Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
வாழைக்காயா? வாழைப்பழமா? எது சிறந்தது ?
பழ சாம்ராஜ்ஜியங்களின் மிகவும் சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழையும் ஒன்று. இதனால் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு இது தீர்வாகவும் உள்ளது. வாழைப் பழமா? காயா எதி சிறந்தது என பார்க்கலாம்.
நாம் பெரும்பாலும் புதிய பழங்களையே சாப்பிட விரும்புவோம்.
பழத்தின் நிறம் மாறிவிட்டால் அது பழம் பழையதாகிவிட்டதையும், அதில் சத்துக்கள் குறைந்து போய்விட்டதையும் நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த அடிப்படை விதி வாழைப்பழத்துக்கும் பொருந்துமா என்ன?
பழுத்த வாழைப்பழங்கள் சத்துக்கள் நிறைந்தவையா? வாழைப்பழம் ஒன்றுதான் அதன் அடிப்படை தெரியாமல் பழுக்கவில்லையென்றாலும் சாப்பிடப்படும் பழம்.
நன்கு பழுத்த வாழைப்பழங்கள் சாப்பிட உகந்தவையா என்பதை தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

வாழைக்காய் vs வாழைப் பழம்
அறிஞர்கள் பலர் பழுத்த வாழைப்பழம் உடல் நலத்திற்கு எதிர்மறை விளைவுகளைத் தரக்கூடும் என நம்பும் அதே வேளை மற்றவர்கள் பழுத்த வாழைப்பழம் பழுக்காத பழத்தை விட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது எனக் கருதுகின்றனர்.
எனினும் பழுத்த வாழைப்பழம் சரியாகப் பழுக்காத பழத்தைவிட சிறந்ததா என அறிய ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

வாழைப் பழம் :
ஆச்சரியமாக பழுத்த பழம் பழுக்காத பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்த ஆகாரமாகவும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்து காணப்பட்டது.
சில ஜப்பானிய ஆய்வாளர்கள் கருத்துப்படி பழுத்த வாழ்க்கையானது பழுக்காத வாழையை விட அதிக வைட்டமின்களையும், புரோட்டீன்களையும், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் உருவாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதால் பெரும்பாலும் ஜப்பானிய மக்கள் நன்கு பழுத்த பழங்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றனர்.

பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள்
பெரும்பாலும் நன்கு பழுத்த வாழைப் பழங்களின் மீது கரும்புள்ளிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். இது தீங்கான ஒன்று என்று சிலர் கூறுவதுண்டு.
ஆனால் இந்த கரும்புள்ளிகள் டிஎன்எப் எனப்படும் டியூமர் நேசிரோசிஸ் பாக்டர் எனப்படும் ஒரு வேதிப்பொருளை வாழைப்பழம் உருவாக்குகிறது. இது உடம்பிலுள்ள அசாதாரணமான மற்றும் கேன்சர் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது.

பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள்
ஒரு கப் பழுத்த வாழைப்பழம் குறைந்தது சுமார் ௦.55 மிலிகிராம் அளவு வைட்டமின் பி6 கொண்டுள்ளது. இது ஒரு வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாலைக்குத் தேவைப்படும் வைட்டமின் பி6 அளவில் 42 சதவிகிதம் ஆகும்.

பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள்
தொடர்ந்து பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டுவருவது ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது.

பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள்
தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி (ஆஸ்டியோ போரோசிஸ்) மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள்
இதைத் தவிர பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள்
பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும்கூடத் தடுக்கும்.
தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.



Click it and Unblock the Notifications