For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராணுவ பெண்களுக்கு ஏன் அதிக அளவு மன அழுத்தம் உள்ளது?

|

இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவு இது. இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றில் பெரும்பங்கு நமது இந்திய ராணுவத்திற்கு உள்ளது.

அதே போல், இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப்பணிகளிலும் இரவு பகல் பாராமல் ராணுவம் செயல்படுகிறது. இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

Why mental stress is common for army women

இந்திய ராணுவத்தில் பணிபுரிவது அவ்வளவு எளிதல்ல. அதிலும் பெண்கள் ஈடுபடுவது தலைவணங்கக் கூடியது. காரணம் பெண்களின் உடல் அமைப்பிற்கும் மன உணர்வுகளுக்கும் ஏற்ற வகையில் ஈடுசெய்து அங்கே பணிபுரிவது சவாலான விஷயம்.

அங்கு ராணுவ மருத்துவ மனைகளில், போர் குழுவில், பாதுகாப்பு அலுவலகங்கள் என பெண்கள் இத்துறையில் இல்லாத இடம் இல்லை.

இது பாராட்டகுரியது என்றாலும், இன்னொரு வகையில் மனதளவில் மிகவும் அழுத்தம் தரகூடிய வேலை. இதனால் ராணுவத்தில் வேலை செய்யும் பெண்கள் () எனப்படும் மிகவும் முற்றிய மன அழுத்தத்திற்கு உள்ளாகிரார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சாதாரண பெண்களுக்கு வரும் மன கஷ்டங்களை விட 20 மடங்கு அதிக மன அழுத்தற்கு ஆளாகிறார்கள். இந்த மன அழுத்தம் அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளையும் தருகிறது. இந்த பிரச்சனைக்கு வடிகாலாய் அதிக அளவு மது அருந்த ஆரம்பிக்கிறார்கள்.

உடலில் உண்டாகும் காயங்கள், தாக்குதல், போர்க்கால பயிற்சிகள், மற்றும் போரின்போது உண்டாகும் காயங்கள் ஆகியவைகள் பெண்களுக்கு அப்போது உண்டாக்கும் பிரச்சனைகளை விட , அதன் பிறகு உண்டாகும் பல பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் ராணுவ பெண்மணிகள் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரான் போரினை எதிர்கொள்ள முடியாமல் சுமார் 42, 397 பேர் வெளிவேறினர்.

இவர்கள் வெளியேறி வந்தாலும், அதனால் உண்டான பாதிப்புகளிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் நடவடிக்கைகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என அமரிக்காவிலுள்ள பிராண்டீஸ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் ரச்சேல் ஆடம் என்பவர் கூறியிருக்கிறார்.

ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கு, பணியில் ஈடுபடுவதற்கு முன்பாகவே மனதளவில் நிறைய பயிற்சிகள் முதலில் அளிக்கப்படவேண்டும். இதனால நிறைய பிரச்சனைகள் பெண்களுக்கு உண்டாவதை தடுக்கலாம் என கூறுகிறார்.

இந்த ஆய்வைப் பற்றிய விரிவான கட்டுரை ஜர்னல் ஆஃப் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் என்ற இதழில் வெளிவந்துள்ளது.

English summary

Why mental stress is common for army women

Why mental stress is common for army women
Story first published: Thursday, August 4, 2016, 12:12 [IST]
Desktop Bottom Promotion