இரவு நன்கு உறங்க, உங்கள் துணையுடன் சேர்ந்து இந்த 6 வழிகளை முயற்சித்து பாருங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உறக்கம்.... இன்றைய கணினிமையமான வாழ்க்கையில் கணினிக்கும், மொபைலுக்கும், டிஜிட்டல் கருவிகள் எதற்கும் நாம் உறக்கத்தை தருவதில்லை, அதனால் நமக்கும் நல்ல உறக்கம் வருவதில்லை.

மொபலை கடைசியாக பேட்டரி குறையாமல் நீங்கள் எப்போது ஆப் செய்து வைத்தீர்கள் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அதுவாக ஆப் ஆனால் தான் உண்டு. டிஜிட்டல் உலகம் நமது உறக்கத்தையும், உறவையும் மெல்ல, மெல்ல தின்றுக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து தப்பித்து எப்படி நல்ல உறக்கம் பெறலாம், அதுவும் உங்கள் துணையோடு சேர்ந்து....? அதற்கும் வழிகள் இருக்கிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரம்!

நேரம்!

இருவரும் சேர்ந்து தினமும் ஒரே நேரத்தில் உறங்க செல்லுங்கள். இது இருவருக்குள்ளும் நல்ல உறக்கமும் , நல்ல உறவும் உண்டாக உதவும். அதற்கென கண்ட நேரத்தில் செல்ல வேண்டாம். 10 மணிக்குள் உறங்கிவிட வேண்டியது அவசியம்.

விளையாட்டு!

விளையாட்டு!

ஐ.டி வருகைக்கு பிறகு, இப்போதெலாம் தம்பதி இருவரும் ஒன்றாக சேர்ந்து மாலை தேனீர் அருந்துவதே அரிதாகிவிட்டது. ஆனாலும், நீங்கள் இருவரும் சேர்ந்து ஏதேனும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

வீட்டை சுத்தம் செய்யாலாம், ஏதானும் புத்தகம் படிக்கலாம், விளையாடலாம். இந்த செயல்பாடு நல்ல உறக்கத்தை பெற உதவும்.

புத்தகம் படிக்கும் முறை!

புத்தகம் படிக்கும் முறை!

குழந்தை தனமாக இருந்தாலும் இப்படி செய்வதால் நீங்கள் நல்ல உறக்கம் பெற முடியும். ஆம், ஒரு பக்கத்தை ஒருவரும், மற்றொரு பக்கத்தை மற்றொருவரும் மாற்றி மாற்றி படித்தால் , உங்கள் மனம் அமைதியாகும், நல்ல உறக்கம் பெறலாம்.

சட்டத்திட்டங்கள்!

சட்டத்திட்டங்கள்!

உங்கள் படுக்கையறைக்கு என தனியாக சில சட்டத்திட்டங்கள் வகுத்துக் கொள்ளுங்கள்., கம்பியூட்டர், மொபைல் போன்றவற்றை படுக்கை அறையில் பயன்படுத்த மாட்டோம், துணைக்கு பிடிக்காத காரியத்தில் ஈடுபட மாட்டோம் என ஏதாவது ஒன்று.

இவை எல்லாம் நீங்கள் இருவரும் நன்கு உறங்குவதற்கு மட்டுமின்றி, உறவும் மேலோங்க உதவும்.

செயல்பாடுகள்!

செயல்பாடுகள்!

ஒருவருக்கு ஒருவர் கால் பிடித்துவிடுவதும் மசாஜ் செய்துவிடுவது, போன்றவற்றை இரவு படுக்கையில் செய்வது நல்ல உறக்கத்தை தரும்.

பேசுங்கள்!

பேசுங்கள்!

படுக்கை அறைக்கு சென்றவுடன், மொபைல், லேப்டாப் நோண்டுவதை நிறுத்திவிட்டு, ஒருவருடன் ஒருவர் அன்று நடந்த விஷயங்கள் குறித்து பேசுங்கள்.

நீங்கள் பேச போகும் விஷயம் சண்டையை உண்டாகும் என்றால் அதை யோசித்து பேசுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Ways Couples Can Really Help Each Other Sleep Well

Six Ways Couples Can Really Help Each Other Sleep Well, take a look on here
Subscribe Newsletter