வாய் துர்நாற்றமா? இதோ அதைத் தடுப்பதற்கான சில சிம்பிள் ட்ரிக்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவரும் வாழ்நாளின் சில நேரங்களில் வாய் துர்நாற்றத்தால் தர்மசங்கடத்தை சந்தித்திருப்போம். இந்நிலை வெங்காயத்தை அதிகமாக உட்கொண்டதாலோ அல்லது மோசமான வாய் சுகாதாரத்தினாலோ, சொத்தை பற்களினாலோ, ஈறு பிரச்சனைகளினாலோ அல்லது நீர் வறட்சியினால் கூட இருக்கலாம்.

பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!!

நாம் வெளிப்புறத்தில் அழகாகவும், சுத்தமானவராகவும் இருந்தால் மட்டும் போதாது, நம் அருகில் வந்து பேசுவோர் எவ்வித அசௌகரியத்தையும் உணராதவாறு நம் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

வாய் துர்நாற்றத்தைப் போக்குவது எப்படி என்று பலரும் தெரியாமல் திணறுவார்கள். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் வாய் துர்நாற்றத்தைத் தடுப்பதற்கான சில ட்ரிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து பின்பற்றினால், நிச்சயம் வாய் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.

பற்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களை தடுப்பதற்கான 17 இயற்கை வைத்தியங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் மருத்துவரை சந்திக்கவும்

பல் மருத்துவரை சந்திக்கவும்

வாய் துர்நாற்றம் வீசுவதற்கு சொத்தை பற்கள் அல்லது ஈறு நோய்கள் காரணமாக இருக்கலாம். எனவே உங்களுக்கு இப்பிரச்சனைகள் இருந்தால் உடனே பல் மருத்துவரை சந்தித்து, சிகிச்சை மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இப்பிரச்சனை முற்றி, பின் நாளடைவில் பெரிய சிக்கலை சந்திக்கக்கூடும். எனவே வாயில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால் சற்றும் தாமதிக்காமல் உடனே பல் மருத்துவரை அணுகுங்கள்.

பற்களை இருமுறை துலக்குங்கள்

பற்களை இருமுறை துலக்குங்கள்

வாய் துர்நாற்றத்தைப் போக்க சிறந்த எளிய வழி நல்ல வாய் சுகாதாரம் தான். அதற்கு தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்க வேண்டும். ஒருவேளை இருமுறை பற்களைத் துலக்கி வந்தும் வாய் துர்நாற்றம் இருந்தால், வாரம் ஒருமுறை பேக்கிங் சோடா பயன்படுத்தி பற்களைத் துலக்குங்கள். இதனால் வாயல் அசிடிட்டியின் அளவு குறைந்து, வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் தடுக்கப்படும்.

அதிக தண்ணீர் குடிக்கவும்

அதிக தண்ணீர் குடிக்கவும்

உடலில் போதிய அளவில் தண்ணீர் இல்லாவிட்டாலும், வாய் துர்நாற்றம் வீசக்கூடும். எனவே தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அதிலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும் செய்யுங்கள். இதனால் வாயில் ஏதேனும் உணவுத் துகள்கள் பற்களின் இடையில் சிக்கியிருந்தால், அவை வெளியேற்றப்படும். மேலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் போது வாய் உலர்ந்து போகாமல் இருக்கும்.

நாக்கையும் சுத்தப்படுத்துங்கள்

நாக்கையும் சுத்தப்படுத்துங்கள்

வாய் சுத்தம் என்பது பற்களை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வதில் இல்லை. நாக்கையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு முறை பற்களைத் துலக்கும் போதும் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாவானது நாக்கில் தான் வளர்கிறது.

சூயிங் கம்

சூயிங் கம்

சுகர் ப்ரீ சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் எச்சில் உற்பத்தி தூண்டப்படும். வாயில் எச்சில் உற்பத்தி அதிகம் இருந்தால், பாக்டீரியாக்களில் வாயில் இருந்து வெளியேற்றப்படும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லியில் குளோரோபில் ஏராளமாக உள்ளது. இது வாயை புத்துணர்ச்சியூட்டும் ஓர் சிறந்த பொருள். எனவே தினமும் உணவை உட்கொண்ட பின் சிறிது கொத்தமல்லியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்.

க்ரீன் டீ குடியுங்கள்

க்ரீன் டீ குடியுங்கள்

க்ரீன் டீயில் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால்கள், வாயில் உள்ள சல்பரை நீர்க்கச் செய்துவிடும்.

ப்ளாஷ்

ப்ளாஷ்

முக்கியமாக தினமும் ப்ளாஷ் செய்வதையும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் ப்ளாஷ் மூலம் பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்கள் வெளியேற்றப்படும். இதனால் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Steps To Eliminate Bad Breath

If you are suffering from bad breath, then read on to know tips on how to control bad breath.
Subscribe Newsletter