தொடர்ந்து மாசுப்பட்ட காற்றை நாம சுவாசிச்சா என்ன ஆபத்து உண்டாகும்னு தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

வருடந்தோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுற்றுசூழல் மாசினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது வழக்கம். உலகம் வெப்பமயமாதல், காற்று மாசுபடுதல் போன்றவை முக்கியமான பிரச்சனைகள். இந்த வருடத்தின் கருப் பொருள் 'மக்களை இயற்கையோடு இணைப்பது' ஆகும்.

உலகின் பல நகரங்களில் சுத்தமான காற்று என்பதே இல்லை. மாசடைந்த காற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கூறுகள் கலந்துள்ளன. மாசடைந்த காற்றினால் கடந்த ஒரு ஆண்டில் 2 மில்லியன் பேர் காற்று மாசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இங்கு காற்று மாசுபடுதல் குறித்த சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

காற்று மாசுபாடு சிறுநீர்ப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் என சில ரிப்போர்ட்டுகள் கூறுகின்றன. மாசடைந்த காற்றை சுவாசிப்பது என்பது சிகரெட் புகையை சுவாசிப்பதற்கு சமம். அதோடு மாசுக்கள் நிறைந்த காற்றினை சுவாசிப்போருக்கு நுரையீரல் புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது.

உண்மை #2

உண்மை #2

காற்றினை எது மாசடைய வைக்கிறது? தற்போது போக்குவரத்து, தொழில்துறை உமிழ்வு, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் குடியிருப்பு கேஜெட்டுகள் போன்றவைகள் தான் காற்றினை மாசடைய வைக்கிறது. இதன் காரணமாக இதய நோய் மற்றும் சுவாச பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

 உண்மை #3

உண்மை #3

இன்று சில இடங்களில் மாசுபாடுகளானது ஆபத்தான நிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இது மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் தொழில்மயமான நகரங்களில் அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 உண்மை #4

உண்மை #4

எலி கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலிகளை மாசடைந்த காற்றினை சுவாசிக்க வைத்ததில், அந்த எலிகளுக்கு நுரையீரல் கட்டிகளின் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதிலும் மாசடைந்த காற்றில் தான் முதன்மையான மனித கார்சினோஜென்களாக கருதப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் உள்ளன.

உண்மை #5

உண்மை #5

காற்று மாசுபாடு ஒவ்வொரு இடத்திலும் வேறுபடும். அதில் ஆசியா, வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா போன்றவை மிகவும் மாசுபடுத்தப்பட்ட இடங்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

World Environment Day: Can Air Pollution Cause Lung Cancer

World Environment Day: Can Air Pollution Cause Lung Cancer
Story first published: Tuesday, June 6, 2017, 13:20 [IST]