Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மூக்கில் இரத்தம் வடியக் காரணங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்!
இன்றைய தேதிக்கு விதவிதமான உடல் உபாதைகள் பெருகிக் கிடக்கின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று மக்களும் பல்வேறு சிகிச்சைகளை முயற்சி செய்கிறார்கள். இதில் மூக்கில் இரத்தம் வடிவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
மூக்கில் இரத்தம் வடிவதை எபிஸ்டாக்சிஸ் என்று ஆங்கில மருத்துவத்தில் அழைக்கிறார்கள். குழந்தைகள் மூக்கை அடிக்கடி நோண்டுவதை பழக்கமாக வைத்திருப்பதால், அது மூக்கின் உள்ளே உள்ள திசுக்களை பாதித்து குழந்தைகளிடையே பெரும்பாலும் காணப்படுகின்றது.
இதுப்போன்று மூக்கில் இரத்தம் வடியும் பிரச்சனை பெரியவர்களில் அதிக இரத்த அழுத்தம் அல்லது ஆர்டேரியோஸ்க்லேரோசிஸ் எனப்படும் மூக்கில் ஏற்படும் ஒருவித நோய்த்தொற்று ஆகிய காரணங்களால் வரலாம்.
எனினும் தொடர்ச்சியான இரத்தம் வடிதல் என்பது புற்றுநோய்க்கான முதல் கட்ட அறிகுறியாக இருக்கலாம். 90 சதவிகித இரத்தம் வடிதல் பிரச்சனைகள் மூக்கில் இரு நாசித் துவாரங்களைப் பிரிக்கும் செப்டம் என்ற இடத்தில் இருந்து வரும். இவை ஆர்டீரியர் நோஸ் ப்ளீட்ஸ் என அழைக்கப்படுகின்றன.
இதைத் தவிர மூக்கின் ஆழ்ந்த பாகங்களில் தோன்றும் இரத்தம் வடிதல் போஸ்டீரியர் நோஸ் ப்ளீட்ஸ் என அழைக்கப்படுவதுடன் இவை அசாதாரணமானவைகளாகவும், கவலை தரக்கூடிய உடல் நிலையாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் மூக்கில் இரத்தம் வடிய பின்வரும் காரணங்களும் உள்ளன. தமிழ் போல்ட் ஸ்கை இந்த பிரச்சனைகளுக்கான காரணங்களையும், அவற்றைத் தடுக்கவும் குணப்படுத்தவும் வேண்டிய வழிமுறைகளையும் உங்களுக்கு வழங்குகிறது.
மூக்கில் இரத்தம் வடியும் பிரச்சனைப் பற்றி தெரிந்து கொள்ளவும். இந்தப் பிரச்சனைத் தொடர்ந்தால் நிபுணரை அணுகி உதவி பெறவும் மேலும் படியுங்க..

மூக்கில் இரத்தம் வடியக் காரணங்கள்
மூக்கில் இரத்தம் வடியக் காரணமானவற்றில் முக்கியமானது சைனஸ் தொற்று. இதைத்தவிர கடும் சளி, மூக்கடைப்பை சரிசெய்யும் ஸ்ப்ரே போன்ற மருந்துகளின் அளவுக்கதிகமான உபயோகம், லுகேமியா, ஈரல் நோய்கள், ஹீமோபிலியா மற்றும் மரபுவழி இரத்தக்கட்டுக் குறைபாடுகள் மற்றும் மூக்கில் ரணம் (உள்பக்கமாகச் சுரண்டி மூக்கின் உள்சுவர்களை அழித்துவிடுதல்) ஆகியவையும் இரத்தம் வடிதல் பிரச்சனைக்கான காரணங்களில் அடங்கும்.

அறிகுறிகள்
மூக்கில் இரத்தம் வடிதலின் முதல் அறிகுறி உடல் அசதி மற்றும் இதயத்தில் மென்மையான உணர்வு ஏற்படுதல். மூக்கில் இரத்தம் வடிதல் அதிகமாக இருக்கும் போது இந்நிலை ஏற்படும். சிறுநீர் மற்றும் கழிவு வெளியேற்றத்தில் இரத்தம் வருவது மேலும் ஒரு அறிகுறி.

சிகிச்சை
• முதல் சிகிச்சை முறை முக்கின் இரு துவாரங்களையும் ஒருமுறை பிடித்து (கிள்ளினார்போல) விட்டு அவர்களை முன்பக்கம் சாய்ந்தாற் போல அமர வைத்து 5 முதல் பத்து நிமிடம் வரை அப்படியே இருக்கச் சொல்லுங்கள். தலையை பின்புறமாக சாய்க்கக்கூடாது. ஏனென்றால் இரத்தம் மூச்சுக்குழாய் வழியாக சென்று அடைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால் மூச்சு அடைபட்டுப் போகலாம்.

சிகிச்சை
• மூக்கில் இரத்தம் வடிதலை நிறுத்த ஐஸ் கட்டிப் பைகளை மூக்கின் மேல் வைப்பது பயனளிக்காது.
• இரத்தம் வடிவது குறைவாக இருந்தால் காற்றில் ஈரப்பதத்தை அதிகரிப்பதும் மூக்கில் இரத்தம் வடிவதை உடனடியாக நிறுத்தும்.

மூக்கில் இரத்தம் வரவைக்கும் அபாயமான காரணிகள்
எபோலா வைரஸ் ஒரு கொடிய நோய் என்பதோடு இதன் ஒரு முக்கிய அறிகுறி மூக்கில் இரத்தம் வடிவதாகும். லியுகேமியா ஒரு இரத்தம் சார்ந்த குறைபாடு. இது உடம்பில் உள்ள இரத்த செல்களை பாதிக்கிறது. அதனால் மூக்கில் இரத்தம் வடிதல் ஏற்படுகிறது. ஹீமோபிலியா பி எனப்படும் கொடிய பாதிப்பினால் விவரிக்க முடியாத ரணங்களை மூக்கினுள் ஏற்படுத்தும்.

இரத்தம் வடிவதைத் தடுப்பது எப்படி?
புளிப்புச்சுவை உள்ள பழங்களை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் உள்ள ப்ளேவோனாய்டுகள் ரத்தக் குழாய்களை உடைப்பிலிருந்து காத்து இரத்தம் வடிதலைத் தடுக்கிறது.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள்
ஆஸ்பிரின் மற்றும் ஹெபரின் போன்ற மருந்துகள் இரத்தக் குழாய்களை மெலிதாக்கும் பண்புகளை உள்ளடக்கியுள்ளன. அதனால் மூக்கில் ரத்தம் வடிய வாய்ப்பிருக்கிறது. எதுவானாலும் மூக்கில் இரத்தம் வடிந்தால் முதலில் உங்கள் மருத்துவரை நாடுங்கள்.



Click it and Unblock the Notifications
