Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
Venus Transit Make Gajlakshmi Rajyog 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தனது நிலை மாற்றங்களினால் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட.

இப்படிப்பட்ட சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்கள். இந்நிலையில் சுக்கிரன் ஜூன் 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் ஏற்கனவே தேவர்களின் குருவான குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால் கடக ராசியில் குரு-சுக்கிர சேர்க்கையால் மிகவும் மங்களகரமான கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகமானது ஜூலை 04 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர். இப்போது சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நதி நிலைமை மேம்படும். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். செல்வம் பெருகும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




