வைக்க:

- சின்ன வெங்காயம் - 200 கிராம்
- பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - ½ கப்
- தக்காளி - 3 (நறுக்கியது)
- உருளைக்கிழங்கு - 2 (தோல் சீவி, துண்டுகளாக நறுக்கியது)
- முருங்கைக்காய் - 1
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

தாளிக்க:

- எண்ணெய் - ¼ கப்
- இலவங்கப்பட்டை - 2
- சோம்பு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- ஏலக்காய் - 5
- கிராம்பு - 5
- பிரியாணி இலை - 1
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

செய்முறை:

- முதலில் மட்டனை நன்றாக கழுவி மட்டனை வேகவைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரு பிரஷர் குக்கரில் சேர்த்து, மூடி வைத்து 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

- பின்னர் அடுப்பைக் குறைத்து வைத்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, ஆவி தானாக அடங்கும் வரை காத்திருக்கவும். பிறகு குக்கரைத் திறந்து தனியே எடுத்து வைக்கவும்.

- தேங்காயை மென்மையாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.

- பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

- அதன்பின் தக்காளியைச் சேர்த்து, அவை நன்கு குழையும் வரை மூடி வைத்து வேகவைக்கவும்.

- தக்காளி வெந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து அவற்றின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், வேகவைத்த ஆட்டிறைச்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

- இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.

- கடைசியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து அடுப்பது அணைத்தால் சுவையான கிராமத்து ஸ்டைல் கறிவிருந்து மட்டன் குழம்பு ரெடி!

[ of 5 - Users]
Story first published: Saturday, June 6, 2026, 21:37 [IST]
Desktop Bottom Promotion