Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
படர்தாமரை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?
படர்தாமரை புழு பூச்சிகளால் வருவதல்ல. அது பூஞ்சைகளின் தொற்றுக்களால் சருமத்தில் உருவாகும். சில வகை பூஞ்சைகள் சருமத்தில் தொற்றிக் கொள்ளும்போது, எதிர்ப்பு செல்கள் அதனை எதிர்க்கும். அப்போது வரும் ஒவ்வாமையே தோல் சிவந்து எரிச்சல் தருவதாகும்.

பரவும் நிலை :
சருமத்தில் தொற்று ஏற்பட்ட இடத்தில் வட்ட வடிவமாக சிவந்து தடித்து காணப்படும். பின்னர் அங்கிருந்து உடலில் எல்லா இடத்திற்கும் பரவக் கூடியது.
ஸ்கால்ப், கால், பாதம், இடுப்பு, தொடையின் உள்புறம் என காற்று பூகாத இடங்களில் பூஞ்சை உருவாகும்.
படர்தாமரை உருவாக காரணம் என்ன?
பொதுவாக சில வகை பூஞ்சை மண்ணில் உருவாகும். அவ்வாறு பூஞ்சை உருவான மண்ணில் விளையாடினால், அல்லது வேலை செய்தால், இந்த தொற்று ஏற்படும். அல்லது ஏற்கனவே படர்தாமரையில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் மற்றவர்களுக்கு பரவும்.
யாருக்கெல்லாம் இந்த பாதிப்பு ஏற்படும் :
இந்த படர்தாமரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாய் சிறுவர்களுக்கு அதிகமாய் வர வாய்ப்புண்டு, அவர்கள் மண்ணில் விளையாடும் போது, அல்லது பூனைகளை கொஞ்சும் போது என வரலாம்.
படர்தாமரையின் அறிகுறிகள் :
வட்ட வடிவமாக சிவந்து காணப்படும். சருமம் தடித்திருக்கும். தொற்று ஏற்பட்ட இடங்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். படர் தேமல் நகங்களில் உண்டாயிருந்தால், நகத்தின் நிறம் மஞ்சள் நிறமாய் மாறியிருக்கும்.
தலையில் ஏற்பட்டிருந்தால், அங்கே முடி உதிர்ந்து சொட்டை ஏற்பட்டிருக்கும்.
மருத்துவ பரிசோதனை :
பாதிக்கப்பட்ட சருமத்தினை லேசாக கீறி, அதனைக் கொண்டு ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்து உறுதிபடுத்துவார்கள்.
சிகிச்சை :
படர்தாமரை எளிதில் குணப்படுத்தக் கூடியதே. இதற்கு தகுந்த பூஞ்சையை எதிர்க்கும் க்ரீம்களே போதுமானது. அதனுடன், வீட்டிலும் சருமத்தை பாதிக்காதவாறு பருத்தி துணிகள் அணிய வேண்டும்.
காற்று படுமாறு வைத்துக் கொள்ளவேண்டும். சருமத்தில் ஈரப்பதம் இருந்தால் பூஞ்சை எளிதில் பெருகிவிடும். ஆகவே எப்போது உலர்ந்து இருக்கும்படி, காற்று படுமாறு வைத்துக் கொண்டால் வேகமாய் குணமாகிவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


