இப்படியே செஞ்சுட்டு இருந்தா கொஞ்ச நாள்ல உங்க சிறுநீரகம் பழுதாகிறும்..!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

சீறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. இது ஒரே இரவில் வந்து விடும் பிரச்சனை அல்ல. இது நீண்ட வருட தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடியது. அவை என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. புகைப்பிடித்தல்

1. புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தலால் இரத்த அழுத்தம் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது. இது கார்டிவாஸ்குலர் இருதய நோய்க்கும் காரணமாகிறது. புகைப்பிடிப்பதால், சிறுநீரகத்தில் உள்ள இரத்த குழாய்கள் பாதிப்படைகின்றன. இது உங்கள் சிறுநீரகம் பழுதடைய காரணமாகிறது.

2. சிறுநீரை அடக்கி வைத்தல்

2. சிறுநீரை அடக்கி வைத்தல்

அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் இருப்பதும் சிறுநீரக பிரச்சனைக்கு காரணமாகிறது. இயற்கையாக நடக்கும் இந்த நிகழ்வை நீங்கள் கட்டுப்படுத்தினால் பாதிப்படைவது உறுதி. சிறுநீர் மூலமாக உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுகின்றன. இதை கட்டுப்படுத்தி வைப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

3. அதிகமான இனிப்பு பொருட்கள்

3. அதிகமான இனிப்பு பொருட்கள்

தொடர்ந்து அதிகமாக சாக்லேட், பேக் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள், சோடா போன்ற இனிப்பு உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகம் பழுதாகிறது. அதிக அளவு ப்ரூக்டோஸ் (fructose) உணவுகளை எடுத்துக்கொள்வது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. எனவே குறைந்த சக்கரை அளவும் அதிக பைபர் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது.

4. இரத்த அழுத்தத்தை பரிசோதிக்காமல் இருப்பது

4. இரத்த அழுத்தத்தை பரிசோதிக்காமல் இருப்பது

அதிக இரத்த அழுத்தம் உங்கள் சிறுநீரகம் பழுதடைய காரணமாகிறது. உங்கள் உடலுகேற்ற சரியான இரத்த அழுத்த அளவை சீராக பராமரித்து வருவது அவசியம். இதை அடிக்கடி பரிசோதித்து தெரிந்துகொள்வதும் அவசியம்.

5. அதிகமான மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்

5. அதிகமான மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை அவர் குறிப்பிட்ட கால அளவிற்கு எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால் அதிக நாட்களுக்கோ, அதிக டோஸ்களையோ மருத்துவர் பரிந்துரையின்றி நீங்களாகவே சாப்பிடுவது கூடாது.

6. உடற்பயிற்சிகளை தவிர்த்தல்

6. உடற்பயிற்சிகளை தவிர்த்தல்

உடற்பயிற்சி செய்வது உடலில் சக்கரை அளவையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தி உடலை சீராக இயங்க வைக்க உதவுகிறது. இதனால் அவற்றின் அளவு அதிகரித்து சிறுநீரகம் பாதிப்படைய காரணமாகிறது.

7. ஆல்கஹால்

7. ஆல்கஹால்

அதிக அளவு ஆல்கஹாலை எடுத்துக்கொள்வது சிறுநீரக அமைப்பை பாதிப்படைய செய்கிறது. ஆல்கஹால் நுரையிரலை பாதிப்பதுடன் சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைக்கிறது.

8. உப்பு

8. உப்பு

உங்களது உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக்கொள்வதை தடுக்க வேண்டும். குறிப்பாக அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது.

9. தண்ணீர்

9. தண்ணீர்

குறைவாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகம் பழுதடைய காரணமாக உள்ளது. சிறுநீரகம் சரியாக வேலை செய்ய போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

common habits that damage kidneys

here are the some common habits that damage kidneys
Story first published: Saturday, May 27, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter