நோய் எதிர்ப்புத் திறனை அதிகமாக்கும் ஒயினைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

ரெட் ஒயின் என்றதும் ஆரோக்கிய ஆசாமிகள் ஹய்யயோ உடலுக்கு தீங்கு என்று ஓடத் தேவையில்லை. தினமும் அரை கிளாஸ் ஒயின் குடிப்பதால் நிறைய நன்மைகள்தான் உண்டாகின்றன்.

Wine is a healthy drink for healthy teeth

ஒயினில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பினை குறைக்கிறது. சுருக்கங்களை போக்குகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. ரெட் ஒயின் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

காயங்களை குணப்படுத்தும் :

உடலில் காயம் அல்லது வீக்கம் ஏற்பட்டால், சிறிது ஒயினை காட்டன் பஞ்சினால் நனைத்து, அந்த பாதிக்கப்பட்ட இடங்களில் வைக்க வேண்டும். குறைந்தது 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். ஒயினில் வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும், கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

Wine is a healthy drink for healthy teeth

மன அழுத்தத்தை போக்குகிறது ;

நரம்புகளுக்கு ஒயின் புத்துணர்ச்சியை தரும். வாரத்திற்கு 2- 7 கிளாஸ் வரை ஒயின் குடித்தால், மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.

கண் பார்வை தெளிவு :

அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் லிலுள்ள வாஷிங்க்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற பல்கலைக்கழக ஆய்வின்படி, ரெட் ஒயின் குடிப்பதனால் சர்க்கரை வியாதியினால் வரும் கண்குறைபாடான ரெட்டினோபதியை தடுக்கலாம் மற்றும் வயது காரணமாக கண்பார்வை குறைவதையும் தடுக்க முடியும். கண்பார்வை தெளிவாக இருக்கும். என்று ஆய்வில் கூறியுள்ளது.

Wine is a healthy drink for healthy teeth

பற்களை பாதுகாக்கிறது :

ரெட் ஒயின் குடிப்பதனால் பற்களில் ஏற்படும் சிதைவை தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பற்களில் உருவாகும் பாக்டீரியாக்களை ரெட் ஒயின் அழிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Wine is a healthy drink for healthy teeth

நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிப்பு :

வாரம் தவறாமல் ரெட் ஒயின் குடிப்பதால், காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவை வராமல் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் எதிர்ப்பு செல்களை அதிகரிக்கச் செய்கிறது. தொற்றுக்களை அழிக்கிறது.

Wine is a healthy drink for healthy teeth

கொலஸ்ட்ரால் அளவு குறையும் :

இது கல்லீரலில் நல்ல கொலஸ்ட்ராலை (HDL) 12% அதிகரிக்கச் செய்கின்றது. நல்ல கொலஸ்ட்ரால் இதயத்தில் படியும் கெட்ட கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு செலுத்துகின்றது. அங்கே கெட்ட கொழுப்பு முழுவதும் செரிமானத்திற்கு உட்பட்டு, சக்தியாக மாறுகிறது. இவ்வாறு உடலில் உண்டாகும் கொழுப்பினை குறைக்கிறது.

முதுமையை தடுக்கிறது :

Wine is a healthy drink for healthy teeth

கொலம்பியா பல்கலைக் கழகம் செய்த ஆராய்ச்சியில் ரெட் ஒயின் குடித்தால் சுருக்கங்கள் வராமல், சரும முத்ர்ச்சியை தடுத்து, இளமையை நீட்டிக்க்ச் செய்கின்றது என தெரிய வந்துள்ளது.

English summary

Wine is a healthy drink for healthy teeth

Wine is a healthy drink for healthy teeth
Please Wait while comments are loading...
Subscribe Newsletter