Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மன அமைதியைத் தரும் பத்மாசனாவை செய்யுங்கள் - தினம் ஒரு யோகா
வேலைக்கு செல்பவர்களின் பிரச்சனையை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியும். வேலை, வீடு குழந்தைகள், பொருளாதாரம் என இன்றைய காலங்களில் மன அழுத்தத்தில் பாதிக்கப்படாதவர்கள் மிகக் குறைவு.
அத்தனையும் சமாளித்து முன்னேறுவதென்றால் மத்திய தர குடும்பங்களில் சாதரணமல்ல. போட்டி நிறைந்த உலகில் நமக்கு உண்டாகும் மன அழுத்தம் பற்றி சொல்லவே வேண்டாம்.

அதற்காக அப்படியே சோர்ந்து போய்விடக் கூடாது. அதிலிருந்து நம்மை மீட்டெடுப்பதில்தான் நமது வெற்றி இருக்கிறது. அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் உடற்பயிற்சி, வாக்கிங் செல்ல முடியவில்லை என்று நினைக்கிறீர்கள்.
10 நிமிடங்கள் செலவழியுங்கள் வீட்டிலிருந்தே. எப்படி என்றால்...யோகா!. அதிக நேரம் வேண்டாம். நல்ல காற்று, அமைதியான சூழ் நிலையில் அதிகாலையில் எழுந்ததும், இந்த யோகாவை செய்யுங்கள். நாள் முழுவதும் பரபரப்பில்லாமல் செயல்படுவீர்கள். இந்தவித டென்ஷனில்லாமல் நாள் கழியும். முயற்சி செய்து பாருங்களேன்.
பத்மாசனம் :
பத்மாசனம் எளிய மனதிற்கு அமைதி தரும் யோகா. சம்மணத்தில் அமர்ந்து செய்யும். இந்த யோகா, தாமரை வடிவம் போலிருப்பதால் பத்மாசனம் என்று பெயர் சமஸ்கிருதத்தில் பெற்றுள்ளது. எப்படி செய்வது என பார்க்கலாம்.
செய்முறை :
ஒரு விரிப்பில் கால் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள். வலது காலை மடக்கி, இடது தொடை மீது வையுங்கள்.
இப்போது இடது காலை மடக்கி வலது தொடையில் வைக்க வேண்டும்.
இரு கைகளையும் முட்டியின்மேலை வைத்து தியான நிலையில் ஆட்காட்டி மற்றும் கட்டை விரலை மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆழந்து மூச்சை இழுத்து விட வேண்டும். கூனில்லாமல் நிமிர்ந்தபடி முதுகு இருக்க வேண்டும். சில நிமிடங்களில் இந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.
பின்னர் காலை மாற்றி இப்போது இடது காலில் செய்யுங்கள்.
பலன்கள் :
ஜீரணம் நன்றாக நடைபெறும். சுவாசக் குழாய் சீராக இருக்கும். நுரையீரல் சுத்தமாகும். மன அழுத்தம் குறையும். சுத்தமான ஆக்ஸிஜன் மூளைக்கு செல்லும். முதுகுத் தண்டு பலம் பெறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



