சில சமயம் காரணமின்றி தும்மல், ஏப்பம், விக்கல் வருவது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலக அதிசயங்கள் என்றால் நீங்கள் என்ன கூறுவீர்கள், தாஜ் மஹால், ஈபிள் டவர் போன்றவற்றையா. ஆராய்ச்சியாளர்கள் இந்த உலகிலேயே மிகவும் அதிசயமானது என்றால் அது உடற்கூறு தான் என்கிறார்கள்.

உங்கள் உடல் மொழி உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?

நம் உடற்கூறுகளில் சில செயல்பாடுகள் எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது, என இன்றளவும் பதில்களின்றி இருக்கின்றன. நமது மூளையில் எப்படி நினைவுகள் சேமிக்கப்படுகின்றன என்பதையே கடந்த வருடம் தான் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

தினமும் 8 நிமிடம் கட்டியணைத்துக் கொள்வதால் கிடைக்கும் 8 நன்மைகள்!

அதுவும் அதன் செயல் முறை குறித்த அடிப்படை மட்டும் தான், முழுமையாக அல்ல.இந்த வகையில் தூசு இல்லாமல் தும்மல் வருவது, உணவருந்தாமல் ஏப்பம் வருவது, மற்றும் விக்கல் போன்றவை வருவது ஏன் என தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தும்மல்

தும்மல்

தும்மல் என்பது மனிதனின் சுவாசம் சம்மந்தப்பட்டது மட்டுமில்லாமல், இதயம் மற்றும் மூளை பகுதிகளில் தேங்கும் கனமான சூடான காற்றாகும். இது குளிர்ச்சி அடையும் போது அல்லது தூண்டிவிடப்படும் போது மிக வேகமாக உந்தப்படும்.

தும்மல்

தும்மல்

ஏறத்தாழ நொடிக்கு 152 அடி வேகத்தில் தும்மல் உந்தப்படும் போது வெளியேறுகிறது. தும்மல் வருவது என்ன பெரிய விஷயமா என நீங்கள் கருதலாம். ஆனால், திடீரென வரும் தும்மல் காரணமாக மரணமடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஏப்பம்

ஏப்பம்

ஏப்பம் என்பது இரைப்பையிலும், சிறு குடல்களிலும் உற்பத்தியாகும் வாயுவின் தேக்கமே ஆகும். இந்த வாயுவின் வெளிபாடு தான் ஏப்பம். சில சமயங்களில் நாம் பேசிக்கொண்டே உண்ணும் போது உணவோடு சேர்த்து காற்றையும் விழுங்கிவிடுவோம்.

ஏப்பம்

ஏப்பம்

இதனால் தான் உண்ணும் போது அவசரப்படாமல், பேசாமலும், நன்கு மென்று உண்ண வேண்டும் என கூறுகிறார்கள். இதை தடுக்க குறிப்பிட்டு எந்த வழியும் இல்லை.

விக்கல்

விக்கல்

விக்கல் வருவதற்கு காரணம் ஒருவரது இரத்தத்தில் கரியமிலவாயு குறைவாக இருப்பது தான் என உடல் கூறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த கரியமிலவாயுவை நிறைவு செய்துவிட்டால் விக்கல் வருவது நின்று விடும்.

விக்கல்

விக்கல்

நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில் கரியமிலவாயு இருக்கிறது. இதனால் தான், சிறிது நேரம் மூச்சை அடக்கி பிறகு அதை பிளாஸ்டிக் கவரில் வெளிவிட்டு, மீண்டும் அதையே சுவாசித்தால் விக்கல் நின்று விடும் என சிலர் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Behind Your Sneezing, Belching And Hiccup

Did you know? why you are sneezing,belching and Hiccup suddenly? read here in tamil.
Subscribe Newsletter