For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் தேன் கலந்த சீரகத் தண்ணீரை ஒரு கப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

|

சமையலறையில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். அங்குள்ள ஒவ்வொரு பொருட்களிலும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்!!!

சொல்லப்போனால், மருத்துவருக்கும் மருந்துகளுக்கும் செலவழிப்பதற்கு பதிலாக, சமையலறைப் பொருட்களுக்கு பணத்தை செலவு செய்தால், நோய்கள் ஆரோக்கியமான முறையில் குணமாவதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!!

அப்படி ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது தான் சீரகம். இந்த சீரகத்தைக் கொண்டு ஒரு பானம் தயாரித்து குடித்து வந்தால், நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைப் போக்கலாம்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சரி, இப்போது அந்த சீரக பானத்தின் செய்முறை மற்றும் அதனைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

சீரக பானத்தை தினமும் ஒரு கப் குடித்து வருவதன் மூலம், இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, உடல் சுத்தமாகவும், நோய்களின் தாக்குதலின்றியும் இருக்கும்.

நன்மை #2

நன்மை #2

தேன் கலந்த சீரகத் தண்ணீர் செரிமான அமிலத்தின் சுரப்பை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும்.

நன்மை #3

நன்மை #3

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு, சீரக பானம் மிகவும் அற்புதமான ஓர் மருந்து. இதனைக் குடித்து வந்தால், மலம் இளகி குடலியக்கம் சீராக்கப்பட்டு, உடனே மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

நன்மை #4

நன்மை #4

சீரகத்தில் உள்ள கியூமினல்டிஹைடு என்னும் பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவை உடல் முழுவதும் பரவுவதை தடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

நன்மை #5

நன்மை #5

தேன் கலந்த சீரகத் தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது மற்றும் இது உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவை சீராகப் பராமரிக்கும். இதனால் உடலில் இரத்த அழுத்தமானது சீரான அளவில் இருக்கும்.

நன்மை #6

நன்மை #6

சீரக பானத்தில் இயற்கையாகவே நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளதால், சுவாச அமைப்பில் உள்ள சளி சுரப்பிகளில் உள்ள உட்காயங்களை சரிசெய்து, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளைக் குறைக்கும்.

நன்மை #7

நன்மை #7

தேன் கலந்த சீரகத் தண்ணீரில் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே இது உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

சீரகம் - 2 டீஸ்பூன்

தேன் - 2 டீஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

செய்முறை:

செய்முறை:

முதலில் நீரை கொதிக்க வைக்கவும். பின் சீரகத்தைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி, தேன் கலந்தால், மருத்துவ குணம் நிறைந்த சீரக பானம் தயார்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens To Your Body When You Drink Jeera Water With Honey?

Did you know that the combination of jeera water and honey can have up to 7 health benefits for our body? Learn how to prepare the remedy, here.
Desktop Bottom Promotion