இந்த ஒரு டம்ளர் ஜூஸ் தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்யும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஆயிரக்கணக்கான மக்கள் அவஸ்தைப்படுவது தைராய்டு பிரச்சனையால் தான் . குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு தைராய்டு பிரச்சனையால் தான் இவ்வளவு கஷ்டம் என்று தெரிவதில்லை.

நமக்கு தெரியாமல் நம் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் விஷயங்கள்!

தைராய்டு என்பது தொண்டையின் நடுவே பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் சுரப்பி. இந்த சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் தான் உடலின் பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.

தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்!!!

இந்த சுரப்பியில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது உடலின் மற்ற பாகங்களிலும் பிரச்சனைகளை உண்டு பண்ணும். தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் ஏற்படும்.

தைராய்டு உள்ளவர்கள் உடல் எடை குறைய மேற்கொள்ள வேண்டிய டயட்!!!

இப்போது அவற்றைப் பற்றியும், தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்கும் ஜூஸ் குறித்தும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைராய்டு பிரச்சனை வகைகள்

தைராய்டு பிரச்சனை வகைகள்

கழுத்தின் அமைந்துள்ள தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவை:

* ஹைப்பர் தைராய்டு

* ஹைப்போ தைராய்டு

ஹைப்பர் தைராய்டு

ஹைப்பர் தைராய்டு

ஹைப்பர் தைராய்டு என்னும் நிலை தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படுவதாகும்.

ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்

ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்

ஹைப்பர் தைராய்டு ஒருவருக்கு இருந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும். அவை பெரிய கண்கள், அதிகமாக வியர்வை வெளியேறுவது, மிகுதியான சோர்வு, திடீர் உடல் எடை குறைவு, கவனச்சிதறல், வயிற்றுப்போக்கு போன்றவை.

ஹைப்போ தைராய்டு

ஹைப்போ தைராய்டு

தைராய்டு சுரப்பி போதிய அளவின்றி குறைவான அளவில் தைராய்டு ஹைர்மோன்களை சுரந்தால், அந்நிலையை ஹைப்போ தைராய்டு என்று அழைப்பர்.

ஹைப்போ தைராய்டு அறிகுறிகள்

ஹைப்போ தைராய்டு அறிகுறிகள்

முகம் வீங்கி காணப்படுவது, உடல் பலவீனம், உடல் சோர்வு, மலச்சிக்கல், காரணமின்றி திடீரென்று உடல் பருமனடைவது, சரும வறட்சி போன்றவை ஹைப்போ தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

இப்போது தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

சர்க்கரையில்லா கிரான்பெர்ரி சிரப் - 1 கப்

தண்ணீர் - 8 டம்ளர்

இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்

பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப்

எலுமிச்சை ஜுஸ் - 1/4 கப்

செய்முறை

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அந்த ஜூஸை தினமும் விரும்பும் நேரத்தில் குடித்து வரலாம்.

உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்

உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்

இந்த ஜூஸை குடிப்பதால், ஆரம்பத்தில் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றல் அளவில் மாற்றங்களைக் காணலாம். அத்துடன் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் சிறு முன்னேற்றம் தெரிந்து, தைராய்டு ஹார்மோன்கள் சீரான அளவில் சுரப்பதைக் காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Juice Will Solve All Problems With The Thyroid Gland

Do you know one juice will solve all problems with the thyroid gland? Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter