உங்கள் உடலில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும் போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா? பொதுவாக ஒருவரின் உடலில் pH அளவு 7-க்கு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அப்படி குறைந்தால், அவர்களது உடலில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

உடலில் அமிலத்தன்மை அதிகம் இருந்தால், அதனால் உடலினுள் கழிவுகள் தேங்கி, பல நோய்களுக்கு வழிவகுக்கும். உடலில் அமிலம் மற்றும் காரத் தன்மையை மூளை, சிறுநீரகம் போன்றவை தான் சீர்செய்கிறது. எனவே இவற்றை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இங்கு ஒருவரது உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்பு பிரச்சனைகள்

எலும்பு பிரச்சனைகள்

உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும் போது, உடல் தன்னைத் தானே நீர்க்கச் செய்யும். எப்படி என்று கேட்கிறீர்களா? உடலில் ஒருசில பகுதிகளான எலும்புகளில் உள்ள கனிமச்சத்துக்களைப் பயன்படுத்தி தான். இப்படி எலும்புகளில் உள்ள கால்சியம் உறிஞ்சப்படும் போது, எலும்புகள் பலவீனமடைந்து சிதைவிற்குள்ளாகும். எனவே உங்களுக்கு திடீரென்று எலும்பு பிரச்சனைகள் இருப்பின், அதற்கு காரணம் இதுவாகக் கூட இருக்கலாம்.

எப்போதும் சோர்வு

எப்போதும் சோர்வு

உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும் போது, உடலினுள் உள்ள நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கம் அதிகரிப்பதோடு, வலிமையடையும். இப்படி நுண்ணுயிரிகள் வலிமை அடையும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் சோர்ந்து, நாள் முழுவதும் உங்களை சோர்வுடன் வைத்துக் கொள்ளும்.

எடை அதிகரிக்கும்

எடை அதிகரிக்கும்

உடலில் அமிலத்தன்மை அதிகரித்தால், உடல் எடை தானாக அதிகரிக்கும். சிறுநீரகங்கள் மற்றும் குடல் போன்றவை அமிலங்களை வெளியேற்றுவதில் போராடி தோற்று, அதனால் கொழுப்புச் செல்களில் இந்த அமிலங்கள் தேங்கி உடல் எடையை அதிகரிக்கும்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

ஆம், உடலில் அமிலத்தன்மை அதிகரித்தால் ஒருசில சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் முகப்பரு, அரிப்புகள் போன்றவை குறைப்பிடத்தக்கவை.

தூக்கமின்மை

தூக்கமின்மை

உடலில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும் போது, இரவில் நிம்மதியற்ற தூக்கத்தைப் பெறக்கூடும். இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாவிட்டால், மறுநாள் காலையில் சோர்வையும், பலவீனத்தையும் உணரக்கூடும்.

பல் பிரச்சனைகள்

பல் பிரச்சனைகள்

கால்சியம் எலும்புகளில் மட்டுமின்றி, பற்களிலும் உள்ளது. எனவே அமிலத்தன்மை உடலில் அதிகமானால், பல் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

உடல் வலி

உடல் வலி

அமிலத்தன்மை உடலில் அதிகம் உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் உடல் வலியும் ஒன்று. எனவே உங்களுக்கு அடிக்கடி உடல் வலி ஏற்பட்டால், உங்கள் உடலில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs Of High Acid Levels In Your Body

What’s meant by body being acidic? Well, it just means that the acid levels in your body are too high. Where do these acids reside? Well, in your body...
Story first published: Monday, April 11, 2016, 17:10 [IST]