கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்தக் குழாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் அற்புத நாட்டு மருந்து!

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய அவசர உலகில் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும், மோசமான வாழ்க்கை முறையாலும் நிறைய பேர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இப்படி ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, அது இரத்தக் குழாய்களில் படித்து, அதனால் இதய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடுகிறது.

இதனைத் தடுக்க ஒவ்வொருவரும் உண்ணும் உணவுகளில் அதிக அக்கறை காட்டுவதோடு, உடலில் கொலஸ்ட்ரால் தேங்குவதைத் தடுக்கவும், கரைக்கவும் உதவும் இயற்கை வழியைத் தெரிந்து கொண்டு அவற்றைப் பின்பற்றினால், இதய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இங்கு இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதை சாப்பிட கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்தும், இரத்த குழாய்களை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இந்த நாட்டு மருந்தில் இஞ்சி சேர்க்கப்பட்டுள்ளது. இஞ்சியில் உள்ள நொதிகள் கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரும் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவைக் குறைக்கும். இதற்கு ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குளோராஜெனிக் அமிலம், கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கெட்ட கொழுப்புக்களின் அளவை சீரான அளவில் குறைக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

இஞ்சி சாறு - 1 கப்

ஆப்பிள் சீடர் வினிகர் - 1 கப்

வெங்காய சாறு - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 கப்

தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சாறுகளையுஙம் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் குறைவான தீயில் வைத்து, 30 நிமிடம் கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின் அதில் 3 கப் தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.

உட்கொள்ளும் முறை

உட்கொள்ளும் முறை

இந்த மருந்தை தினமும் காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு, வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

இப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு படிகங்கள் கரைக்கப்பட்டு, இரத்தக் குழாய் சுத்தமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reduce Cholesterol And Clean All Blood Vessels Up to The Heart With This Natural Remedy

This natural remedy is a proven method to eliminate bad cholesterol and cleanse the blood vessels, all up to the heart. Check out...
Story first published: Monday, October 3, 2016, 13:07 [IST]
Subscribe Newsletter