உங்க வீட்ல தினமும் யூஸ் பண்ற இந்த பொருட்களால் ஆண்மை குறைபாடு வரும்னு தெரியுமா? இதப் படிங்க

Posted By: Peveena Murugesan
Subscribe to Boldsky

பிளாக்ஸ்பர்க்கில் உள்ள எட்வர்ட் வியா கல்லூரி மற்றும் விர்ஜினியா மேரி லேண்ட் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த ரசாயனங்களை சுண்டெலிகள் மற்றும் எலிகளின் மீது பரிசோதித்து எந்த வகையான விளைவுகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்தனர்.

விர்ஜினியா மேரி லேண்ட் கல்லூரியின் கால்நடை மருத்துவர் மற்றும் உடற்கூறியல் இணை பேராசிரியருமான டெர்ரி ஹூயூபிக் என்பவர் மேற்கூறிய ஆராய்ச்சிகளின் படி பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.

Did you know house cleaning agents may cause for birth defects

வீட்டில் பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் :

ஹூயூபிக் மற்றும் அவரது குழு பொதுவான வீட்டில் உபயோகிக்கும் ரசாயனங்களில் பயன்படுத்தப்படும் "நான்காம் நிலை அம்மோனியம்" பற்றி ஆராயத் தொடங்கினர்.

இவற்றில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டிஸ்டிக் பண்புகளால் இவை பெரும்பாலும் கிருமிநாசினிகளை நீக்கும் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள்,சலவை சோப்பு மற்றும் துணிகளை மென்மையாக்கும் மென்மைப்படுத்திகளில் பயன்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஷாம்பூ,கண்டிஷனர் மற்றும் கண் சொட்டு மருந்து போன்ற சுகாதார பொருள்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

Did you know house cleaning agents may cause for birth defects

ஹூயூபிக் மற்றும் அவரது குழு 2 வகையான அம்மோனியத்தைப் பற்றி ஆராய்ந்தனர்.அவை:

ஆல்கைல் டை மெத்தில் பென் என்சைல் அம்மோனியம் குளோரைடு மற்றும் டைடெஸீல்டி மெத்தில் அம்மோனியம் குளோரைடு ஆகும்.இந்த இரண்டும் பொதுவாக அனைத்து சுத்தம் செய்யும் பொருட்களிலும் இணைந்து காணப்படுகின்றன.இவற்றை ஆராய்ச்சியாளர்கள் எலிகள் மீது பயன்படுத்தி பரிசோதித்தனர்.

ஆண் மற்றும் பெண் எலிகளில் மேற்கூறிய 2 வகை அம்மோனியம் குளோரைடுகளும் கிருமித் தொற்றினை உருவாக்கின.அவைகள் உண்ணும் உணவு மற்றும் சுற்றுப்புறம் வாயிலாக பரிசோதிக்கப்பட்டன.

Did you know house cleaning agents may cause for birth defects

அவற்றின் உணவு அவற்றின் உடல் எடையைப் பொறுத்து மாறுபடுகின்றது.ஒரு கிலோ உடல் எடைக்கு 60 (அ) 120 மில்லிகிராம் (அ) 7.5,15 (அ) 30 மில்லிகிராம் அளவும் கொடுக்கப்படுகின்றது.மேலும் இறுதியாக அவை சுற்றுப்புறங்களில் குவிந்து கிடக்கும் கொறித்து உண்ணும் சில வகை உணவுகளிலும் இவற்றை பயன்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

ஹூயூபிக் மற்றும் அவரது குழு எலிகளின் கர்ப்ப காலத்தில் 10-வது நாளில் மற்றும் 18-வது நாளில் உடலின் மொத்த உறுப்புகள் மற்றும் எலும்புகள் பற்றி ஆராய்ந்தனர்.ஆனால் இந்த ரசாயனங்கள் நரம்பு குழாய் குறைபாடுகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த குறைபாடுகள் ரசாயனங்கள் சுற்றுப்புறங்களில் பரவுவது மூலமாக அதிகமாக ஏற்படுகிறது.

Did you know house cleaning agents may cause for birth defects

பெரும்பாலும் இந்த குறைபாடுகள் கர்ப்பகாலத்தின் முதல் மாதம் ,மூளை மற்றும் தண்டுவடம் ஆகியவற்றைப் பாதிக்கிறது.குறிப்பிடத்தக்க வகையில் இவை ஆண் எலிகளுக்கு இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.பெரும்பாலும் இவை சுற்றுப்புற சூழலில் பரவியே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தை பிறப்பின்மை:

பொதுவாக பெற்றோர்களில் ஒருவர்க்கு இந்த குறைபாடு இருந்து அவை கண்டுபிடிக்கப்பட்டால் அவை பிள்ளைகளுக்கும் இந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஹூயூபிக் கூறுகிறார்.அதாவது இந்த பிறப்பு குறைபாடுகள் தந்தைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களில் இருந்து 2 தலைமுறை இதனால் பாதிக்கப்படும் என்பதாகும்.

ஹூயூபிக் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் அவை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதே போன்ற ஒரு ஆய்வில் எலிகளிலுள்ள இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் என்று கண்டறிந்து மேலும் தொடர்ந்த ஆய்வில் ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தும் பெண்களில் இனப்பெருக்க திறன் மிகவும் குறைந்தும் காணப்படுவதைக் கண்டறிந்தனர்.

Did you know house cleaning agents may cause for birth defects

இந்த ரசாயனங்கள் பொதுவாக வீடு,மருத்துவமனை,பொது இடங்கள்,நீச்சல் குளங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் ஹூயூபிக்.பெரும்பாலான மக்கள் இதை தினமும் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

உயிரியல் ஆராய்ச்சிக்கான துறையானது ஆராய்ச்சியாளர்களின் கூடமாகும்.இங்கு இந்த ரசாயனங்கள் மனிதர்களுக்கு நச்சு தன்மையை அளிக்கக் கூடியது என்று இதை உபயோகிப்பதற்கு பெரிய தடை விதித்துள்ளது.மேலும் இந்த ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனை மற்றும் உணவகங்களில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனையும்,பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதும் போன்ற வாய்ப்புகள் அதிகம் என்று ஹூயூபிக் கூறுகின்றார்.

தற்போது இந்த ரசாயனங்கள் அதிகம் உபயோகிப்பதை ஐக்கிய நாடுகள் சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனம் கட்டுப்படுத்துகின்றது.

எனவே அதிகமான ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிக்கும்போது கைகளில் உறையும் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்களை உபயோகிக்க பழகுங்கள்.

English summary

Did you know house cleaning agents may cause for birth defects

Did you know house cleaning agents may cause for birth defects
Story first published: Thursday, June 22, 2017, 13:30 [IST]