அன்றாட உணவில் ஏன் சிறிது பூண்டு சேர்க்க சொல்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பழங்காலம் முதல் இன்று வரை உணவில் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஓர் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் தான் பூண்டு. இந்த பூண்டில் அயோடின், சல்பர், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும் வளமாக உள்ளது.

ஏன் பாலில் பூண்டு சேர்த்து குடிக்கச் சொல்கிறார்கள் என்று தெரியுமா?

குறிப்பாக இதில் மட்டுமே உள்ள ஓர் உட்பொருளான அல்லிசின், பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்கிறது. எனவே இத்தகைய பூண்டை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், நம் உடலைத் தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம். இங்கு தினமும் நாம் உண்ணும் உணவில் சிறிது பூண்டு சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் உணவில் சேர்க்கும் பூண்டைத் தூக்கி எறியாதீர்கள்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸ்துமா

ஆஸ்துமா

பூண்டு ஆஸ்துமா பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையளிக்கும். உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பின், தினமும் 1-2 பச்சை பூண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் பூண்டில் உள்ள வைட்டமின் சி, மூச்சுக்குழாயை சுருங்கச் செய்யும் ப்ரீ-ராடிக்கல்களை நீர்க்கச் செய்து, மூச்சுவிடுவதில் உள்ள சிரமத்தைக் குறைக்கும்.

மூட்டு ஆரோக்கியம்

மூட்டு ஆரோக்கியம்

தினமும் பூண்டை சாப்பிட்டு வந்தால், உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு சீராகப் பராமரிக்கப்பட்டு, எலும்புத் தேய்மானம் அடைவது தடுக்கப்படும்.

இதயம் பாதுகாக்கப்படும்

இதயம் பாதுகாக்கப்படும்

பூண்டு தமனிகளின் நெகிழ்வுத்தன்மையை சீராகப் பராமரிக்க உதவும். மேலும் இது ப்ரீ-ராடிக்கல்களால் இதயம் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவி புரியும். அதுமட்டுமின்றி, இதில் உள்ள சல்பர் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து, இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

சளி மற்றும் தொண்டைப் புண்

சளி மற்றும் தொண்டைப் புண்

தினமும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால், சளி மற்றும் இதர பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தொண்டையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீவிரமாகாமல் குறைக்கும். முக்கியமாக நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும். எனவே உங்களை நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க விரும்பினால் அன்றாட உணவில் பூண்டை சேர்த்து வாருங்கள்.

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

ஆய்வு ஒன்றில் தினமும் பூண்டை உணவில் சேர்த்து வருவோருக்கு 9-12 சதவீதம் கொலஸ்ட்ரால் குறைவது தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், பூண்டை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.

புற்றுநோய் தடுக்கப்படும்

புற்றுநோய் தடுக்கப்படும்

மருத்துவ குணங்களைக் கொண்ட பூண்டை தினமும் உணவில் சேர்த்து வர, ஒரு குறிப்பிட்ட புற்றுநோய்களின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.

நச்சுக்கள் வெளியேற்றப்படும்

நச்சுக்கள் வெளியேற்றப்படும்

உணவில் பூண்டை அதிகமாக சேர்த்து வருவோரின் உடலில் நச்சுக்களின் அளவு குறைவாக இருக்கும். எனவே உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால் பூண்டை தவறாமல் தினமும் சாப்பிட்டு வாருங்கள். அதிலும் தினமும் 2 பல் பூண்டை காலையில் எழுந்ததும் உட்கொண்டு வர, உடல் எடை குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons To Include Garlic In your Diet

In this article, we at Tamil Boldsky will be listing out some of the reasons to include garlic in your diet. Read on to know more about it.
Subscribe Newsletter