ஏன் அதிகாலையில் சுய இன்பம் காண்பது நல்லது எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சுய இன்பம் காண்பது ஆரோக்கியமற்ற செயல் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஆய்வுகள் சுய இன்பம் காண்பதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஒரு நற்செய்தியை வெளியிட்டது. மேலும் சுய இன்பம் ஆண்கள் மட்டும் அனுபவிப்பதில்லை, பெண்களும் தான்.

சுய இன்பம் குறித்து மக்களிடையே உள்ள சில தவறான கருத்துக்கள்!!!

ஆனால் இத்தகைய சுய இன்பத்தை ஒருவர் இரவில் அனுபவிப்பதை விட, அதிகாலையில் அனுபவிப்பதால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைப்பதோடு, அன்றைய நாள் சிறப்பானதாக இருக்குமாம். இங்கு ஏன் ஏன் காலையில் சுய இன்பம் காண்பது நல்லது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

ஜெர்மன் ஆய்வு ஒன்றில், பாலியல் விழிப்புணர்ச்சி மற்றும் உச்சக்கட்ட இன்பத்தை பெறுவதால் ஒருவரது மனநிலை நல்ல நிலையில் இருப்பதோடு, அதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

மன அழுத்தம் மற்றும் டென்சன்

மன அழுத்தம் மற்றும் டென்சன்

சுய இன்பத்தை ஒருவர் அனுபவிக்கும் போது உடலில் இருந்து மன அழுத்தம் மற்றும் கலவையைக் குறைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும். எப்போது ஒருவர் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்களோ, அப்போது உடலில் இருந்து கார்டிசோல் என்னும் ஹார்மோன் வெளியிப்படும். ஆனால் சுண இன்ப காணும் போது, கார்டிசோலின் அளவு குறைந்து, மனம் அமைதியுடனும், ரிலாக்ஸாக இருப்பதையும் உணர முடியும்.

உற்பத்தி திறன் அதிகரிக்கும்

உற்பத்தி திறன் அதிகரிக்கும்

சுய இன்பம் மன அழுத்தம் மற்றும் டென்சனில் இருந்து விடுபட உதவுவதோடு, அதிகாலையில் இதனை மேற்கொள்ளும் போது ஒருவரின் ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிப்பதோடு, அன்றைய நாளில் அவரது உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.

ஸ்மாட்டாக செயல்பட செய்யும்

ஸ்மாட்டாக செயல்பட செய்யும்

சுடோகு விளையாட்டை விளையாடுவதால் மட்டும் ஒருவரது மூளை ஸ்மார்ட்டாக சிந்திக்கும் என்பதில்லை, சுய இன்பம் காண்பதனாலும் மூளையின் செயல்பாடு மற்றும் நினைவுத் திறன் மேம்படும்.

மூளை மற்றும் மனம் இணையும்

மூளை மற்றும் மனம் இணையும்

காலையில் சுய இன்பம் காண்பதால், மூளை மற்றும் மனம் ஒன்றிணைக்கப்பட்டு, அன்றைய நாள் வெற்றிகரமாக அமைய உதவும். ஆகவே ஒருநாள் சிறப்பாக அமைய நினைத்தால் அதிகாலையில் சுயஇன்பம் காணுங்கள்.

சருமத்திற்கு நல்லது

சருமத்திற்கு நல்லது

சுயஇன்பம் அல்லது உச்சக்கட்ட இன்பத்தை ஒருவர் அடையும் போது, உடலில் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு, கார்டிசோலின் அளவு குறைந்து, அதனால் சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கப்பட்டு, சரும பிரச்சனைகள் வருவதும் தடுக்கப்படும்.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

ஒருவர் சுய இன்பத்தைக் காணும் போது, அவரது உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் உள்ள திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why You Should Masturbate In The Morning

These are some reasons why you should consider waking up at least 15 minutes early and masturbate every morning.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter