For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழுப்பை விரைவாக குறைக்க உதவும் சைனீஸ் டயட்!

|

சீனர்களை பெரிதாக நீங்கள் உடல்பருமனுடன் பார்க்க முடியாது. பெரும்பாலும் அவர்கள் ஸ்லிம்மான உடல்வாகுடன் தான் தோற்றமளிப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் பாரம்பரியமாக பின்பற்றி வரும் உணவுப் பழக்கங்கள் தான்.

தினமும் காலையில இதுல ஒரு டம்ளர் குடிச்சா தொங்கும் தொப்பையைக் குறைக்கலாம்!

நாம் தான் ஐ.டி., மாடர்ன் என்ற பெயர்களில் உடுத்தும் உடையில் இருந்து, உண்ணும் உணவு வரை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டோம். சீனர்கள் மத்தியில் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு அவர்கள் பின்பற்றும் டயட் முறை தான் முக்கிய காரணியாக இருக்கிறது.

2 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைக்க உதவும் க்ரீன் காபி கேப்ஸ்யூல் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இனி, உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் சைனீஸ் டயட் டிப்ஸ் பற்றி காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பமாக உண்ணும் பழக்கம்

குடும்பமாக உண்ணும் பழக்கம்

சீன வீடுகளில் மட்டுமின்றி, ரெஸ்டாரண்ட்களில் கூட குடும்பமாக உண்ணும் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. முக்கயமாக தனித்தனியாக ஆர்டர் செய்து உண்ணும் பழக்கத்தை தவிர்த்து, ஒரு உணவை ஆர்டர் செய்து பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

மூன்று உணவு விதி

மூன்று உணவு விதி

இது எழுதப்படாத விதியாக இவர்கள் பின்பற்றுகிறார்கள். முக்கிய உணவு ஒன்றும் அதற்கு சைடிஷ் இரண்டும் என இந்த மூன்று உணவு விதியை பின்பற்றுகிறார்கள். இது அளவாக உண்ணும் பழக்கத்தையும், உடலில் கலோரிகள் அதிகமாக சேராமல் இருக்கவும் உதவுகிறது.

சிறிய பாத்திர பண்டங்கள்

சிறிய பாத்திர பண்டங்கள்

சீனர்கள் அளவாக உணவு உட்கொள்ள வேண்டும் என்பதற்காக சிறய பாத்திரங்களையே உபயோகப்படுத்துகிறார்கள். இது அவர்களிடம் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க காரணியாக இருக்கிறது. மேலும் இரண்டாம் முறை நீங்கள் உணவு பரிமாறினாலும் குறைவாக தான் உட்கொள்வீர்கள், இதனால் கலோரிகள் அதிகம் சேர வாய்ப்பு இல்லை.

மூன்று மீல்ஸ்

மூன்று மீல்ஸ்

காலை, மதியம், இரவு உணவு என மூன்று முறை உணவுண்ணும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் உணவுண்ணுவதை தவிர்த்து விடுகிறார்கள். மேலும், உணவு முறை சுழற்சியை சரியாக இவர்கள் பின்பற்றுவதும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க முக்கிய காரணியாக இருக்கிறது.

காய்கறிகள்

காய்கறிகள்

டைனிங் டேபிளில் நடுவே வேக வைத்த காய்கறிகள் வைக்கப்பட்டிருக்கும். வேக வைத்த காய்கறிகளை உணவுண்ணும் போது சேர்த்துக் கொள்வது மீல்ஸை குறைவாக உண்ண உதவுகிறது. மேலும், இதில் கலோரிகள் குறைவு, சத்துக்கள் அதிகம். இதனால், உடல் எடைக் கூடாது மற்றும் உடல்நலம் ஆரோக்கியமடையும்.

ஈரப்பதமான மற்றும் உலர்ந்த உணவு

ஈரப்பதமான மற்றும் உலர்ந்த உணவு

உணவுமுறையில் ஈரப்பதமான உணவும், உலர்ந்த உணவையும் சரிபாதி பங்காக சேர்த்துக் கொள்கின்றனர் சீனர்கள். இது இவர்களது டயட்டை சிறந்த முறையில் பின்பற்ற உதவுகிறது. மேலும் இந்த விகிதம் உடல் எடை கூடாமல் இருக்கவும், உடற்சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.

சூப்

சூப்

சீனர்களிடம் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் சூப். இவர்கள் மூலிகை மற்றும் காய்கறி சூப்பை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

சூப்

சூப்

சில சமயங்களில் அரிசி, நூடுல்ஸ் கூட சூப்புடன் சேர்த்து அருந்துகிறார்கள். இது உடலில் அதிகளவு கலோரிகள் சேராமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படுத்தாமல் இருக்கவும் உதவுகிறது.

நீராவி உணவுகள்

நீராவி உணவுகள்

சீனர்கள் எண்ணெயில் சமைக்கும் உணவுகளை விட நீராவியில் வேக வைத்து சமைக்கும் உணவுகளை தான் அதிகமாக உண்ணுகின்றனர்.

நீராவி உணவுகள்

நீராவி உணவுகள்

இறைச்சியை கூட இப்படி வேக வைத்து உண்ணும் பழக்கம் சீனர்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீ

பல வருடங்களாக கிரீன் டீ பருகுவதை சீனர்கள் வாடிக்கையாக பின்பற்றி வருகிறார்கள். தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை கிரீன் டீ பருகுவது உடல் நலத்திற்கு நல்லது.

காய்கறி ஜூஸ்கள்

காய்கறி ஜூஸ்கள்

சீனர்கள் மத்தியில் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு மற்றுமொரு காரணமாக இருப்பது அவர்கள் பருகும் காய்கறி ஜூஸ்கள். வேக வைத்து உண்ணும் பழக்கத்தோடு, தினமும் ஏதேனும் ஒரு காய்கறி ஜூஸை பருகுகிறார்கள். இதனால் உடலில் கலோரிகள் அதிகமாக சேருவது இல்லை.

நொறுக்குத்தீனிக்கு தடா

நொறுக்குத்தீனிக்கு தடா

சீனர்கள் நொறுக்குத்தீனிகள் பலவன தயாரித்து ஏற்றுமதி செய்தாலும் கூட, அவற்றை அவர்கள் பெரியளவில் விரும்பி உண்ணுவதில்லை. விவரமாக விற்று காசு பார்த்துவிட்டு ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்கிறார்கள். உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் இந்த இடைவேளை உணவான நொறுக்குத்தீனிகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Lose Weight Faster With The Real Chinese Diet

Tips To Lose Weight Faster With The Real Chinese Diet, read here in tamil.
Desktop Bottom Promotion