எப்போதுமே நல்ல மூடில் இருக்கும் பெண்களின் 9 இரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சிலரை கண்டால் பொறாமையாக இருக்கும். எந்த துன்பம் நிகழ்ந்தாலும், எத்தனை முறை தோல்வியை தழுவினாலும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள், நல்ல மூடில் இயங்கி வருவார்கள்.

அவர்களை கண்டு, "எப்படி அந்த நபர் இப்படி இருக்கிறார், நம்மால் முடியவில்லையே" என நீங்களே உங்கள் வாழ்க்கையின் ஏதாவது தருணத்தில் எண்ணியிருக்கலாம்.

ஆண்கள் அளவிற்கு பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் இல்லாமல் இருப்பதற்கான 10 காரணங்கள்!

இதற்கு காரணம் அவரவர் பழக்கங்களும், சூழ்நிலைகளை கையாளும் மனப்பக்குவமும் தான். தோல்வியை எண்ணி அழுது புலம்பி என பயன். அடுத்தது என்ன, நாம் செய்த தவறென்ன என்று அறிந்து. அவற்றை திருத்திக் கொண்டால் தானே அடுத்த முறையாவது வெற்றிப்பெற முடியும்.

பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியலாம்!

இதுபோன்ற சில பழக்கங்களை உண்டாக்கிக் கொண்டால் நீங்களும் கூட எப்போதுமே நல்ல மூடில் இருக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரகசியம் 1

இரகசியம் 1

நன்றியுணர்வு

எப்போதுமே நல்ல மூடில் இருக்கும் பெண்கள், நன்றியுணர்வுடன் இருப்பார்கள். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், இடையூறுகளுக்கு மத்தியிலும், அவர்கள் செய்யும் வேலைகளுக்கு தனக்கு தானேவும், அவர்களுக்கு உதவும் நபர்களுக்கும் நன்றி கூறுவார்கள். இந்த நன்றி கூறும் பழக்கம் உங்கள் மனதை இலகுவாக உணர வைக்கிறது.

இரகசியம் 2

இரகசியம் 2

உடற்பயிற்சி

தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வார்கள். இது அவர்களது உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்திக் கொள்ள உதவுகிறது. மேலும், உடல் வடிவை பேணிக்காக்கும் பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது, இது அவர்களது மனநிலையையும் மேலோங்க உதவுகிறது.

இரகசியம் 3

இரகசியம் 3

உறக்கம்

சில பெண்கள் எப்போதும் நல்ல மூடில் இருப்பதற்கு காரணம் அவர்கள் போதுமான அளவு நல்ல உறக்கம் பெறுவது தான். ஏன், சில சினிமா நாயகிகள் கூட தான் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க நல்ல உறக்கம் தான் காரணம் என கூறியிருக்கிறார்கள். நல்ல உறக்கம், நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம்.

இரகசியம் 4

இரகசியம் 4

இனிப்பு

அதிகமான இனிப்பு உடலின் செயற்திறனை குறைக்கவல்லது. எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் பெண்கள் அதிகமாக இனிப்புகள் உட்கொள்வதில்லை.

இரகசியம் 5

இரகசியம் 5

சுற்றுப்புறச் சூழல்

சில பெண்கள் எப்போதும் நல்ல மூடில் இருப்பதற்கான மற்றுமொரு காரணம் அவர்கள் இயற்கையோடு ஒன்றி இருப்பது தான். ஏ.சி-யிலேயே இருப்பதற்கு பதிலாக காற்றாட நடைப்பயிற்சி செய்யலாம். இயற்கையோடு இணைந்து இருக்கலாம்.

இரகசியம் 6

இரகசியம் 6

செல்ல பிராணி

ஒருவரது மனநிலை நன்றாக இருக்கிறது எனில், அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்விக்கும் நபர்கள் எப்போதும் அவருடன் இருக்க வேண்டும். பெண்கள் அவர்களது மகிழ்ச்சிக்கும், கொஞ்சி விளையாடுவதற்கும் செல்ல பிராணியை தேர்வு செய்கிறார்கள். இது அவர்களது மனநிலை மேலோங்க மற்றும் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.

இரகசியம் 7

இரகசியம் 7

தியானம்

தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். இது உங்கள் மனம் அமைதியான நிலையடைய உதவும். மேலும், அலாரம் இல்லாமல் நீங்கள் அதிகாலை எழவும் இது உதவும்.

இரகசியம் 8

இரகசியம் 8

முன்னிலைப்படுத்திக் கொள்வது

உங்களை மற்றவர்கள் தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்கள் அந்த வேலை அல்லது செயலை செய்ய தகுதியானவர் என்று அறிந்தால் நீங்களே உங்கள் பெயரை முன்மொழியலாம். இந்த பண்பு இருக்கும் பெண்கள் எப்போதும் நல்ல மூடில் இருப்பார்கள்.

இரகசியம் 9

இரகசியம் 9

பிடித்ததை செய்வது

தனக்கு அந்த செயலில் ஈடுபட பிடித்திருந்தால் அவர் என்ன எண்ணுவார், இந்த சமூகம் என்ன நினைக்கும் என்பதற்கெல்லாம் பயப்படாமல், தைரியாமாக துணிந்து அந்த செயலில் ஈடுபடும் பெண்கள் எப்போதும் நல்ல மூடில் தான் இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nine Secrets Of Women Who Are Always In A Good Mood

Nine Secrets Of Women Who Are Always In A Good Mood, read here in tamil.
Story first published: Wednesday, April 27, 2016, 10:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter