Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உடல் பருமனால் இன்னும் என்னென்ன அவதிகளோ?
உடல் பருமனால் இன்னும் எத்தனை பிரச்சனைகள்தான் வரப்போகிறதோ என தெரியவில்லை. உலக அளவில் எத்தனையோ மருத்துவர்கள் கூப்பாடு போட்டாலும் குண்டர்கள் காதில் போட்டுக் கொள்வதாக தெரியவில்லை. காரணம் உடல் பருமனால் இதய நோய், ரத்த அழுத்தம், புற்று நோய், கல்லீரல் பாதிப்பு என ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கிறது அந்த வரிசையில் இப்போது மூளை.

ஆமாம் மூளையிலுள்ள ஒரு வெள்ளைத் திசு குண்டானவர்களுக்கு குறைந்து கொண்டே செல்லுமாம். இதனால் உண்டாகும் பாதிப்புகளை ஆராய்ந்து வருகிறார்கள்.அதுவும் வெள்ளை திசு குறைவது 5 வயதிற்கு பிறகுதான் தெரிய வருகிறது.
சுமார் 50 வயதிலுள்ள உடல்பருமனானவர்களின் மூளையிலுள்ள வெள்ளை திசுவை 60 வயதிலுள்ள ஒல்லியானவர்களின் மூளையுடன் ஒப்பிட்டு பார்த்ததில் இது தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் 50 வயதிற்கு பிறகுதான் மூளையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இது பாதிப்பை ஏற்படுத்துகிறது என தலைமை ஆராய்ச்சியாளர் பால் ஃப்லெட்சர் கூறியிருக்கிறார்.
பொதுவாக வயதாகும்போது மூளையின் அளவு சுருங்கிவிடும். ஆனால் உடல்பருமனானவர்களுக்கு மூளை விரைவிலேயே சுருங்க வாய்ப்புள்ளது
ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனால் மூளையில் உண்டாகும் மாற்றங்களையும், முதுமையையும் தொடர்பு படுத்தி ஆய்வை மேற்கொண்டனர்.
சுமார் 20- 87 வயது வரை உள்ள 473 பேர்இடம் இந்த ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வை இருவகையாக பிரித்துக் கொண்டனர். ஒல்லியானவர்கள்- குண்டானவர்கள் விகிதத்தில் ஒரு பிரிவு. இதில் ஒல்லியானவர்களின் மூளையை விட குண்டானவர்களின் மூளையிலுள்ள வெள்ளைத் திசுவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதோடு இந்த வெள்ளை திசுவின் அடர்த்தியை கணக்கிட்டு மூளையின் முதிர்ச்சியையும் ஆராய்ந்தனர். இதில் 50 வயதுள்ளவர்களின் மூளை 60 வயதானவர்களின் மூளையை போல் முதுமை அடைகிறது என கூறியிருக்கின்றனர்.
உடல் பருமனானவர்கள் இளைத்தால், இந்த வெள்ளைத் திசுவில் மாற்றங்கள் நடக்குமா என சரியாக தெரியாததால் அதனைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆய்வு பற்றிய முழுத் தகவல் ஜர்னல் ஆஃப் நியூரோபயாலஜி என்னும் இதழ் வெளியிட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


