Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தொப்பையை குறைக்கும் பரிபூரண நவாசனா - தினம் ஒரு யோகா
40 வயதை கடந்ததும் வயிற்றில் தொப்பை லேசாக எட்டிப்ப்பார்க்க தொடங்கும். நேரமில்லை, அது இது என்று சாக்குபோக்கு சொல்லி தொப்பைக்கு நீர் ஊற்றி வளர்த்து விட்டாச்சுன்னு யோசிக்கிறீர்களா? உடற்பயிற்சி அல்லது ஜிம்முக்கு போக முடியலைன்னு வருத்தப்படறீங்களா? அப்போ யோகா உங்கள் சாய்ஸாக இருக்கும். வீட்டில் சில நிமிடங்களில் செய்யும் இந்த யோகாவினால் நீங்கள் நினைத்தபடி வயிற்றிலிருக்கும் தொப்பையை குறைக்கலாம் .

பரிபூரண நவாசனா :
பரிபூரண என்றால் சமஸ்கிருதத்தில் முழுமையான, நவாசனா என்றால் படகு என்று பொருள் தரும். முழுமையான படகு போல் அமர்ந்த நிலையில் செய்யப்படும் இந்த ஆசனத்திற்கு பரிபூரண நவாசனா என்று பெயர் வந்துள்ளது. அடிவயிற்றில் அதிக அழுத்தம் தரப்படுவதால் விரைவில் அங்கிருக்கும் கொழுப்புகள் கரையும்.
செய்முறை :
முதலில் கால்களை நீட்டி அமருங்கள். மூச்சை இழுத்துவிட வேண்டும். கைகளை தரையில் அழுந்த பதியுங்கள். பின்னர் மெதுவாக பாதங்களை தூக்குங்கள்.
கால்கள் வளையக் கூடாது. பேலன்ஸ் இல்லையென்றால் மெதுவாக தொடையை கைகளால் பிடித்துக் கொள்ளலாம். பாத விரல்கள் உங்கள் கண்களின் உயரத்திற்கு சிறிது அதிகமாக இருக்கும்படி தூக்குங்கள்.
மொத்த எடையையும் இப்போது உங்கள் இடுப்பு தாங்கும். முதுகை வளைக்காமல் இருக்க வேண்டும். இப்போது படகு போன்ற நிலையில் நீங்கள் இருப்பீர்கள்.
ஆரம்பத்தில் செய்யும்போது இந்த நிலையில் 10- 20 நொடிகள் இருங்கள். பின்னர் ஒரு நிமிடம் வரை தக்குபிடிக்க முடியும். பின் மெதுவான கால்களை இறக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்.
பலன்கள் :
உங்கள் வயிற்றிற்கும் முதுகிற்கும் பலம் அளிக்கும். சிறு நீரகம், சிறுகுடல் ஆகியவற்றின் செயல்களை ஊக்குவிக்கும். ப்ரோஸ்டேட் சுரப்பியை தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
குறிப்பு :
கழுத்து, முதுகுவலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். கர்ப்பிணிகளும் செய்யக் கூடாது. அதே போல், குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய நோய் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


